வியாபாரம்
வியாபாரத்தில் ஏமாற்றுதல் இல்லை
யாரையும் எந்த விதத்திலும் ஏமாற்றக் கூடாது என்பது வியாபாரத்துக்கு இஸ்லாம் கூறும் முக்கியமான விதியாகும். வாங்குபவராக இருந்தாலும் விற்பவராக இருந்தாலும் நாணயத்தையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால் மற்ற சந்தர்ப்பங்களில் யாரையும் ஏமாற்றத் துணியாதவர்கள்கூட வியாபாரத்தில் மக்களை ஏமாற்றுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது போல் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.
அளவு நிறுவையில் குறைவு செய்தல், ஒரு பொருளைக் காட்டி இன்னொரு பொருளை விற்றல், போலியான பொருள்களை விற்றல், ஒரு பொருளில் இல்லாத தரத்தை இருப்பதாகக் கூறுதல் மற்றும் எண்ணற்ற ஏமாற்றும் முறைகளை வியாபாரிகள் சர்வசாதாரணமாகக் கடைப்பிடிக்கின்றனர்.
இந்தப் போக்கை அல்லாஹ்வும் கண்டித்துள்ளான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் தக்க சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 7:85
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின் வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்” என்றார். “என் சமுதாயமே! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!”
திருக்குர்ஆன் 11:84,85
அளக்கும்போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு.
திருக்குர்ஆன் 17:35
மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!
திருக்குர்ஆன் 26:183
அனாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள்! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவேற்றுங்கள்! எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். உறவினராகவே இருந்தாலும் பேசும்போது நீதியையே பேசுங்கள்! அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! நீங்கள் படிப்பினை பெறுவதற்காக அவன் இதையே உங்களுக்கு வலியுறுத்துகிறான்.
திருக்குர்ஆன் 6:152
அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடுதான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.
திருக்குர்ஆன் 83:1-6
صحيح مسلم
3881 – وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ وَيَحْيَى بْنُ سَعِيدٍ وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ ح وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ حَدَّثَنِى أَبُو الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنْ بَيْعِ الْحَصَاةِ وَعَنْ بَيْعِ الْغَرَرِ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மோசடி வியாபாரத்தை தடை செய்தார்கள்.
நூல் : முஸ்லிம் 3881
இது வியாபாரத்தில் இஸ்லாம் வகுத்துள்ள முக்கியமான விதியாகும். எந்த வியாபாரமாக இருந்தாலும் விற்பவர் வாங்குபவரை ஏமாற்றக் கூடாது. வாங்குபவர் விற்பவரை ஏமாற்றக் கூடாது.
தனக்குச் சொந்தமாக இல்லாததை விற்பது, தண்ணீரில் உள்ள மீன்களை விலை பேசுவது, கறவை மாட்டின் மடியில் உள்ள பாலைக் கறக்காமல் மடியில் வைத்தே விற்பது, மரத்தில் இல்லாத இனிமேல் உருவாகக் கூடிய காய்களை விற்பது, கால்நடைகளின் வயிற்றில் உள்ள குட்டியை விற்பது, மொத்தமாக பொருட்களைக் காட்டி இதில் ஏதோ ஒன்றை இந்த விலைக்கு தருவேன் எனக் கூறி விற்பது போன்றவை ஏமாற்றும் வியாபரங்களாகும்.
மோசடி வியாபாரத்தைப் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தது போல் அன்று நடைமுறையில் இருந்த மோசடி கலந்த வியாபாரங்களைக் குறிப்பாகவும் தடை செய்துள்ளனர்.
அறியாமைக் காலத்து மோசடி வியாபாரங்கள்
இந்தக் கல் எவ்வளவு தொலைவில் விழுகிறதோ அவ்வளவு நிலத்தை இன்ன விலைக்கு விற்கிறேன் என்றும் இந்தக் கல் எந்தப் பொருளின் மீது விழுகிறதோ அந்தப் பொருளின் விலை இவ்வளவு என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சிலர் வியாபாரம் செய்து வந்தனர். இதில் மோசடி உள்ளதால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர்.
صحيح البخاري
2144 – حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، أَنَّ أَبَا سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنِ المُنَابَذَةِ»، وَهِيَ طَرْحُ الرَّجُلِ ثَوْبَهُ بِالْبَيْعِ إِلَى الرَّجُلِ قَبْلَ أَنْ يُقَلِّبَهُ، أَوْ يَنْظُرَ إِلَيْهِ «وَنَهَى عَنِ المُلاَمَسَةِ»، وَالمُلاَمَسَةُ: لَمْسُ الثَّوْبِ لاَ يُنْظَرُ إِلَيْهِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முனாபதா வியாபாரத்தைத் தடை செய்தார்கள்! முனாபதா என்பது, ஒருவர் தமது துணியை, வாங்குபவர் விரித்துப் பார்ப்பதற்கு முன் அதை வாங்குபவரை நோக்கி எறிந்து (விட்டால் அதை அவர் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிபந்தனையுடன்) அவரிடம் விற்பதாகும்! மேலும் முலாமஸா எனும் வியாபாரத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்! முலாமஸா என்பது கண்ணால் பார்க்காமல் கையால் தொட்டவுடன் வியாபாரம் உறுதியாகிவிடும் என்ற நடைமுறையாகும்.
நூல் : புகாரி 2144
காயாக இருந்தாலும் கனியாக இருந்தாலும் பிஞ்சாக இருந்தாலும் அதை உடனடியாக அந்த நிலையில் விற்பதில் குற்றமில்லை. இதில் மோசடிக்கோ ஏமாற்றுதலுக்கோ இடமில்லை.
ஆனால் காயாக இருப்பதைக் காட்டி காயின் விலைக்கு விற்காமல் இது கனியாகும்போது இன்ன விலைக்கு நான் விற்கிறேன் என்று விலை பேசி பணத்தைப் பெற்றுக் கொள்வதும், பிஞ்சாக இருப்பதைக் காட்டி இது காயாக ஆகும்போது இன்ன விலை என்று கூறி முன் கூட்டியே பணம் பெற்றுக் கொள்வதும் மார்க்கத்தில் கூடாத ஒன்றாகும்.
இது போன்ற வியாபாரங்கள் முஸாபனா என்ற பெயரில் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்து வந்தது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
மரத்தில் உள்ள பழங்களைக் காட்டி இதில் 100 கிலோ கிடைக்கும். இது பழமான உடன் நீ எடுத்துக் கொள். இப்போது எனக்கு 50 கிலோ கொடு என்று ஒருவர் மற்றொருவரிடம் கேட்டால் இது கூடாது. ஏனெனில் அவர் சொன்னதைப் போன்று 100 கிலோ கிடைத்தால் தவறில்லை. அப்படி இல்லாமல் மரத்தில் 90 கிலோ, அல்லது 80 கிலோ கிடைத்தால் மரத்தில் உள்ள பொருளை வாங்கியவர் பாதிக்கப்படுகிறார். அப்படி மரத்தில் 100 கிலோவிற்கு அதிகமாக இருந்தால் விற்றவர் பாதிக்கப்படுகிறார்.
صحيح البخاري
2185 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: ” أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ المُزَابَنَةِ، وَالمُزَابَنَةُ: اشْتِرَاءُ الثَّمَرِ بِالتَّمْرِ كَيْلًا، وَبَيْعُ الكَرْمِ بِالزَّبِيبِ كَيْلًا “
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடைசெய்தார்கள்! முஸாபனா என்பது மரத்திலுள்ள பேரீச்சங்கனிகளை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு முகத்தலளவையில் விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு முகத்தலளவையில் விற்பதுமாகும்!
நூல் : புகாரி 2185
صحيح البخاري
2194 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، نَهَى البَائِعَ وَالمُبْتَاعَ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும்.
நூல் : புகாரி 2194
صحيح البخاري
2197 – حَدَّثَنِي عَلِيُّ بْنُ الهَيْثَمِ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ الرَّازِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، وَعَنِ النَّخْلِ حَتَّى يَزْهُوَ»، قِيلَ: وَمَا يَزْهُو؟ قَالَ: «يَحْمَارُّ أَوْ يَصْفَارُّ»
ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலுள்ள கனிகளை விற்பதற்கும், மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை பேரீச்சமரத்தை விற்பதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்று அனஸ் (ரலி) கூறினார்கள். பக்குவம் அடைவது என்றால் என்ன? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது என்று விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 2197
மற்றொரு அறிவிப்பில்
صحيح البخاري
2208 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ ثَمَرِ التَّمْرِ حَتَّى يَزْهُوَ»، فَقُلْنَا لِأَنَسٍ: مَا زَهْوُهَا؟ قَالَ: «تَحْمَرُّ وَتَصْفَرُّ، أَرَأَيْتَ إِنْ مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ بِمَ تَسْتَحِلُّ مَالَ أَخِيكَ»
அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால் உம் சகோதரரின் பொருளை எந்த அடிப்படையில் நீர் ஹலாலாகக் கருதுவீர் என்றும் கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது
நூல் : புகாரி 2208
பொதுவாக எந்த வியாபாரத்தில் விற்பவரோ வாங்குபவரோ ஏமாற்றப்படுகிறாரோ, அல்லது இருவரில் ஒருவர் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதோ அது போன்ற அனைத்து வியாபாரங்களும் தடுக்கப்பட்டவை என்பதுதான் இஸ்லாமிய வணிகத்தின் அடிப்படையாகும். மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.
இதை நாம் புரிந்து கொண்டால் நமது காலத்தில் உருவாகியுள்ள பல்வேறு வணிகமுறைகளில் அனுமதிக்கப்பட்டதையும் தடுக்கப்பட்டதையும் நாமாகவே அறிந்து கொள்ளலாம்.
குறைகளை வெளிப்படுத்த வேண்டும்
صحيح البخاري
2079 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ صَالِحٍ أَبِي الخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الحَارِثِ، رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، – أَوْ قَالَ: حَتَّى يَتَفَرَّقَا – فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا “
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!
நூல் : புகாரி 2079
سنن ابن ماجه
2246 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدّثَنَا أَبِي، سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَقُولُ: “الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، ولَا يَحِلُّ لِمُسْلِمٍ بَاعَ مِنْ أَخِيهِ بَيْعًا فِيهِ عَيْبٌ، إِلَّا بَيَّنَهُ لَهُ”
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு சகோதரன் ஆவான். குறையுடைய பொருளை விற்கும்போது அதனைத் தெளிவுபடுத்தாமல் விற்பது ஒரு முஸ்லிமிற்கு ஹலால் இல்லை.
நூல் : இப்னுமாஜா 2237
صحيح مسلم
295 – وَحَدَّثَنِى يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ – قَالَ أَخْبَرَنِى الْعَلاَءُ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ. أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلاً فَقَالَ « مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ ». قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ « أَفَلاَ جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَىْ يَرَاهُ النَّاسُ مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّى ».
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் உணவு (தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அவர்கள், “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 295
கால்நடைகளை விற்பவர், பாலைக் கறக்காமல் கனத்த மடியுடையதாகக் கால்நடைகளைக் காட்டி விற்பனை செய்வது கூடாது.
صحيح البخاري
2148 – حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لاَ تُصَرُّوا الإِبِلَ وَالغَنَمَ، فَمَنِ ابْتَاعَهَا بَعْدُ فَإِنَّهُ بِخَيْرِ النَّظَرَيْنِ بَعْدَ أَنْ يَحْتَلِبَهَا: إِنْ شَاءَ أَمْسَكَ، وَإِنْ شَاءَ رَدَّهَا وَصَاعَ تَمْرٍ ” وَيُذْكَرُ عَنْ أَبِي صَالِحٍ، وَمُجَاهِدٍ، وَالوَلِيدِ بْنِ رَبَاحٍ، وَمُوسَى بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَاعَ تَمْرٍ»، وَقَالَ بَعْضُهُمْ عَنْ ابْنِ سِيرِينَ: «صَاعًا مِنْ طَعَامٍ، وَهُوَ بِالخِيَارِ ثَلاَثًا»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒட்டகம், ஆடு ஆகியவற்றை (அவற்றின் பாலைக் கறக்காமல் விட்டுவைத்திருந்து) மடி கனக்கச் செய்யாதீர்கள்! மடி கனக்கச் செய்த இத்தகைய பிராணிகளை வாங்கியவர் விரும்பினால் பால் கறந்து பார்த்து அதை வைத்துக் கொள்ளலாம்! விரும்பாவிட்டால் ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்துடன் அதை விற்றவரிடமே திருப்பிக் கொடுத்து விடலாம்! இந்த இரண்டில் எதைச் செய்வதற்கும் அவருக்கு அனுமதி உண்டு!
