எது கருத்துச் சுதந்திரம்

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, இஸ்லாத்தையும், திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்யக்கோரி முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்ததையடுத்து அப்படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டது.

இதனால் கருத்துச் சுதந்திரத்திற்கு தடை போடலாமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?:

அறிவுப்பூர்வமான வாதங்கள் மூலம் ஒரு கருத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ வாதம் செய்வது தான் கருத்துச் சுதந்திரமாகும். ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு சமுதாயத்தைப் பற்றியோ, ஒரு மதத்தைப் பற்றியோ அவதூறு சொல்வதும், பொய்களைக் கட்டவிழ்த்து விடுவதும் கருத்து சுதந்திரம் ஆகாது.

அது போல் ஒரு பொருளைச் சந்தைப்படுத்தும் போது அப்பொருள் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றால் அதற்குத் தடை போடுவது கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதில் அடங்காது.

பாராதி ராஜாவின் கருத்து சுதந்திரம்:

முதலில் பாரதி ராஜா என்பவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையை எடுத்துக் கொள்வோம். இவர் கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசிக்கொண்டு முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விஸ்வரூபம் படம் என்பது தீவிரவாதிகளை அடையாளம் காட்டக்கூடிய ஒரு திரைப்படம். அந்தப் படத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் முஸ்லிம்கள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற நிலையை எடுத்து, தங்களைத் தாங்களே தீவிரவாதிகளாக அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்பது தான் பாரதி ராஜா வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம்.

இவர் தனது கூற்றில் உண்மையாளராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? யார் என்ன கருத்து சொன்னாலும் அது கருத்து சுதந்திரம் என்று சொல்லி வரவேற்றிருக்க வேண்டும். அப்படி இவரும் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களும் நடந்து கொண்டதுண்டா?

குமுதம் வார இதழுக்கு இல்லையா கருத்து சொல்லும் சுதந்திரம்?:

குமுதம் வார இதழில், ஒரு நடிகையின் கதை என்ற தலைப்பிட்டு நடிகைகளின் விபச்சார வாழ்க்கையை ஆதாரத்தோடு ஒரு நடிகை எழுத அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குமுதம் அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்கள் தான் இந்தக் கருத்து சுதந்திரப் பேர்வழிகள்.

அதோடு மட்டுமல்லாமல் இந்தத் தொடர் வெளியானால் தங்களது இருட்டு வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்று சொல்லி அந்தத் தொடரையே நிறுத்தச் செய்தவர்கள் தான் கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகின்றார்கள்.

தினமலருக்கு கருத்து சுதந்திரம் வழங்கமாட்டீர்களா?:

மேலும், புவனேஸ்வரி என்ற நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட போது,இன்னும் பல நடிகைகள் விபச்சாரத் தொழில் செய்கின்றார்களே, அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று பேட்டியளித்தார்.

இந்தப் பேட்டியை தினமலர் நாளேடு வெளியிட்டது. இதற்காக தினமலர் அலுவலகத்தைத் தாக்கினீர்களே! தினமலரைக் கொளுத்தினீர்களே! செய்தி ஆசிரியர் லெனினை உங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி கைது செய்ய வைத்தீர்களே! அப்போது எங்கே போனது இந்தக் கருத்துச் சுதந்திரம்?

இந்த இடத்தில் பாரதி ராஜாவிடத்தில் ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகின்றோம். தீவிரவாதிகளாக முஸ்லிம் சமுதாயத்தை பொய்யாக சித்தரித்ததைக் கண்டித்து முஸ்லிம்கள் குரல் எழுப்புவதைக் கொச்சைப்படுத்தி, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற நிலையை எடுத்து, தங்களைத் தாங்களே தீவிரவாதிகளாக அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்கும் பாரதி ராஜா அவர்களே! நடிகைகளின் விபச்சார வேலைகளை அம்பலப்படுத்திய கதை குமுதம் இதழில் வரக்கூடாது என்று தாங்கள் கோரிக்கை வைத்தீர்களே! அப்படியானால் உங்கள் வீட்டுப் பெண்கள் அந்த வேலையைச் செய்ததால் தான் இந்த நிலையை எடுத்தீர்களா?

நடிகைகளுக்கு ஆதரவான நிலையை எடுத்து எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று உங்களை நீங்களே சொல்லிக் கொண்டீர்களா?.

விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டது கமலின் இரத்தம் குடிக்கும் வேலை என்றால், டாம் 999 படத்தை தமிழகத்தில் தடை செய்ய வைத்தீர்களே! அது அந்தப் படத்தை பணம் போட்டு எடுத்தவனின் இரத்தத்தைக் குடித்ததாக ஆகாதா?