நூல் : புகாரி 2148, 2150
صحيح مسلم
3908 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَعْقُوبُ – يَعْنِى ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِىَّ – عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنِ ابْتَاعَ شَاةً مُصَرَّاةً فَهُوَ فِيهَا بِالْخِيَارِ ثَلاَثَةَ أَيَّامٍ إِنْ شَاءَ أَمْسَكَهَا وَإِنْ شَاءَ رَدَّهَا وَرَدَّ مَعَهَا صَاعًا مِنْ تَمْرٍ ».
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவருக்கு மூன்று நாட்கள் விருப்ப உரிமை உண்டு. அதைத் திருப்பிக் கொடுப்பதானால், ஒரு ஸாஉ உணவுப் பொருளுடன் அதைத் திருப்பிக் கொடுக்கட்டும். (உணவு என்பது) கோதுமையாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. (பேரீச்சம் பழமாகக்கூட இருக்கலாம்.)
நூல் : முஸ்லிம் 3908
இல்லாததை விற்கக் கூடாது
தனது கட்டுப்பாட்டில் இல்லாதவற்றையும், தனது உடைமையல்லாதவற்றையும், அளவோ தரமோ தன்மையோ தெரியாதவற்றையும், பிறக்காத உயிரினத்தையும் விற்பது கூடாது.
صحيح البخاري
2143 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «نَهَى عَنْ بَيْعِ حَبَلِ الحَبَلَةِ»، وَكَانَ بَيْعًا يَتَبَايَعُهُ أَهْلُ الجَاهِلِيَّةِ، كَانَ الرَّجُلُ يَبْتَاعُ الجَزُورَ إِلَى أَنْ تُنْتَجَ النَّاقَةُ، ثُمَّ تُنْتَجُ الَّتِي فِي بَطْنِهَا
பிறக்காத உயிரினத்தை விற்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்; அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!) என்று செய்யப்படும் வியாபாரமே இது!
நூல் : புகாரி 2143
வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம்?
வியாபாரத்தில் இவ்வளவு தான் இலாபம் வைக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் மார்க்கத்தில் கூறப்படவில்லை.
விற்பவரும், வாங்குபவரும் பொருந்திக் கொள்வது தான் வியாபாரம். விற்பவர் எவ்வளவு இலாபம் வைத்திருந்தாலும் அதை வாங்குபவர் பொருந்திக் கொண்டால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வியாபாரம் தான்.
நமது கடையில் விலை அதிகம் என்று ஒருவருக்குத் தெரிந்தால் நிச்சயம் அவர் நம்மிடம் வாங்க மாட்டார். அதே போல் பக்கத்துக் கடைக்காரரின் விலையை விடக் குறைவாகக் கொடுக்க வேண்டும் என்று கருதி இலாபம் இல்லாமல் நாமும் விற்பனை செய்ய மாட்டோம்.
صحيح البخاري
2079 – حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن قتادة، عن صالح أبي الخليل، عن عبد الله بن الحارث، رفعه إلى حكيم بن حزام رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ” البيعان بالخيار ما لم يتفرقا، – أو قال: حتى يتفرقا – فإن صدقا وبينا بورك لهما في بيعهما، وإن كتما وكذبا محقت بركة بيعهما “
‘விற்பவரும் வாங்குபவரும் பிரியாமல் இருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விருவரும் உண்மை பேசி, குறைகளைத் தெளிவுபடுத்தி இருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும். குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2079
வியாபாரி கூறும் விலையை வாங்குபவர் ஏற்றுக் கொண்டால் பொருளை வாங்கலாம். அந்த விலையில் உடன்பாடில்லை என்றால் அந்தப் பொருளை வாங்காமல் விட்டு விடலாம். இதில் இவ்வளவு தான் விலை வைக்க வேண்டும் என்று மார்க்கம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. ஆனால் அதே சமயம் மேற்கண்ட ஹதீஸில் கூறப்படுவது போல், குறைகளை மறைக்காமல், பொய் சொல்லாமல் விற்க வேண்டும்.
வியாபாரத்தில் சத்தியம் செய்யக் கூடாது
வியாபாரிகள் சொல்வதை பெரும்பாலும் நுகர்வோர் நம்புவதில்லை. அதிக லாபம் அடைவதற்காக வியாபாரி பொய் சொல்வதாகவே மக்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாக வியாபாரிகள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தாங்கள் உண்மை சொல்வதாக நம்ப வைப்பதைக் காண்கிறோம்.
தாங்கள் சொல்வது பொய்யாக இருந்தும் சர்வசாதாரணமாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அல்லாஹ்வின் பெயரை தங்கள் சுயநலனுக்கு பயன்படுத்துவது மாபெரும் குற்றமாகும்.
صحيح البخاري
2088 – حدثنا عمرو بن محمد، حدثنا هشيم، أخبرنا العوام، عن إبراهيم بن عبد الرحمن، عن عبد الله بن أبي أوفى رضي الله عنه: «أن رجلا أقام سلعة وهو في السوق، فحلف بالله لقد أعطى بها ما لم يعط ليوقع فيها رجلا من المسلمين» فنزلت: {إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا} [آل عمران: 77] الآية
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் கடைவீதியில் விற்பனைப் பொருட்களைப் பரப்பினார்; அடக்கவிலை பற்றி இல்லாத்தைக் கூறி அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார். முஸ்லிம்களைக் கவர்(ந்து அவர்களிடம் தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது யார் தங்களுடைய உடன்படிக்கை மூலமும் சத்தியங்களின் மூலமும் அற்பக் கிரயத்தைப் பெற்றுக் கொள்கிறாரோ….என்னும் (3:77) இறைவசனம் இறங்கியது!
நூல் : புகாரி 2088, 2675
பொருளை விற்கும்போது அப்பொருளுக்கான விலையை வியாபாரி தீர்மாணித்துக் கொள்ளலாம். ஆனால் அடக்கவிலையே இவ்வளவுதான் என்று கூறும் அவசியம் எதுவும் இல்லாமல் இருந்தும் அதிகமான வியாபாரிகள் அடக்கவிலையை அதிகப்படுத்திக் கூறுகின்றனர். இதை வாடிக்கையாளர் நம்ப வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இந்தப் பொய்யைக் கூறுகின்றனர். இவர்களுக்கு மேற்கண்ட எச்சரிக்கை போதுமானதாகும்.
இப்படிச் செய்பவர்களுக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் கிடைக்காது; அவர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான் என்ற அளவுக்கு கடுமையான எச்சரிக்கை இவ்வசனத்தில் இருப்பதால் அடக்கவிலை குறித்தோ பொருளின் தரம் குறித்தோ பொய்யான தகவலைச் சொல்லி விற்கக் கூடாது. உண்மையான அடக்கவிலையைச் சொல்ல வேண்டும். அல்லது அடக்கவிலையைச் சொல்லாமல் என்னுடைய விலை இதுதான் என்றோ அல்லது இதுதான் எனக்கு கட்டுபடியாகும் என்றோ கூறலாம்.
உண்மையான விபரங்களைக் கூறினாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக எனக் கூறி அல்லாஹ்வின் பெயரை சொந்த ஆதாயத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு செய்வது இறைவன் வழங்கும் பரக்கத் எனும் பேரருளை அழித்து விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர்.
صحيح البخاري
2087 – حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن يونس، عن ابن شهاب، قال ابن المسيب: إن أبا هريرة رضي الله عنه، قال: سمعت رسول الله صلى الله عليه وسلم، يقول: «الحلف منفقة للسلعة، ممحقة للبركة»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்; ஆனால், அது பரக்கத்தை அழித்துவிடும்!
நூல் : புகாரி 2087
பதுக்கல் கூடாது
பதுக்கல் கூடாது என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் பதுக்கல் என்பதன் பொருளை அதிகமான மக்கள் அறிந்து வைத்திருக்கவில்லை.
கையிருப்பில் பொருட்களை வைத்துக் கொண்டு நுகர்வோர் கேட்கும்போது இல்லை எனக் கூறுவதும் இதன் மூலம் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பின்னர் அதிக விலைக்கு விற்பதும்தான் பதுக்கல் எனப்படும்.
வியாபாரிகள் அதிகமான பொருட்களை வாங்கி இருப்பு வைப்பது பதுக்கல் ஆகாது. எவ்வளவு வேண்டுமானாலும் வியாபாரத்துக்காக ஒருவர் கையிருப்பில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் நுகர்வோர் கேட்கும்போது விற்பனை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
ஒருவர் ஆயிரம் மூட்டை அரிசியை கையிருப்பில் வைத்திருக்கிறார். நுகர்வோர் கேட்கும் போதெல்லாம் அவர் இல்லை என்று சொல்வதில்லை என்றால் இவர் பதுக்கல் என்ற குற்றத்தைச் செய்தவராக மாட்டார். ஆனால் ஒருவரிடம் பத்து மூட்டை அரிசி மட்டுமே உள்ளது. ஆனால் விலை ஏறட்டும் என்பதற்காக அவர் அதை விற்க மறுக்கிறார். இவர் பதுக்கிய குற்றத்தைச் செய்தவராக ஆகிவிடுவார். இவரைப் போல் ஒவ்வொருவரும் செய்ய ஆரம்பித்தால் மக்களுக்குப் பொருட்கள் கிடைக்காமல் போய்விடும்.
அது போல் ஒருவர் தனது ஒரு வருட தேவைக்காக நூறு மூட்டை அரிசியை வாங்கி வைத்துக் கொண்டால் அவரும் பதுக்கியவராக மாட்டார். இவர் வியாபார நோக்கத்தில் இல்லாமல் சொந்தத் தேவைக்காக வாங்கி வைத்துள்ளதால் இது பதுக்கலில் சேராது.
பதுக்குவது இஸ்லாத்தில் குற்றமாகும்.
صحيح مسلم ـ
4206 – حدثنا عبد الله بن مسلمة بن قعنب حدثنا سليمان – يعنى ابن بلال – عن يحيى – وهو ابن سعيد – قال كان سعيد بن المسيب يحدث أن معمرا قال قال رسول الله -صلى الله عليه وسلم- من احتكر فهو خاطئ . فقيل لسعيد فإنك تحتكر قال سعيد إن معمرا الذى كان يحدث هذا الحديث كان يحتكر.
பதுக்குபவன் பாவம் செய்பவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் .
நூல் : முஸ்லிம் 4206
வியாபாரத்தை முறித்துக் கொள்ளுதல்
ஒரு பொருளை ஒருவர் விலைபேசி வாங்கிய பிறகு அப்பொருள் அவருக்குத் தேவை இல்லை என்று தோன்றினால் அந்த வியாபாரத்தை முறித்துக் கொள்வது குறித்து இஸ்லாம் சொல்வது என்ன?
صحيح البخاري 2109 – حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، أَوْ يَقُولُ أَحَدُهُمَا لِصَاحِبِهِ اخْتَرْ»، وَرُبَّمَا قَالَ: «أَوْ يَكُونُ بَيْعَ خِيَارٍ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருந்தாலும் அல்லது ஒருவர் மற்றவரிடம் (உறுதிப்படுத்துவதோ முறிப்பதோ) உமது விருப்பம் என்று கூறினாலும் முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள்
நூல் : புகாரி 2109
ஒரு பொருளை வாங்குவதாக பேரம்பேசி முடித்த பின் அல்லது கைவசப்படுத்தி முடித்த பின் அந்த இடத்தை விட்டு இருவரும் பிரியாமல் இருந்தால் இருவருக்கும் அதை முறித்துக் கொள்ளும் உரிமை உள்ளது. பொருளுக்கான பணத்தைக் கொடுத்த பின்னர் இது தேவையில்லை; என் பணத்தைத் திருப்பித் தாருங்கள் என்று நுகர்வோர் கோரினால் வியாபாரி பணத்தை திரும்பக் கொடுத்து விட வேண்டும்.
வேறொருவருக்குப் பேசிவைத்ததை தவறாக உங்களிடம் விற்று விட்டேன்; அல்லது விலையைக் குறைத்துச் சொல்லி விட்டேன்; திருப்பித் தந்து விடுங்கள் என்று வியாபாரி கேட்டால் நுகர்வோர் அதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். இடத்தை விட்டு இருவரும் பிரியும் வரைதான் இந்த உரிமை உள்ளது.
பொருளை வாங்கியவர் தனது இடத்துக்கு அதைக் கொண்டு சென்ற பின்னர் வியாபாரத்தை முறித்துக் கொள்வதாகக் கூறினால் வியாபாரி அதை ஏற்கும் அவசியம் இல்லை. விரும்பினால் முறிக்கலாம். அல்லது விரும்பினால் மறுக்கலாம்.
ஆயினும் காலம் கடந்த பின்னும் விற்ற பொருளை வியாபாரி பெருந்தன்மையுடன் திரும்பப் பெற்றுக் கொண்டால் அது சிறந்ததாகும்.
سنن أبي داود
3460 – حدثنا يحيى بن معين ثنا حفص عن الأعمش عن أبي صالح عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم “ من أقال مسلما أقاله الله عثرته “
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் ஒரு முஸ்லிமிற்கு விற்ற பொருளை திரும்பப் பெற்றுக் கொள்கிறாரோ அல்லாஹ் அவருக்கு அவருடைய தவறுகளை திரும்பப் பெற்றுக் கொள்கிறான்.
நூல்கள் : அபூதாவூத், இப்னுமாஜா
அது போல் பொருளை விற்கும்போது இதைப் பயன்படுத்திப் பார்த்து விட்டு அல்லது வீட்டில் காட்டி விட்டு பிடித்தால் வைத்துக் கொள்வேன்; இல்லாவிட்டால் திருப்பிக் கொண்டு வருவேன் என்று நுகர்வோர் கூறியதை வியாபாரி ஒப்புக் கொண்டு இருந்தால் அப்போது அந்த உறுதிமொழியைக் காப்பாற்றும் அவசியம் அவருக்கு உண்டு.
வியாபாரத்தில் பெருந்தன்மை
விற்கும் போதும் வாங்கும் போதும் இரு தரப்பிலும் பெருந்தன்மையாக நடந்து கொண்டால் அலாஹ்வின் அருள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் பெரும்பாலும் நல்லுறவு இருப்பதில்லை. வியாபாரி நம்மைச் சுரண்டுகிறார்; ஏமாற்றுகிறார் என்ற எண்ணம் தான் அதிகமான மக்களிடம் உள்ளது. மக்கள் இவ்வாறு நினைப்பதற்கு ஏற்பவே அதிகமான வியாபாரிகள் நடந்து கொள்கிறார்கள்:
ஆனால் வியாபாரம் என்பது சம்பாதிப்பதற்கான வழிமுறையாக இருந்தாலும் அதில் பெருந்தன்மையாக நடந்து கொண்டால் அல்லாஹ்வின் அருளைப் பெற்றுத்தரும் நல்லறங்களில் ஒன்றாக அமைந்து விடுகிறது.
صحيح البخاري 2076 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ المُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ، وَإِذَا اشْتَرَى، وَإِذَا اقْتَضَى»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாங்கும்போதும் விற்கும்போதும் வழக்காடும்போதும் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!
நூல் : புகாரி 2076
இந்தப் பெருந்தன்மை என்பது இரு தரப்பிலும் இருக்க வேண்டும் என்பதால் தான் விற்கும் போதும், வாங்கும் போதும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகமான லாபம் வைத்தல், விற்ற பொருளை மாற்றிக் கேட்கும் போது மாற்றிக் கொடுத்தல், கடுகடுப்பாக இல்லாமல் மலர்ந்த முகத்துடன் இருப்பது போன்றவை வியாபாரிகள் கடைப்பிடிக்கும் பெருந்தன்மையில் அடங்கும்.
வியாபாரியை எதிரியாகப் பார்க்காமல் இனிமையாக அணுகுதல், பாதிப்பு இல்லாத அற்பமான குறைகளை அலட்சியப்படுத்துதல் போன்றவை நுகர்வோர் கடைப்பிடிக்க வேண்டிய பெருந்தன்மையாகும்.
மந்தபுத்தி உள்ளவர்களிடம் வியாபாரம் செய்யும் முறை
ஏனெனில் மந்தபுத்தியுள்ளவர்கள், மனவளர்ச்சி குறைந்தவர்கள், சிறுபிள்ளைகள் போல் மாறிவிட்ட முதியவர்கள் பொருட்களின் தரத்தையும் அதன் சந்தை நிலவரத்தையும் அறிய மாட்டார்கள். எனவே தரமற்ற பொருளை அதிக விலை கொடுத்து அவர்கள் வாங்கிவிடக் கூடும்.
இது போன்றவர்கள் இப்படி ஏமாந்து விடக் கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு விதியை வகுத்துத் தந்துள்ளார்கள்.
மேற்கண்ட நிலையில் உள்ளவர்கள் பொருட்களை வாங்கும் போது எனக்கு இப்பொருளின் தரம் பற்றி ஒன்றும் தெரியாது. நீ சொல்வதை நம்பி நான் வாங்கிச் செல்கிறேன். இதில் எந்த ஏமாற்றுதலும் இருக்கக் கூடாது என்று கூறிவிட்டு பொருளை வாங்கிச் செல்ல வேண்டும். இவ்வாறு வாங்கிச் சென்ற பின்னர் வியாபாரி உறுதி அளித்தது போல் அப்பொருள் இல்லை என்பது தெரியவந்தால் எப்போது வேண்டுமானாலும் அவர் திருப்பித் தந்தால் வியாபாரி பெற்றுக் கொள்ள வேண்டும்.
வியாபாரிக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டால் விபரம் தெரிந்தவர்களை வரச் சொல் என்று அவருக்கு விற்பனை செய்யாமல் இருக்கலாம்.
صحيح البخاري 2117 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَجُلًا ذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ يُخْدَعُ فِي البُيُوعِ، فَقَالَ: «إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ»
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வியாபாரங்களில் தான் ஏமாற்றப்படுவதாகக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “வியாபாரத்தின்போது ஏமாற்றுதல் கூடாது என்று நீ கூறிவிடு” என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 6964, 2117
இலாபத்தில் மட்டும் பங்கு பெறுதல்
முதலீடு செய்து தொழில் செய்யத் தெரியாதவர்களும் அதற்கான வாய்ப்பு இல்லாதவர்களும் மற்றவரின் தொழில் நிறுவனத்தில் முதலீடு செய்கின்றனர். ஆனால் அந்தத் தொழிலில் அவர்கள் எந்த உழைப்பும் செய்வதில்லை. இப்படி உழைக்காமல் ஸ்லீப்பிங் பார்ட்னராக இருந்து கொண்டு லாபம் அடைவது கூடுமா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது.
இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.
صحيح البخاري 2285 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: ” أَعْطَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ اليَهُودَ: أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا، وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَا
கைபர் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி பெற்ற பின்னர் அங்குள்ள நிலங்கள் இஸ்லாமிய அரசுக்குச் சொந்தமாகி விட்டது . அப்போது கைபர் பகுதியில் இருந்த யூதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நிலம் உங்களுடையதாக இருக்கட்டும். நாங்கள் அதில் உழைக்கிறோம். கிடைப்பதை நமக்கிடையே பங்கு போட்டுக் கொள்வோம் என்று கோரிக்கை வைத்தனர். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டு அவர்களிடம் நிலத்தை ஒப்படைத்தனர்.
நூல் : புகாரி 2286, 2329, 2331, 2338, 2499, 2720, 3152, 4248
நிலம் எனும் முதலீடு இஸ்லாமிய அரசுக்குச் சொந்தமானது உழைப்பு மற்றவர்களுக்கு உரியது என்ற நிலையில் கிடைக்கும் ஆதாயத்தில் இஸ்லாமிய அரசாங்கம் ஆதாயம் அடைந்துள்ளதே இதற்குப் போதுமான ஆதாரமாகும்.
صحيح البخاري 2630 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: لَمَّا قَدِمَ المُهَاجِرُونَ المَدِينَةَ مِنْ مَكَّةَ، وَلَيْسَ بِأَيْدِيهِمْ – يَعْنِي شَيْئًا – وَكَانَتِ الأَنْصَارُ أَهْلَ الأَرْضِ وَالعَقَارِ، فَقَاسَمَهُمُ الأَنْصَارُ عَلَى أَنْ يُعْطُوهُمْ ثِمَارَ أَمْوَالِهِمْ كُلَّ عَامٍ، وَيَكْفُوهُمُ العَمَلَ وَالمَئُونَةَ، وَكَانَتْ أُمُّهُ أُمُّ أَنَسٍ أُمُّ سُلَيْمٍ كَانَتْ أُمَّ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، «فَكَانَتْ أَعْطَتْ أُمُّ أَنَسٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِذَاقًا فَأَعْطَاهُنَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّ أَيْمَنَ مَوْلاَتَهُ أُمَّ أُسَامَةَ بْنِ زَيْدٍ» – قَالَ ابْنُ شِهَابٍ: فَأَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ – «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا فَرَغَ مِنْ قَتْلِ أَهْلِ خَيْبَرَ، فَانْصَرَفَ إِلَى المَدِينَةِ رَدَّ المُهَاجِرُونَ إِلَى الأَنْصَارِ مَنَائِحَهُمُ الَّتِي كَانُوا مَنَحُوهُمْ مِنْ ثِمَارِهِمْ، فَرَدَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أُمِّهِ عِذَاقَهَا، وَأَعْطَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّ أَيْمَنَ مَكَانَهُنَّ مِنْ حَائِطِهِ»
முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் “எங்களுக்குப் பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
நூல் : புகாரி 2630
தொழில் என்பது எப்போதும் லாபத்தையே தரும் என்று சொல்ல முடியாது. இலாபம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது போல் இலாபமே இல்லாமல் போகவும் நட்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மற்றவருடன் தொழிலில் பங்காளிகளாகச் சேர்பவர்கள் இலாபத்தில் உரிமை கொண்டாடுவது போல் நட்டத்திற்கும் பொறுப்பு ஏற்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது வட்டியாக ஆகிவிடும்.
மேலும் மாதம் தோறும் இவ்வளவு தொகை என்று நிர்ணயித்தால் அதுவும் வட்டியாகிவிடும். கிடைக்கும் லாபத்தில் முதலீடு செய்தவருக்கு இத்தனை சதவிகிதம்; உழைப்பவருக்கு இத்தனை சதவிகிதம் என்ற அடிப்படையில் இருந்தால்தான் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாக ஆகும்.
முஸ்லிம் அல்லாதவர்களின் சந்தைகளில் முஸ்லிம்கள் வியாபாரம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடை காலகட்டத்தில் மக்காவில் உகாள், துல்மஜாஸ் போன்ற சந்தைகள் குறிப்பிட்ட நாட்களில் திறக்கப்படும் . இவை சந்தைகளாக மட்டும் இருக்கவில்லை. இங்கு சிலை வணக்கம் உட்பட கூத்து கும்மாளங்கள் அனைத்தும் நடைபெறும் இடமாகவும் இருந்தது.
இந்த சந்தைகளில் முஸ்லிம்களான ஸஹாபாக்கள் வியாபாரம் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை.
صحيح البخاري 1770 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الهَيْثَمِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ: قَالَ: ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: ” [ص:182] كَانَ ذُو المَجَازِ، وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الجَاهِلِيَّةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ، حَتَّى نَزَلَتْ: {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ} [البقرة: 198]
உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வியாபரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினர். அப்போது உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை என்ற (2:198ஆவது) வசனம் அருளப்பெற்றது.