ராமதாஸின் கருத்து சுதந்திரம்:

விஸ்வரூபம் பட விஷயத்தில் ஐயா மருத்துவக் குடிதாங்கி ராமதாஸ் அவர்களும் இதே கருத்து சுதந்திரத்தைப் பற்றி சரடு விட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் பாபா படத்தை ஓட விடமாட்டோம் என்று சொல்லி பாபா படம் ஓடிய தியேட்டர்களையெல்லாம் அடித்து நொறுக்கி, படப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய  மருத்துவக் குடிதாங்கி அவர்களா கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுவது?

தா.பாண்டியனின் கருத்து சுதந்திரம் பேணும் லட்சணம்:

கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனும் இதே கருத்தை விஸ்வரூபம் பட விஷயத்தில் வெளியிட்டுள்ளார்.

மதுரை ஆதீனத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஆகாதா?:

பெண்கள் பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாப்புப் பெற பர்தா அணிய வேண்டும் என்று சொன்ன மதுரை ஆதீனத்தின் மடத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பு ஆதீனத்தை கருத்து சொல்லவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தி இரு மாதம் கூட முடிவதற்குள் மறுபடியும் இவர்கள் கருத்து சுதந்திரத்தைப் பற்றி வாய் திறக்கலாமா?

கருத்து சொன்னதற்காக ஆதீன மடத்தை முற்றுகையிட்ட இவர்கள் தான் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி பேசுகின்றார்களாம்.

வரதராஜன் மரணத்தில் சந்தேகம் எழுகின்றது. அது கொலையாக இருக்கலாம் என்று யூகம் எழுகின்றது என்று செய்தி வாசித்த மக்கள் தொலைக்காட்சியை அடித்து நொறுக்கிய கம்யூனிஸ்ட்கள் தான் கருத்து சுதந்திரம் பற்றி பேசுகின்றார்களா?

வால்மார்ட் என்ற வெளிநாட்டுக் கடையை அடித்து நொறுக்கியவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் ஒரு கேடா?

மனுஷ்ய புத்திரனின் கருத்து சுதந்திரம்:

உன்னைப் போல ஒருவன் படத்தில் கமல் வீசிய நோட்டிற்கு ஏற்ப பாட்டெழுதி, ஸ்ருதி கமல்ஹாசனின் ஆளுமையைப் போற்றிப் புகழ்ந்தது தான் மனுஷ்ய புத்திரன் கருத்து சுதந்திரமாம்.

பி.ஜே.பி.யின் கருத்து சுதந்திரம்:

இஸ்லாமியர்களைக் கொச்சைப்படுத்துவது போல கமல் படம் எடுத்துள்ளதால் இதற்கு முன்பாக இந்துக் கடவுள்களை கேவலப்படுத்தி படமும், பாட்டும் எழுதிய கமல்ஹாசனின் மலரும் நினைவுகளை மறந்துவிட்ட சங்பரிவாரக் கும்பல்கள் அவருக்கு ஆதரவாக தற்போது கருத்து சுதந்திரத்தைப் பற்றி காட்டுக்கத்தல் போட்டுவருகின்றன.

அப்படியானால் சங்பரிவாரக் கும்பல் தான் காவித் தீவிரவாதிகள். அவர்கள் தான் சுதந்திர இந்தியாவில் அனைத்து குண்டுகளையும் வெடிக்கச் செய்த புண்ணியவான்கள் என்பதை ஆதாரத்தோடு பட்டியல் போட்டாரே உள்துறை அமைச்சர் ஷிண்டே. அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது ஏன்?

விஸ்வரூபத்திற்கு வரவேற்பளிப்பதைப் போல, ஷிண்டேவைப் பாராட்டி போஸ்டர் அடித்து ஒட்டி பாராட்டு மழை பொழியச் செய்து கருத்து சுதந்திரத்தை பா.ஜ.க.வும், சங்பரிவாரக் கும்பலும் நிலைநாட்ட வேண்டியது தானே!

ஃபயர் திரைப்படம் சூட்டிங் நடந்த போது அதைத் தடுத்து வன்முறை வெறியாட்டம் போட்ட பாஜக கருத்து சுதந்திரம் பற்றி பேச அருகதை உண்டா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் விளையாட வந்த போது அந்த மைதானத்தில் பாம்புகளை விட்டு, மைதானத்தைக் கடப்பாரையால் தோண்டி கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டியவர்கள் தான் தற்போது கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகின்றார்கள்.