நூல் : புகாரி 1770
பலவிதமான பாவகாரியங்கள் நடைபெற்ற உகாள், தில்மஜாஸ் போன்ற வியாபாரத் தலங்களில் இஸ்லாம் அனுமதித்தது என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
தீமைகள் நடக்கும் இடங்களில் நாம் ஹலாலான முறையில் வியாபாரம் செய்தாலோ அல்லது அது போன்ற இடங்களுக்குச் சென்று ஒரு பொருளை வாங்கினாலோ அது தீமைக்கு துணை செய்ததாக ஆகாது என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் ஒருவர் தீமையான காரியங்கள் நடக்கும் இடத்தில் வியாபாரம் செய்வது தவறில்லை என்றாலும் அது போன்ற தீமைகளில் தான் வீழ்ந்து விடாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அனுமதிக்கப்பட்டது என்றால் கட்டாயம் செய்துதான் ஆக வேண்டும் என்பது கிடையாது.
நம்முடைய ஈமானிற்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அது போன்ற நிலைகளில் நாம் அவற்றை விட்டும் விலகிக் கொள்வதே சிறந்ததாகும்.
صحيح البخاري 52 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” الحَلاَلُ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى المُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ: كَرَاعٍ يَرْعَى حَوْلَ الحِمَى، يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ، أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلاَ إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ “
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே. அறிக: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அது தான் உள்ளம்.
நூல் : புகாரி 52
நம்முடைய கால் நடை பிறருடைய வேலிக்குள் சென்று மேய்வது ஹராமானாதாகும். அதே நேரத்தில் வேலிக்கு அருகில் மேய்ந்தால் அது ஹராமானது கிடையாது.
வேலிக்குள் செல்லாமல் அருகில்தான் மேயும் என்று நாம் பாராமுகமாக இருந்தால் கால் நடை வேலியை தாண்டியும் சென்று விடும்.
அது போன்றுதான் தர்ஹா வழிபாடு போன்ற பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களில் நாம் எந்தத் தவறிலும் பங்கேற்காமல் வியாபாரம் செய்தால் அல்லது அங்குள்ள கடைகளில் ஒரு பொருள் வாங்கினால் அது தவறு கிடையாது. ஆனால் இது வேலிக்கு அருகில் மேய்கின்ற கால்நடையின் நிலையைப் போன்றதுதான்.
நாம் வேலிக்குள் நுழையவே முடியாத இடத்தில் நம்முடைய கால்நடையை மேயவிட்டால் அது நுழைந்துவிடும் என்பதைப் பற்றி எந்தக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.
அது போன்று பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களை விட்டும் நாம் தவிர்ந்து கொண்டால் நம்முடைய ஈமானிற்க்கு பாதிப்பு ஏற்படுவதை விட்டும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம்.
பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும்
سنن الترمذي
322 – حدثنا قتيبة حدثنا الليث عن ابن عجلان عن عمرو بن شعيب عن أبيه عن جده عن رسول الله صلى الله عليه و سلم : أنه نهى عن تناشد الأشعار في المسجد وعن البيع والاشتراء فيه وأن يتحلق الناس يوم الجمعة قبل الصلاة
பள்ளிவாசலில் விற்பதையும், வாங்குவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்
நூல் : திர்மிதி
இந்தத் தடை பொதுவானதல்ல. தனி நபர்கள் தங்களின் ஆதாயத்துக்காக செய்து கொள்ளும் வியாபாரத்தையே குறிக்கும். பொதுநலன் சார்ந்த பள்ளிவாசல் நிர்வாகம் சார்ந்த பொருட்களை விற்பதையும் வாங்குவதையும் இது கட்டுப்படுத்தாது.
صحيح البخاري 2097 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَأَبْطَأَ بِي جَمَلِي وَأَعْيَا، فَأَتَى عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ «جَابِرٌ»: فَقُلْتُ: نَعَمْ، قَالَ: «مَا شَأْنُكَ؟» قُلْتُ: أَبْطَأَ عَلَيَّ جَمَلِي وَأَعْيَا، فَتَخَلَّفْتُ، فَنَزَلَ يَحْجُنُهُ بِمِحْجَنِهِ ثُمَّ قَالَ: «ارْكَبْ»، فَرَكِبْتُ، فَلَقَدْ رَأَيْتُهُ أَكُفُّهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَزَوَّجْتَ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «بِكْرًا أَمْ ثَيِّبًا» قُلْتُ: بَلْ ثَيِّبًا، قَالَ: «أَفَلاَ جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ» قُلْتُ: إِنَّ لِي أَخَوَاتٍ، فَأَحْبَبْتُ أَنْ أَتَزَوَّجَ امْرَأَةً تَجْمَعُهُنَّ، وَتَمْشُطُهُنَّ، وَتَقُومُ عَلَيْهِنَّ، قَالَ: «أَمَّا إِنَّكَ قَادِمٌ، فَإِذَا قَدِمْتَ، فَالكَيْسَ الكَيْسَ»، ثُمَّ قَالَ: «أَتَبِيعُ جَمَلَكَ» قُلْتُ: نَعَمْ، فَاشْتَرَاهُ مِنِّي بِأُوقِيَّةٍ، ثُمَّ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلِي، وَقَدِمْتُ بِالْغَدَاةِ، فَجِئْنَا إِلَى المَسْجِدِ فَوَجَدْتُهُ عَلَى بَابِ المَسْجِدِ، قَالَ: «آلْآنَ قَدِمْتَ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَدَعْ جَمَلَكَ، فَادْخُلْ، فَصَلِّ رَكْعَتَيْنِ»، فَدَخَلْتُ فَصَلَّيْتُ، فَأَمَرَ بِلاَلًا أَنْ يَزِنَ لَهُ أُوقِيَّةً، فَوَزَنَ لِي بِلاَلٌ، فَأَرْجَحَ لِي فِي المِيزَانِ، فَانْطَلَقْتُ حَتَّى وَلَّيْتُ، فَقَالَ: «ادْعُ لِي جَابِرًا» قُلْتُ: الآنَ يَرُدُّ عَلَيَّ الجَمَلَ، وَلَمْ يَكُنْ شَيْءٌ أَبْغَضَ إِلَيَّ مِنْهُ، قَالَ: «خُذْ جَمَلَكَ وَلَكَ ثَمَنُهُ»
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்! என்றேன். என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)? என்று கேட்டார்கள். என் ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கிவிட்டேன்! என்றேன். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், நீர் மணமுடித்துவிட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னிகழிந்த பெண்ணைத்தான்!என்று நான் கூறினேன். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே! என்று கூறினார்கள். நான், எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்! என்றேன். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்துகொள்வீராக! நிதானத்துடன் நடந்துகொள்வீராக!என்று கூறிவிட்டு பின்னர், உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா? என்று கேட்டார்கள். நான், சரி (விற்று விடுகிறேன்!) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போதுதான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச்சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றுவிட்டேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனத்திற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக! என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 2097
ஜாபிர் (ரலி) அவர்களின் ஒட்டகத்துக்கான விலையைப் பள்ளிவாசலில் வைத்து கொடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாங்கியுள்ளதால் சமுதாய நன்மை சார்ந்த வியாபாரத்தை பள்ளிவாசலில் செய்யத் தடை இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.
தண்ணீர் வியாபாரம்
صحيح مسلم 34 – (1565) وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، أَخْبَرَنَا وَكِيعٌ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، جَمِيعًا عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ فَضْلِ الْمَاءِ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை விற்பதற்குத் தடை விதித்தார்கள்.
நூல் : முஸ்லிம் 3186
صحيح البخاري 2358 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنِ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ أَبَا صَالِحٍ، يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” ثَلاَثَةٌ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ، رَجُلٌ كَانَ لَهُ فَضْلُ مَاءٍ بِالطَّرِيقِ، فَمَنَعَهُ [ص:111] مِنَ ابْنِ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لاَ يُبَايِعُهُ إِلَّا لِدُنْيَا، فَإِنْ أَعْطَاهُ مِنْهَا رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا سَخِطَ، وَرَجُلٌ أَقَامَ سِلْعَتَهُ بَعْدَ العَصْرِ، فَقَالَ: وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ لَقَدْ أَعْطَيْتُ بِهَا كَذَا وَكَذَا، فَصَدَّقَهُ رَجُلٌ ” ثُمَّ قَرَأَ هَذِهِ الآيَةَ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77]
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப் போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்து விட்டவன்.
நூல் : புகாரி 2358
தண்ணீரை வியாபாரமாக ஆக்கக் கூடாது என்றாலும் தண்ணீருடன் நம்முடைய உழைப்பும் சேருமானால் அது தண்ணீரை வியாபாரம் செய்ததாக ஆகாது.
நாம் கிணறு வெட்டுகிறோம். அந்தக் கிணற்றை விற்றால் அது தண்ணீரை விற்றதாக ஆகாது. கிணறு வெட்டுவதற்காக நாம் செலவிட்டதையும் கிணறுக்கான இடத்தையும்தான் விற்பனை செய்கிறோம்.
அதுபோல் இயற்கையாக அல்லாஹ் தரும் தண்ணீரில் உள்ள அழுக்குகளையும் கிருமிகளையும் நீக்கி சுவை கூட்டி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதும் தண்ணீரை விற்பதில் அடங்காது. பாதுகாப்பான குடிநீராக ஆக்க உழைத்ததாலும் அதற்காக செலவிட்டதாலும்தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதால் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதுதான்.
விலைக் கட்டுப்பாடு
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு இவ்வளவுதான் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று பல நாடுகளில் சட்டங்கள் உள்ளன. நமது நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் உள்ளன.
இஸ்லாமிய அடிப்படையில் இதுபோல் செய்வது விவசாயிகளுக்குச் செய்யும் அநீதியாகும்.
سنن ابن ماجه
2200 – حدثنا محمد بن المثنى حدثنا حجاج حدثنا حمضاد بن سلمة عن قتادة وحميد وثابت عن أنس بن مالك قال غلا الشر على عهد رسول الله صلى الله عليه و سلم فقالوا يا رسول الله قد غلا السعر فسعر لنا فقال : – ( إن الله هو المسعر القابض الباسط الرازق إني لأرجو أن ألقى ربي وليس أحد يطلبني بمظلمة في دم ولامال
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தபோது விலைக்கட்டுப்பாடு செய்யுங்கள் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்தான் உணவளிப்பவன்; தாராளமாகவும் குறைவாகவும் வழங்குபவன்; அல்லாஹ்தான் விலையைக் கட்டுப்படுத்துபவன். அல்லாஹ்வை நான் சந்திக்கும்போது எந்த மனிதனின் உயிருக்கோ பொருளாதாரத்துக்கோ எந்த அநீதியும் செய்யாத நிலையில் சந்திக்க விரும்புகிறேன் எனக் கூறினார்கள்.
நூல்கள் : அபூதாவூத், திர்மிதி, அஹ்மத், இப்னுமாஜா
கஷ்டப்பட்டு நிலத்தில் பாடுபடுபவனுக்குத்தான் அதன் வலி தெரியும். அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை அவனுக்குத் தான் உள்ளது. அதிகமாக உற்பத்தியாகும்போது விலை குறைவதும் உற்பத்தி குறையும்போது விலை உயர்வதும் இயல்பானது. அதிகமாக உற்பத்தியாகும்போது கடுமையான நட்டத்தைச் சந்திக்கும் விவசாயிகள் உற்பத்தி குறையும்போதுதான் அதை ஈடுகட்டிக் கொள்ள முடியும். இந்த நிலையில் அரசாங்கம் விலைக்கட்டுப்பாடு விதிப்பது அவர்களுக்குச் செய்யும் அநீதியாகும் என்று இஸ்லாம் கருதுகிறது.
இன்னும் சொல்லப்போனால் விவசாயம்தான் அதிக உழைப்புக்கு குறைந்த ஆதாயம் கிடைக்கும் தொழிலாக உள்ளது. அதிகமான இயற்கை இடர்பாடுகளும் இந்தத் தொழிலுக்குத்தான் உண்டு. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பார்கள். இது முற்றிலும் சரியானதுதான்.
ஆனால் கஷ்டப்படும் ஏழை விவசாயியின் கழுத்தை நெரிக்கும் ஆட்சியாளர்கள் சோப்பு, சீப்பு, பிளேடு உள்ளிட்ட பல்லாயிரம் பொருட்களுக்கு எந்த விலைக்கட்டுப்பாடும் விதிப்பதில்லை.
ஐம்பது பைசா அடக்கமாகும் சோப்புக்கு ஐம்பது ரூபாய் என்று தயாரிப்பாளர் விலை நிர்ணயிக்கும்போதும் பத்து பைசாகூட அடக்கமாகாத பிளேடுக்கு பத்து ரூபாய் என்று விலை நிர்ணயிக்கும்போதும் கட்டுப்பாடு விதித்தால் அதில் அர்த்தமிருக்கும்.
இவற்றுக்கு எந்த விலைக்கட்டுப்பாடும் செய்யாமல் கஷ்டப்பட்டு வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து பாடுபடும் விவசாயிக்கு மட்டும் விலைக் கட்டுப்பாடு நிர்ணயிக்கிறார்கள். எந்த விவசாயியும் விவசாயத்தின் மூலம் கோடிகோடியாகச் சம்பாதித்ததாகப் பார்க்க முடியாது. ஒரு டூத் பேஸ்ட் கம்பெனி ஆரம்பித்தவன் ஒரு வருடத்தில் பல கோடிகளுக்கு அதிபதியாகி விடுகிறான்.
ஒரு விவசாயி விவசாயத்தின் மூலம் கோடிகளுக்கு அதிபதியாக வேண்டும். அதுதான் உண்மையான பொருளாதாரம். அதில் உழைக்கின்ற உழைப்பு வேறெதிலும் கிடையாது. விவசாயம் செய்பவன் இன்னும் அந்தக் கோவனத்தைத்தான் கட்டிக் கொண்டிருக்கின்றானே தவிர முன்னேறவே இல்லை. அவன்தான் நமக்குச் சோறு போடுகிறான். அதையெல்லாம் கவனித்துத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அநீதி என்று கூறுகிறார்கள்.
பிறமதத்தினருடன் வியாபாரம்
பிறமதத்தவர்களுடன் வியாபரத்தில் கூட்டுச் சேர்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபர் பகுதியை வெற்றி கொண்டபோது அங்கிருந்த யூதர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
صحيح البخاري 2285 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: ” أَعْطَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ اليَهُودَ: أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا، وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபரில் இருந்த யூதர்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அவர்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்து) ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
நூல் : புகாரி 2285
எனவே பிறமதத்தவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளராக அனஸ் என்ற முஸ்லிம் இளைஞரை நியமித்திருந்தது போல் ஒரு யூத இளைஞரையும் பணியாளாக நியமித்திருந்தனர்.
صحيح البخاري 1356 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ وَهْوَ ابْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرِضَ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ: «أَسْلِمْ»، فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனிடம் வந்தபோது, அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!” என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், “அபுல் காசிமாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு!” என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
நூல் : புகாரி 1356
தடை செய்யப்பட்டவைகளை விற்கலாமா
மார்க்கத்தில் சில பொருட்கள் உண்பதற்கோ அணிவதற்கோ பிறவகைகளில் பயன்படுத்துவதற்கோ தடை செய்யப்பட்டு இருந்தால் அதை விற்று சம்பாதிக்கக் கூடாது.
صحيح البخاري 2086 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، قَالَ: رَأَيْتُ أَبِي اشْتَرَى عَبْدًا حَجَّامًا، فَسَأَلْتُهُ فَقَالَ: « نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الكَلْبِ وَثَمَنِ الدَّمِ، وَنَهَى عَنِ الوَاشِمَةِ وَالمَوْشُومَةِ، وَآكِلِ الرِّبَا وَمُوكِلِهِ، وَلَعَنَ المُصَوِّرَ»
நாய்களை விற்று அதன் மூலம் வருவாய் ஈட்டுவதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்தார்கள்
நூல் : புகாரி 2086, 2237, 2238,
நாய்களை வளர்க்க இஸ்லாம் தடை செய்துள்ளதால் அதை விற்று சம்பாதிப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் சில காரணங்களுக்காக நாய்களை வளர்க்க இஸ்லாம் அனுமதித்துள்ளது. அது போன்ற பணிகளுக்குப் பயன்படும் நாய்களை விற்கலாம்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 2:173
இந்த வசனத்தில் நான்கு விஷயங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இந்தத் தடை உண்பதற்கு மட்டுமல்ல. மற்றவர்களுக்கு இதை விற்பதற்கும் தான் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
صحيح البخاري
2236 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ: سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عَامَ الفَتْحِ وَهُوَ بِمَكَّةَ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الخَمْرِ، وَالمَيْتَةِ وَالخِنْزِيرِ وَالأَصْنَامِ»، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ شُحُومَ المَيْتَةِ، فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدْهَنُ بِهَا الجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ؟ فَقَالَ: «لاَ، هُوَ حَرَامٌ»، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ»
பன்றி, தானாகச் செத்தவை, சாராயம் மற்றும் சிலைகளை விற்பதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்துள்ளார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது கூறினார்கள்.
நூல் : புகாரி 2236
2086 – حدثنا أبو الوليد، حدثنا شعبة، عن عون بن أبي جحيفة، قال: رأيت أبي اشترى عبدا حجاما، فسألته فقال: نهى النبي صلى الله عليه وسلم عن ثمن الكلب وثمن الدم، ونهى عن الواشمة والموشومة، وآكل الربا وموكله، ولعن المصور
இரத்தத்தையும் நாயையும் விற்று சம்பாதிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
நூல் : புகாரி 2086
سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ عَمَّا يُعْصَرُ مِنْ الْعِنَبِ فَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّ رَجُلًا أَهْدَى لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاوِيَةَ خَمْرٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ عَلِمْتَ أَنَّ اللَّهَ قَدْ حَرَّمَهَا قَالَ لَا فَسَارَّ إِنْسَانًا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَ سَارَرْتَهُ فَقَالَ أَمَرْتُهُ بِبَيْعِهَا فَقَالَ إِنَّ الَّذِي حَرَّمَ شُرْبَهَا حَرَّمَ بَيْعَهَا قَالَ فَفَتَحَ الْمَزَادَةَ حَتَّى ذَهَبَ مَا فِيهَا
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல்பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்று கூறிவிட்டு, பிறகு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அவரிடம் இரகசியமாக என்ன சொன்னீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “அதை விற்றுவிடச் சொன்னேன்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்” என்றார்கள். உடனே அம்மனிதர் தோல் பையைத் திறந்துவிட, அதிலுள்ளது (வழிந் தோடிப்) போனது.
நூல் : முஸ்லிம் 3220
இந்தச் செய்தியின் மூலம் மதுவை நாம் வாங்கவோ விற்கவோ கூடாது என்பது தெளிவாகிறது.
سنن أبي داود 3674 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ، عَنْ أَبِي عَلْقَمَةَ، مَوْلَاهُمْ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ الْغَافِقِيِّ، أَنَّهُمَا سَمِعَا ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَشَارِبَهَا، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ»
மதுவையும் அதைக் குடிப்பவனையும் அதை ஊற்றிக் கொடுப்பவனையும் அதைவிற்பவனையும் வாங்குபனையும் அதை சுமந்து செல்பவனையும் சுமந்து செல்லப்படுபவனையும் அல்லாஹ் சபிக்கின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபுதாவூத் 3189
புகையிலைப் பொருட்கள், பீடி, சிகரெட், பான்பராக், கஞ்சா, அபின் மற்றும் எவையெல்லாம் மனிதனின் உடலுக்கும் அறிவுக்கும் கேடு விலைவிக்குமோ அவற்றை வியாபாரம் செய்வது ஹராமாகும்.
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
திருக்குர்ஆன் 2:195
சுருக்கமாகச் சொல்வது என்றால் மார்க்கத்தில் எவை ஹராமாக்கப்பட்டுள்ளதோ அது போன்ற எதனையும் வியாபாரமாக பணம் சம்பாதிக்கும் வழியாக ஆக்கக் கூடாது.
விபச்சாரம் ,பச்சை குத்திவிடுதல், இசைக் கருவிகள், ஆபாசமான சினிமாக்கள் குறுந்தகடுகள், லாட்டரிச் சீட்டுக்கள் போன்ற எதனையும் பணம் சம்பாதிக்கும் வழியாக ஆக்கக் கூடாது. அவ்வாறு திரட்டப்படும் பணம் பச்சை ஹராமாகும்.
தடை செய்யப்பட்டவை இரு வகைப்படும்.
ஒன்று முற்றாகத் தடுக்கப்பட்டவை.
மற்றொன்று ஓரளவுக்கு தடுக்கப்பட்டவை.
உண்ணவோ, பருகவோ, பயன்படுத்தவோ யாருக்கும் அனுமதி இல்லை என்றால் அது தான் முழுமையாகத் தடுக்கப்பட்டது. அதை விற்பதும் கூடாது.
உண்பதற்கு தடுத்து வேறு வகையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு இருந்தாலோ, ஒரு வகையினருக்கு தடுக்கப்பட்டு மற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தாலோ, ஒரு காரணத்துக்காக தடுக்கப்பட்டு அந்தக் காரணம் இல்லாத போது அனுமதிக்கப்பட்டு இருந்தாலோ அவை ஓரளவு தடுக்கப்பட்டதாகும். இவற்றை நாம் வியபாரம் செய்தால் தடுக்கப்பட்டதை விற்றதாக ஆகாது.
உதாரணமாக வீட்டுக் கழுதையை எடுத்துக் கொள்வோம். இது உண்பபதற்குத் தான் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சவாரி செய்வது தடுக்கப்படவில்லை. எனவே கழுதையை நாம் விற்கலாம்.
நாயை உண்பதற்குத் தடை உள்ளது. ஆனால் காவல் காப்பதற்காகவும் வேட்டையாடவும் பயன்படுத்த அனுமதி உள்ளது. இந்தப் பயன்பாட்டுக்குத் தகுந்த நாய்களை நாம் விற்பதும் கூடும்.
ஆயினும் சில காரணங்களுக்காக நாய்களை வளர்க்க இஸ்லாம் அனுமதித்துள்ளது. அது போன்ற பணிகளுக்குப் பயன்படும் நாய்களை விற்கலாம்.
4104 – حدثنا عبيد الله بن معاذ حدثنا أبى حدثنا شعبة عن أبى التياح سمع مطرف بن عبد الله عن ابن المغفل قال أمر رسول الله -صلى الله عليه وسلم- بقتل الكلاب ثم قال ما بالهم وبال الكلاب ثم رخص فى كلب الصيد وكلب الغنم.
ஆட்டு மந்தைகளைப் பாதுகாக்கின்ற நாய்களையும் வேட்டையாடுகின்ற நாய்களையும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம் என நபியவர்கள் பின்பு அனுமதியளித்தார்கள்.
நூல் : முஸ்லிம் 4104
கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக நாய்களை வளர்க்கலாம் என்றால் அதை விற்பனையும் செய்யலாம்.
அது போல் நாய்கள் மூலம் வேட்டையாடுவதை அல்லாஹ் அனுமதிக்கிறான்.
“தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அவை(வேட்டையாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன” எனக் கூறுவீராக! அவை உங்களுக்காகப் பிடித்துக் கொண்டு வந்ததை உண்ணுங்கள்! (அதை அனுப்பும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.
திருக்குர்ஆன் 5:4
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நாய்கள் மூலம் வேட்டையாடுவதை அனுமதித்துள்ளனர். எனவே வேட்டையாடுவதற்கு ஏற்ற நாய்களை வியாபாரம் செய்து பொருள் ஈட்டலாம்.
صحيح البخاري 2322 – حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَمْسَكَ كَلْبًا، فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ، إِلَّا كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ»، قَالَ ابْنُ سِيرِينَ، وَأَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِلَّا كَلْبَ غَنَمٍ أَوْ حَرْثٍ أَوْ صَيْدٍ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நாய் வைத்திருக்கின்றாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய் விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருட்டு போகாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர.