காதலர் தினங்களில் கட்டாய தாலி கட்டச் சொல்லி சித்திரவதை செய்யும் இவர்களுக்கு கருத்து சுதந்திரம் ஒரு கேடா?

ஃபேஸ்புக்கில் செய்தி வெளியிட்ட பெண்களை தாக்கிய தீவிரவாதிகளுக்கு கருத்துச் சுதந்திரம் பற்றி பேச அருகதை உள்ளதா?

காங்கிரஸும் கருத்து சுதந்திரம் பேசுகின்றார்களாம்:

காங்கிரஸும் இந்த விஷயத்தில் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டுகின்றது. குற்றப்பத்திரிக்கை என்ற படத்தை தடை செய்த காங்கிரஸ் விஸ்வரூபத்திற்கு தடை நீக்கச் சொல்லி பேசலாமா?

கலைஞர் கதை வசனம் எழுதிய பராசக்தியைத் தடை செய்த காங்கிரஸ் தான் சென்சார்போர்டு பற்றி பேசுகின்றது?

ஆக மொத்தத்தில் இவர்கள் எல்லோருமே கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தனக்கு ஒரு இழப்பு என்றால் அந்த வாதத்தைப் பயன்படுத்தி அதை நிலைநாட்டப் பார்க்கிறார்களே தவிர இவர்களின் உண்மையான கொள்கை அதுவல்ல.

உண்மையான கருத்துக்களைச் சொல்ல வழியுண்டா? கருத்து சுதந்திரம் உண்டா?:

மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற சங்பரிவாரக் கும்பல் தலைவன் கோட்சேவின் உண்மை வாழ்க்கை வரலாறை படம் எடுப்போமா?

குஜராத்தில் நரபலி மோடியின் நரவேட்டையை படமாக எடுத்தால் அங்கீகரிக்குமா சங்பரிவாரக் கும்பல்?

மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மக்கா மசூதி குண்டு வெடிப்புகளைப் படமாக்கினால் பாராட்டு விழா நடத்துவார்களா இந்த பரிவாரக் கூட்டங்கள்?

அரசியல்வாதிகளின் உண்மை முகங்களை வெட்டவெளிச்சமாக்கி படம் எடுத்தால் விட்டுவைக்குமா இந்த அயோக்கிய கும்பல்?

மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் இல்லையென்று பதில் வந்தால் பிறகெங்கே உள்ளது கருத்துச் சுதந்திரம்?

இஸ்லாம் சொல்லும் கருத்து சுதந்திரம்:

பேசினால் நல்லதையே பேசுங்கள்; இல்லாவிட்டால் வாய்மூடி இருங்கள். இது தான் இஸ்லாம் எங்களுக்குக் கற்றுத் தந்த கருத்துச் சுதந்திரம்.

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். இது தான் இஸ்லாம் கற்றுத்தரும் கருத்து சுதந்திரம்.

இனியாவது கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெட்டிச் சித்தாந்தம் பேசாமல், உண்மையான, நேர்மையான, சரியான கருத்துக்களைச் சொல்ல வழிவிட்டு கருத்து சுதந்திரத்தைப் பேண அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்!

திருக்குர்ஆன் 2:42

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6018

31.01.2013. 9:09 AM

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...

நாமே தீர்மானிக்கலாமா?

நாமே தீர்மானிக்கலாமா? பிறை சம்பந்தமான ஆதாரங்களில் நாமே தீர்மானிக்கலாம் என்ற கருத்திலமைந்த ஹதீஸும் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது. அந்த ஹதீஸ் இது தான். سنن الترمذي 697 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: ...

அரஃபா நோன்பு

அரஃபா நோன்பு சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா ...

கிரகணத் தொழுகை

கிரகணத் தொழுகை தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. صحيح البخاري 1042 – حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، ...

நீட்டப்படும் மாதங்கள் 

நீட்டப்படும் மாதங்கள் பிறையைக் கண்களால் பார்த்துத் தான் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை மற்றொரு ஹதீசும் கூறுகிறது. அந்த ஹதீஸ் இது தான். صحيح مسلم 2582 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ ...

மேக மூட்டத்தின் போது…

மேக மூட்டத்தின் போது… பிறை பார்த்தல் குறித்த அடிப்படையான ஆதாரங்களாக சில ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்தில் அமைந்தவை என்றாலும் சின்னச் சின்ன வேறுபாடுகள் அவற்றுக்கிடையே உள்ளதால் அவற்றை ...