நூல் : புகாரி 2322
தடை செய்யப்பட்ட பிராணிகளின் தோல் உண்பதற்குத்தான் தடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பதப்படுத்தி செருப்பாகவோ, தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளும் பாத்திரமாகவோ, இடுப்பு பட்டையாகவோ, கைப்பையாகவோ பயன்படுத்த அனுமதி உள்ளது. எனவே பாடம் செய்யப்பட்ட தோல்களை விற்கலாம்.
உதாரணமாக, இறந்த ஆட்டை நபித்தோழர்கள் பயன்படுத்தாமல் இருந்தபோது, இந்த ஆட்டின் தோலை நீங்கள் பயன்படுத்தலாமே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
صحيح البخاري
1492 – حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: ” وَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً مَيِّتَةً، أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟» قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ: قَالَ: «إِنَّمَا حَرُمَ أَكْلُهَا»
மைமூனா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண் ஒருவருக்கு ஓர் ஆடு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அது இறந்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கடந்து சென்றபோது, அதனுடைய தோலை எடுத்து, அதைப் பதப்படுத்தி அதிலிருந்து நீங்கள் பயன் பெற்றிருக்கலாமே? என்று கேட்டார்கள். அதற்கு, அது செத்தது என்று (தோழர்கள்) பதிலளித்தனர். அதைச் சாப்பிடுவதுதான் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி 1492
صحيح مسلم
840 – حَدَّثَنِى إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا وَقَالَ ابْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا عَمْرُو بْنُ الرَّبِيعِ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ يَزِيدَ بْنِ أَبِى حَبِيبٍ أَنَّ أَبَا الْخَيْرِ حَدَّثَهُ قَالَ رَأَيْتُ عَلَى ابْنِ وَعْلَةَ السَّبَئِىِّ فَرْوًا فَمَسِسْتُهُ فَقَالَ مَا لَكَ تَمَسُّهُ قَدْ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ قُلْتُ إِنَّا نَكُونُ بِالْمَغْرِبِ وَمَعَنَا الْبَرْبَرُ وَالْمَجُوسُ نُؤْتَى بِالْكَبْشِ قَدْ ذَبَحُوهُ وَنَحْنُ لاَ نَأْكُلُ ذَبَائِحَهُمْ وَيَأْتُونَا بِالسِّقَاءِ يَجْعَلُونَ فِيهِ الْوَدَكَ.
அபுல்கைர் மர்ஸத் பின் அப்தில்லாஹ் அல்யஸனீ கூறுகிறார்
அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ அவர்கள் தோலாடை ஒன்றை அணிந்திருப்பதைக் கண்டேன். அதைத் தடவிப் பார்த்தேன். அப்போது அவர்கள், “ஏன் இதைத் தடவிப் பார்க்கிறீர்கள்? நான் இதை (அணிவது) பற்றி அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நாங்கள் மேற்கே வசித்து வருகிறோம். எங்களுடன் (ஆப்பிரிக்கர்களான) பர்பர் இன மக்களும் அக்னி ஆராதகர்(களான மஜூசி)களும் வசித்து வருகின்றனர். அவர்கள் அறுத்த ஆடுகள் எங்களிடம் கொண்டு வரப்படுவதுண்டு. ஆனால், அவர்கள் அறுத்ததை நாங்கள் சாப்பிடுவதில்லை. மேலும், அவர்கள் தோல் பைகளில் கொழுப்புகளை வைத்து எங்களிடம் கொண்டு வருகின்றனரே (அந்தத் தோலை நாங்கள் பயன்படுத்தலாமா?) என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நாங்கள் இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அதற்கு அவர்கள், “அதைப் பதனிடுவதே அதைத் தூய்மையாக்கி விடும் என்று பதிலளித்தார்கள்” என்றார்கள்.
நூல் : முஸ்லிம் 840
செத்த ஆட்டின் தோல் மட்டுமின்றி ஹராமாக்கப்பட்ட எந்தப் பிராணியின் தோலாயினும் பாடம் செய்யப்பட்டால் அது தூய்மையாகிவிடும். பாடம் செய்யப்பட்ட தோல்களால் செய்யப்பட்ட ஆடைகள், கைப்பைகள், தண்னீர் துறுத்திகள், இடுப்பு பட்டைகள், காலணிகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது எந்தப் பிராணியின் தோலால் செய்யப்பட்டது என்பதற்கு முக்கியத்துவம் இல்லை.
صحيح مسلم
838 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ وَعْلَةَ أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِذَا دُبِغَ الإِهَابُ فَقَدْ طَهُرَ ».
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை அடைந்துவிடும்.
நூல் : முஸ்லிம் 838
தோல் பதனிடப்பட்டால் அது தூய்மையாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது ஹராமாக்கப்பட்ட பிராணிகளின் தோலைப் பற்றியதாகத் தான் இருக்க முடியும். முறையாக அறுக்கப்பட்ட ஹலாலான பிராணிகளைப் பொருத்த வரை மலஜலம் தவிர அதன் அனைத்து பாகங்களுமே தூய்மையானவை தான். அதனால் தான் அதை நாம் உண்ணுகிறோம்.
உண்ண அனுமதிக்கப்படாத பிராணிகள் தூய்மையற்றவையாக உள்ளதால் அதன் தோலும் தூய்மையற்றதாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும். எனவேதான் தோல் பதனிடப்பட்டால் அது தூய்மையாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளிக்கின்றனர்.
4241 – أخبرنا قتيبة وعلي بن حجر عن سفيان عن زيد بن أسلم عن بن وعلة عن بن عباس قال قال رسول الله صلى الله عليه و سلم : أيما إهاب دبغ فقد طهر
எந்தத் தோலாக இருந்தாலும் பதனிடப்பட்டால் அது தூய்மையடைந்து விடும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறனார்கள்.
நூல்கள் : நஸாயீ, அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா
السنن الكبرى للبيهقي
(اخبرنا) أبو القاسم عبد الرحمن بن عبيدالله بن عبد الله بن الحربى من أهل الحربية ببغداد انا أبو بكر محمد بن عبد الله الشافعي انا ابراهيم بن الهيثم ثنا على بن عياش ثنا محمد بن مطرف عن زيد بن اسلم عن عطاء بن يسار عن عائشة عن النبي صلى الله عليه وسلم قال طهور كل اهاب دباغه ، رواته كلهم ثقات.
பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : பைஹகீ
மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் கூடுதலாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். முதல் ஹதீஸில் எந்தத் தோலாயினும் பாடம் செய்யப்பட்டால் அது தூய்மையாகி விடும் எனக் கூறுகிறார்கள். இரண்டாவது ஹதீஸில் ஒவ்வொரு தோலும் பாடம் செய்யப்பட்டால் தூய்மையாகி விடும் என்று கூறுகிறார்கள். பாடம் செய்யப்பட்ட எந்தத் தோலாக இருந்தாலும் அது தூய்மையாகிவிடும் என்ற கருத்தை மேற்கண்ட சொற்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
பட்டாடை, தங்க மோதிரம் போன்றவை பொதுவாகத் தடை செய்யப்பட்டவை அல்ல! அவற்றை முஸ்லிம் ஆண்கள் பயன்படுத்துவதற்கு மட்டுமே தடை உள்ளது.
இது போன்று பொதுவாகத் தடை செய்யப்படாமல் குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் தடுக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யலாம். இதற்கு மார்க்கத்தில் தெளிவான அனுமதி உள்ளது.
صحيح البخاري
948 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ: أَخَذَ عُمَرُ جُبَّةً مِنْ إِسْتَبْرَقٍ تُبَاعُ فِي السُّوقِ، فَأَخَذَهَا، فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ابْتَعْ هَذِهِ تَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَالوُفُودِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ» فَلَبِثَ عُمَرُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَلْبَثَ، ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجُبَّةِ دِيبَاجٍ، فَأَقْبَلَ بِهَا عُمَرُ، فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: إِنَّكَ قُلْتَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ» وَأَرْسَلْتَ إِلَيَّ بِهَذِهِ الجُبَّةِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَبِيعُهَا أَوْ تُصِيبُ بِهَا حَاجَتَكَ»
உமர் (ரலி) அவர்கள் கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலை பேச முற்பட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி, பெருநாளிலும் தூதுக்குழுக்கள் தங்களிடம் வரும்போதும் (அணிந்து) அலங்கரித்துக் கொள்ளலாமே! என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடையாகும் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் நாடிய நாட்கள் வரை (இது பற்றி ஏதும் கேட்காமல்) பொறுமையாக இருந்தார்கள். பிறகு (ஒருநாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீள அங்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை என்னிடம் கொடுத்தனுப்பி உள்ளீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை நீங்கள் விற்று விடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்) என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 948
தடுக்கப்பட்ட பட்டாடையை விற்று பயன்படுத்திக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.
صحيح البخاري
886 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، رَأَى حُلَّةً سِيَرَاءَ عِنْدَ بَابِ المَسْجِدِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ لَوِ اشْتَرَيْتَ هَذِهِ، فَلَبِسْتَهَا يَوْمَ الجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ» ثُمَّ جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا حُلَلٌ، فَأَعْطَى عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، مِنْهَا حُلَّةً، فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، كَسَوْتَنِيهَا وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا» فَكَسَاهَا عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَخًا لَهُ بِمَكَّةَ مُشْرِكًا
(ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் நுழைவாயிலருகே கோடு போட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால் ஜுமுஆ நாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போதும் அணிந்து கொள்ளலாமே என்று சொன்னார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மறுமையில் எந்தப் பேறும் இல்லாதவர்தாம் (இம்மையில்) இதை அணிவார் என்று கூறினார்கள். பின்னர் அதே வகையைச் சேர்ந்த சில பட்டு அங்கிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றில் ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடுக்கிறீர்களே! (பனூ தமீம் குலத்து நண்பர்) உதாரித் அவர்கள் வழங்கிய கோடுபோட்ட பட்டு அங்கி விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதை நீங்கள் அணிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக உமக்கு நான் கொடுக்கவில்லை! (அதன் மூலம் வேறு ஏதேனும் வகையில் நீங்கள் பயன்பெற்றுக் கொள்ளவே நான் வழங்கினேன்) என்று கூறினார்கள். ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்த இணைவைப்பாளரான தம் சகோதரர் ஒருவருக்கு அதை அணியக் கொடுத்து விட்டார்கள்.
நூல் : புகாரி 886, 2612
இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த அனுமதியில் அடிப்படையில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்பளிப்பாகக் கொடுத்த பட்டாடையை முஸ்லிம் அல்லாத தனது சகோதரருக்கு உமர் (ரலி) அவர்கள் அன்பளிப்புச் செய்துள்ளனர்.
பட்டாடை ஆண்களுக்குத் தடுக்கப்பட்டிருந்தாலும் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதால் அதை விற்கலாம். அன்பளிப்புச் செய்யலாம். அது போல் அதைப் பெற்றுக் கொள்பவர் தனது குடும்பத்துப் பெண்களுக்குக் கொடுக்கலாம். அல்லது அதை விற்றும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
صحيح البخاري
2104 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ حَفْصٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ بِحُلَّةِ حَرِيرٍ، أَوْ سِيَرَاءَ، فَرَآهَا عَلَيْهِ فَقَالَ: «إِنِّي لَمْ أُرْسِلْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا، إِنَّمَا يَلْبَسُهَا مَنْ لاَ خَلاَقَ لَهُ، إِنَّمَا بَعَثْتُ إِلَيْكَ لِتَسْتَمْتِعَ بِهَا» يَعْنِي تَبِيعَهَا
கோடு போடப்பட்ட (மேலங்கியும் கீழங்கியும் அடங்கிய) ஒரு ஜோடிப் பட்டாடையை உமர் (ரலி) அவர்கள் அணிந்திருப்பதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை நீர் அணிவதற்காக நான் உம்மிடம் அனுப்பவில்லை! (மறுமையின்) பாக்கியமற்றவர்கள் தாம் இதை அணிவார்கள்! நீர் இதில் பயன்பெற்றுக்கொள்ள வேண்டும்; அதாவது விற்க வேண்டும் என்பதற்காகவே உமக்குக் கொடுத்தனுப்பினேன்! என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2104
5632 قَالَ كَانَ حُذَيْفَةُ بِالْمَدَايِنِ فَاسْتَسْقَى فَأَتَاهُ دِهْقَانٌ بِقَدَحِ فِضَّةٍ فَرَمَاهُ بِهِ فَقَالَ إِنِّي لَمْ أَرْمِهِ إِلَّا أَنِّي نَهَيْتُهُ فَلَمْ يَنْتَهِ وَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا عَنْ الْحَرِيرِ وَالدِّيبَاجِ وَالشُّرْبِ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ وَقَالَ هُنَّ لَهُمْ فِي الدُّنْيَا وَهِيَ لَكُمْ فِي الْآخِرَةِ رواه البخاري
ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) “அல்மதாயின் (தைஃபூன்) நகரத்தில் இருந்தார்கள். அப்போது பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (மஜூஸியான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரம் (ஒன்றில் தண்ணீர்) கொண்டு வந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவர் மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர்களிடம்) “நான் இவரை(ப் பல முறை) தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்த்துக் கொள்ளாததால்தான் நான் இதை அவர் மீது வீசியெறிந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியக் கூடாதென்றும் தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். மேலும் அவர்கள், “அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்” என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.
நூல் : புகாரி 5632
பட்டு, தங்கம், வெள்ளி இவை அனைத்தையும் வியபாரம் செய்யலாம்.
பூஜிக்கப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை விற்கலாமா
முஸ்லிமல்லாதவர்கள் குறிப்பாக இந்து மதத்தவர்கள் விவசாயம் செய்தாலும், கட்டடம் கட்டினாலும், ஒரு கடை திறந்தாலும் பூஜை செய்யாமல் துவக்க மாட்டார்கள். அல்லாஹ் அல்லாதவர்களுக்கு படையல் செய்யப்பட்டதை நாம் சாப்பிடக் கூடாது என்பதால் இதைச் சாப்பிடலாமா? விற்கலாமா என்ற சந்தேகம் எழலாம்.
பூஜை செய்து விட்டு அவர்கள் விவசாயம் செய்வதால் அவர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் அரிசி, கோதுமை, இன்னபிற விளை பொருட்களை நாம் உண்ணலாமா? அவர்கள் பூஜை செய்துவிட்டு கட்டிய கட்டடங்களை விலைக்கு வாங்கலாமா? அல்லது வாடகை கொடுத்து அதில் குடியிருக்கலாமா? கடையைத் துவக்கும் நாளிலிலும் அன்றாடம் கடைகளைத் திறக்கும் போதும் பூஜை செய்துவிட்டுத் தான் ஆரம்பிப்பார்கள். எனவே அவர்களின் கடைகளில் பொருட்களை வாங்கலாமா? என்றெல்லாம் கூட சந்தேகம் வரும்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தச் சந்தேகம் சரியானது போல் தோன்றினாலும் சிந்தித்துப் பார்க்கும் போது இந்தச் சந்தேகத்துக்கு அவசியம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒரு பொருளையே சிலைகளுக்குப் படைப்பதும் அந்தப் பொருளின் நன்மைக்காக சிலைகளிடம் வேண்டுவதும் வெவ்வேறானவை. குறிப்பிட்ட ஒரு உணவை கடவுளுக்கு படைக்கிறோம் என்று சொல்லி பூஜை போடுபவர்கள் அந்தப் பொருளில் தங்களுக்கு உள்ள உரிமையை விட்டு விடுவார்கள். அதைப் பிரசாதமாக வழங்கி விடுவார்கள்.
ஆனால் ஒரு வயலில் பூஜை போடுபவர்கள் அந்த வயலைக் கடவுளுக்குப் படைப்பதில்லை. பூஜை செய்த பின்னர் அந்த வயலில் தங்கள் உரிமையை விட்டு விடுவதில்லை. பூஜைக்குப் பின் அந்த வயலைப் பலருக்கும் பங்கு போட்டுக் கொடுப்பதில்லை. எனவே அவர்கள் வயலைக் கடவுளுக்குப் படைக்கவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது. வயலில் விளைச்சல் கிடைப்பதற்காக அவர்கள் வேண்டுதல் தான் செய்கிறார்கள்.
ஒரு ஆட்டைக் கடவுளுக்குப் படைப்பதாகச் சொல்பவர்கள் அதன் பின்னர் அந்த ஆட்டில் தங்களுக்கான உரிமையைக் கோர மாட்டார்கள். அதை வெட்டி பங்கிட்டு விடுவார்கள். இது போன்றவை தான் நமக்கு ஹராமாகும்.
வயலை, கட்டடத்தை அவர்கள் கடவுளுக்காக ஆக்குவதில்லை. தமக்குரியதாகவே வைத்துக் கொள்வதால் அது படையலில் சேராது.
பூஜை செய்து விட்டு உற்பத்தி செய்த விளைபொருட்களை இலவசமாகவோ விலைகொடுத்தோ வாங்கி பயன்படுத்தலாம். பூஜைகள் செய்து கட்டப்பட்ட கட்டடத்தில் குடியிருக்கலாம். விலைக்கு வாங்கலாம்.
ஆனால் கடவுளுக்குப் படைக்கும் நம்பிக்கையில் படைக்கப்பட்ட பொருளாக இருந்தால் அதை இலவசமாகவோ விலை கொடுத்தோ வாங்கியோ பயன்படுத்துவது கூடாது.
முன்பேர வணிகம்
எந்தப் பொருளையும் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி விற்பதும் வாங்குவதும் தான் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வியாபாரமாகும். நாளைக்கு நமக்கு வரக்கூடிய பொருளுக்கு இன்று விலை நிர்ணயித்துக் கொண்டால் அதில் விற்பவர் அல்லது வாங்குபவர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய வியாபாரம் தான் முன்பேர வணிகம் என்று கூறப்படுகிறது.
ஒரு விவசாயி தனது வயலில் விளையும் நெல்லை ஒரு மூட்டை 500 ரூபாய்க்குத் தருவதாக வியாபாரியிடம் ஒப்பந்தம் செய்கிறார். அறுவடை நாளில் நெல் விலை 600 ஆகி விட்டால் விவசாயிக்கு அநியாயமாக 100 நூறு ரூபாய் நட்டம். அவரது வயிறு எரிய இது காரணமாக ஆகி விடும். நாம் இப்படி ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால் நமக்கு நூறு நூறு ரூபாய் அதிகம் கிடைத்திருக்குமே என்று என்று ஏக்கம் கொள்வார்.
அது போல் ஒரு மூட்டை நெல் 400 ஆக குறைந்து விட்டால் விவசாயிக்கு நூறு ரூபாய் அதிகம் கிடைத்தாலும் வியாபாரிக்கு நூறு ரூபாய் இழப்பாகிறது.
இது தங்கம் டாலர் இன்னும் அனைத்துப் பொருட்களிலும் நடைமுறைபடுத்தப்படுகிறது.
இது போன்ற வியாபாரம் சிறந்ததல்ல என்றாலும் அன்றைக்கு நபித்தோழர்களுக்கு இருந்த வறுமை காரணமாக செல்வந்தர்களிடம் முன் கூட்டியே பணம் பெற்றுக் கொண்டு இது போல் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார்கள்.
صحيح البخاري
2239 – حدثنا عمرو بن زرارة، أخبرنا إسماعيل بن علية، أخبرنا ابن أبي نجيح، عن عبد الله بن كثير، عن أبي المنهال، عن ابن عباس رضي الله عنهما، قال: قدم رسول الله صلى الله عليه وسلم المدينة، والناس يسلفون في الثمر العام والعامين، أو قال: عامين أو ثلاثة، شك إسماعيل، فقال: «من سلف في تمر، فليسلف في كيل معلوم، ووزن معلوم»، حدثنا محمد، أخبرنا إسماعيل، عن ابن أبي نجيح، بهذا: «في كيل معلوم، ووزن معلوم»
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்களில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். நபி (ஸல்) அவர்கள், ஒருவர், (குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்தால் குறிப்பிட்ட எடைக்காகவும் குறிப்பிட்ட அளவுக்காகவும் கொடுக்கட்டும்! என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2239, 2240, 2241
வெறும் நிலமாக இருக்கும் போதும் பயிர்கள் முற்றாத நிலையிலும் முன்பணம் வாங்கக் கூடாது. பிஞ்சாக இருக்கும் போதும் முன்பணம் பெறக் கூடாது. இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யலாம் என்ற அளவுக்கு பயிர்கள் வளர்ந்திருந்தால், இன்னும் சில நாட்களில் காயாக ஆகிவிடும், கனியாக ஆகிவிடும் என்ற அளவுக்கு காய்கள் முற்றி இருந்தால் மட்டுமே முன்பணம் பெறலாம்.
صحيح البخاري 2246 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا عَمْرٌو، قَالَ: سَمِعْتُ أَبَا البَخْتَرِيِّ الطَّائِيَّ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ السَّلَمِ فِي النَّخْلِ، قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى يُوكَلَ مِنْهُ، وَحَتَّى يُوزَنَ» فَقَالَ الرَّجُلُ: وَأَيُّ شَيْءٍ يُوزَنُ؟ قَالَ رَجُلٌ إِلَى جَانِبِهِ: حَتَّى يُحْرَزَ، وَقَالَ مُعَاذٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، قَالَ أَبُو البَخْتَرِيِّ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
அபுல் புக்தரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுப்பது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்ணும் பக்குவத்தை அடையும் முன்பும் அதை எடை போடுவதற்கு முன்பும் அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்! என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், (மரத்திலுள்ளதை) எவ்வாறு எடைபோடுவது? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார். அவர்களுக்கு அருகிலிருந்த மற்றொரு மனிதர் எடை போடுவதன் கருத்து (அதன் எடை இவ்வளவு இருக்கும் என்று) மதிப்பிடுவதாகும்! என்றார்.
நூல் : புகாரி 2246
மல்டிலெவல் மார்க்கெட்டிங் கூடுமா?
எம்.எல்.எம் (மல்டிலெவல் மார்க்கெட்டிங்) சங்கிலித்தொடர் வியாபாரம் என்பதில் பல வகைகள் உள்ளன. அனைத்து முறைகளிலும் ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவைதான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வதுதான் மிகப் பொருத்தமானதாகும்.
சாதரணமான ஒரு படுக்கையை இது அதிஅற்புதமான சக்திவாய்ந்த மூலிகைப் படுக்கை அல்லது காந்தப் படுக்கை. இதில் படுத்தால் குறுக்கு வலி குணமாகிவிடும். மலட்டுத் தன்மை நீங்கி விடும். கேன்சர் குணமாகி விடும். இது போன்ற ஒரு கண்டுபிடிப்பை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்த ஆராய்ச்சி மையம் இதற்கு சர்ட்டிஃபிகேட் வழங்கியுள்ளது என்று பலவிதமான பொய்களைக் கூறி நம்பவைத்து மிக அதிகமான விலைக்கு விற்பனை செய்து விடுவார்கள்.
நீங்கள் ஒரு ஐந்து உறுப்பினர்களிடம் இந்தப் படுக்கையை வாங்க வைத்தால் ஒவ்வொரு படுக்கையை விற்பதற்கும் உங்களுக்கு ஜந்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என்பார்கள். ஐந்து உறுப்பினர்களை நாம் சேர்த்தால் நமக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் கிடைத்துவிடும்.
இதனைப் பட்டாணி அளவில் வைத்தாலே அதிக நுரை வரும். இதில் பல நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றெல்லாம் பொய் கூறி நம்பவைத்து அதிகமான விலையில் சாதாரணப் பற்பசையை விற்பனை செய்வார்கள்.
இந்த வியாபாரத்தைப் பற்றி விளக்குகிறோம் என்ற பெயரில் ஸ்டார் ஹோட்டலில் கூட்டம் கூட்டி லேப்டாப்பில் பல விதமான காட்சிகளைக் காட்டுவார்கள். நான் மிகவும் ஏழையாக இருந்தேன். இந்த வியாபாரத்தில் சேர்ந்தவுடன் மிகப் பெரும் பணக்காரனாகி விட்டேன் என்றெல்லாம் சிலர் பேசும் காட்சிகளைக் காட்டுவார்கள்.
இந்தப் பணத்தை அடைவதற்காக கம்பெனி தன்னிடம் எதையெல்லாம் கூறி ஏமாற்றி விற்பனை செய்ததோ அது போன்று இவரும் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் கூறி வியாபாரம் செய்வார். இவருக்குக் கீழ் உள்ள ஐந்து பேரும் தங்களுக்குக் கீழ் தலா ஐந்து நபர்களைச் சேர்த்தால் இவருக்கு ஒரு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் ரூபாய் இலாபமாகக் கிடைக்கும். இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இவர் இலாபமாக வழங்குவார்.
தான் யாரிடம் பொருள் வாங்கினோம் என்பதை மட்டும்தான் ஒவ்வொருவரும் அறிவார்கள். யாரும் கம்பெனியோடு நேரடியாகத் தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது.
இது போன்ற பொருட்களை எந்தக் கடையிலும் வைத்து விற்பனை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இதனை வாங்கிய மக்கள் உரிய பலன் கிடைக்காமல் ஏமாறும்போது இதனை விற்பனை செய்யும் மூலத்தைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக இது போன்ற உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே வியாபாரம் செய்வார்கள்.
நாம் உதாரணத்திற்குத்தான் பொருட்களையும் அதற்கு வழங்கப்படும் இலாபத்தையும் குறிப்பிட்டுள்ளோமே தவிர பல கம்பெனிகள் பல பொருட்களைப் பலவிதமான இலாப சதவிகிதத்தில் ஏமாற்றி விற்பனை செய்கின்றன.
இவ்வாறு பலவிதமான பொய்களைக் கூறி ஏமாற்றி செய்யப்படும் வியாபாரம் எப்படி ஹலாலான வியாபாரமாக இருக்க முடியும்.?
இதில் இன்னொரு வகையும் உள்ளது. தங்கள் கம்பெனியின் தயாரிப்புகளை விற்பதற்கு உறுப்பினராகச் சேர வேண்டும். நாங்கள் தயாரிக்கும் பொருளை நீங்கள் விற்க வேண்டும் என்று கூறுவார்கள். பொருளின் தயாரிப்புச் செலவை விட பன்மடங்கு அதிகமாக விலை நிர்ணயம் செய்வார்கள். முப்பதாயிரம் பணம் கட்டி இந்த நிறுவனத்தில் நாம் உறுப்பினராகச் சேர்ந்து இவர்களின் தயாரிப்புகளை விற்று பெரிதாக சம்பாதிக்க முடியாது. ஆயிரக்கணக்கான கம்பெனிகளின் தயாரிப்புகளை குறைந்த விலையில் விற்கும் வியாபாரிகளுக்கே வியாபாரம் நடப்பதில்லை. ஒரு பற்பசையையும் ஒரு தைலத்தையும் மட்டும் விற்கும் முகவர்களாக இருந்தால் தினமும் தேநீர் குடிப்பதற்குக் கூட சம்பாதிக்க முடியாது.
அப்படி இருந்தும் இதில் எப்படி பணம் கட்டி உறுப்பினராகிறார்கள்? அங்கு தான் சங்கிலித் தொடர் பித்தலாட்டம் துவங்குகிறது. நீங்கள் இந்த வியாபாரத்தின் மூலம் மட்டும் பெரிதாக சம்பாதிக்க முடியாது. எனவே உங்களைப் போல் முப்பதாயிரம் கட்டக் கூடிய அதிக உறுப்பினர்களைப் பிடித்துத் தந்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். அதன் மூலம் நீங்கள் செலுத்திய கட்டணத்தை விட பலமடங்கு சம்பாதிக்கலாம் என்று வலை விரிப்பார்கள்.
அதில் சேர்பவர்களும் வீடுவீடாக அலைந்து பொருட்களை விற்பதற்காகச் சேர்வதில்லை. மாறாக ஏமாளிகளை உறுப்பினர்களாக ஆக்கி அவர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்க துணைபோவதன் மூலம் சம்பாதிக்கலாம் என்பதால் தான் இதில் உறுப்பினராக சேர்கிறார்கள்.
பொருளை விற்பது இதன் நோக்கமில்லை. மாறாக மோசடி நிறுவனத்தில் ஏமாறுவதற்காக இன்னும் பல ஏமாளிகளைப் பிடித்துக் கொடுத்து அவர்களுக்கு ஏமாற்றும் கலையைக் கற்றுக் கொடுப்பது தான் இதில் உள்ளது. நல்ல மனிதர்களை அயோக்கியர்களாக மாற்றி அதன் மூலம் லாபம் அடைவது ஒருக்காலும் ஹலாலாக முடியாது.
தான் இழந்த தொகையை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் பணம் கட்டியவர் மற்றவர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி உறுப்பினராக ஆக்குவார்.
உறுப்பினர்களைச் சேர்த்து விடுவதற்காக மட்டும் நமக்கு ஆதாயம் கிடைப்பதில்லை. நாம் சேர்த்துவிடுகின்ற உறுப்பினர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கும் கமிஷன் தரப்படும் என்பதால் இது கூடுதல் ஆதாயமாகக் கிடைக்கிறது.
இத்தோடு நில்லாமல் நம்மால் சேர்த்து விடப்பட்டவர்கள் இன்னும் சிலரைச் சேர்த்து விடுவார்கள். அவர்கள் செய்யும் விற்பனையிலிருந்தும் நமக்கு ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரம் இலாபமாகக் கிடைக்கும்.
இவ்வாறு தொடர்ந்து சங்கிலி போன்று செல்லும்போது ஒவ்வொரு மட்டத்தினர் செய்கின்ற வியாபாரத்திலிருந்தும் முதலாமவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பங்கு கிடைக்கும். இப்படி ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் செய்கின்ற வியாபாரத்தின் இலாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு கிடைக்கும்.
சில நேரங்களில் 100 பேர், 200 பேர் என்று அதிகமான நபர்கள் சங்கிலித் தொடராகச் சேரும்போது முதல் நிலையில் உள்ளவருக்கு இலட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்.
நம்முடைய எந்த முதலீடும் இல்லாமல் மற்றவர்கள் செய்கின்ற உழைப்பிற்கு நமக்கு லாபம் கிடைப்பது எப்படி மார்க்க அடிப்படையில் ஹலாலான சம்பாத்தியமாக இருக்க முடியும்?
நாம் ஒருவரை உறுப்பினாராகச் சேர்த்து விட்டதால் அவர் செய்யும் வியாபாரத்தில் நாம் லாபம் பார்ப்பது சுரண்டல் என்பதில் சந்தேகம் இல்லை. நம்மால் சேர்த்து விடாமல் மற்றவர்களால் சேர்த்து விடப்பட்டவர்களின் வியாபாரத்திலும் நாம் லாபம் பார்ப்பது சுரண்டலுக்கு மேல் சுரண்டலாகும்.
பொதுவாக எந்தெந்த வியாபாரங்களில் எல்லாம் ஏமாற்றுதல், மோசடி, பொய் போன்றவை காணப்படுகிறதோ அவை அனைத்துமே ஹராமான வியாபாரங்கள்தான்.
தீமைக்குப் பயன்படும் பொருளை விற்கலாமா?
தீமையான காரியத்திற்கு உதவி செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான். எந்தத் தீய காரியத்திற்கும் ஒரு முஸ்லிம் துணை போகக்கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.
நீங்கள் நல்ல காரியங்களிலும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது.
திருக்குர்ஆன் 5:2
தீமையான காரியங்களுக்கு உதவக் கூடாது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தீமையான காரியங்களுக்கு உதவுவது என்பதைப் புரிந்து கொள்வதில்தான் கருத்து வேறுபாடு உள்ளது.
தீமைக்குத் துணை போகக்கூடாது என்று கூறும் மேற்கண்ட வசனத்தில் நன்மைக்கு உதவுமாறும் கூறப்படுகிறது. நன்மைக்கு உதவுதல் என்பதை எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அவ்வாறுதான் தீமைக்குத் துணை செய்தல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் பள்ளிவாசல் ஒன்றைக் கட்ட எண்ணுகிறார். அதற்கான வேலையிலும் ஈடுபடுகிறார். பள்ளிவாசல் கட்டுவது நல்ல காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கட்டடத்திற்குத் தேவையான பொருட்களை ஒரு வணிகரிடம் அவர் வாங்குகிறார். பள்ளிவாசல் கட்டும் நல்ல பணிக்காக அந்த வணிகர் தமது சரக்குகளை விற்றதால் அவர் நன்மைக்குத் துணை செய்தவராக முடியாது. இவர்தான் பள்ளிவாசல் கட்ட உதவியவர் என்று அவரைப் பற்றி நாம் குறிப்பிடுவதில்லை. அந்த வணிகர் இலவசமாக அவற்றை வழங்கினால் அல்லது பள்ளிவாசல் கட்டும் பணி என்பதற்காக மற்ற எவருக்கும் விற்பதை விட சலுகை விலைகளில் வழங்கினால் மட்டுமே அவர் பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு உதவினார் என்போம்.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட பொருளை நாம் விற்பனை செய்கிறோம். நம்மிடம் அப்பொருளை வாங்கியவர் தீய காரியத்துக்குப் பயன்படுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். இது தீமைக்குத் துணை புரிவதாக ஆகாது. ஒரு சிலை நிறுவுவதற்காக அதே வணிகரிடம் கட்டுமானப் பொருட்களை வாங்குகின்றனர். அந்த வணிகர் இலவசமாக அப்பொருளைக் கொடுத்தாலோ அது சிறந்த பணி என்று கருதி விலையில் சலுகை அளித்தாலோ அப்போது அவர் தீமைக்குத் துணை செய்தவராவார். அவ்வாறு இல்லாமல் மற்ற பணிகளுக்கு விற்பது போல் அவர் விற்பனை செய்தால் அவர் தீமைக்குத் துணை போனவராக மாட்டார்.
நன்மையான காரியத்துக்கு உதவுதல் என்பதில் உதவுதல் என்பதை எந்தப் பொருளில் நாம் விளங்குகிறோமோ அதே பொருளில்தான் தீமையான காரியங்களுக்கு உதவுதல் என்பதிலும் உதவுதல் என்பதற்குப் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் தீமைக்கு உதவக் கூடாது என்று சொல்வதற்கு ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்படும் 5:2 வசனம்தான் நன்மைக்கு உதவ வேண்டும் எனவும் கூறுகின்றது. இரண்டிலும் ஒரே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் முக்கியமான நிபந்தனையை நாம் கவனத்தில் கொள்ள வைக்க வேண்டும். விற்பனை செய்யப்படும் பொருள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பூவைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் தடை விதிக்கவில்லை. எனவே பூவை நாம் எவருக்கும் விற்கலாம். வாங்குபவர் அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம்.
இலவசமாகவோ, மற்ற காரியங்களை விட சலுகை விலையிலோ வழங்கும்போதுதான் எந்தக் காரியங்களுக்குப் பயன்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஒரு ஜவுளிக் கடையில் துணி விற்பனை செய்யும்போது வாங்கும் மனிதன் அதனைக் கற்சிலைக்கு அணிவிப்பதற்காக பயன்படுத்துவானோ வேறு எதற்கும் பயன்படுத்துவானோ என்றெல்லாம் நாம் கவனிக்கத் தேவையில்லை. தேங்காய் வியாபாரி, தன்னிடம் வாங்கப்படும் தேங்காய்கள் சிலைகள் முன்னே உடைக்கப்படுமோ என்றெல்லாம் புலன் விசாரணை செய்ய வேண்டியதில்லை.
ஆனால் தேங்காயின் விலை பத்து ரூபாய் என்று நாம் சொன்ன பிறகு சாமிக்கு உடைக்க வேண்டும் விலை குறைத்து தாருங்கள் என்று கேட்கப்படும்போது அதற்காக விலை குறைத்து கொடுத்தால் அல்லது இலவசமாகக் கொடுத்தால் அது தீமைக்குத் துணை போன குற்றத்தில் சேரும். அனைவருக்கும் கொடுக்கக் கூடிய விலையில் கொடுத்தால் தீமைக்குத் துணை போன்ற குற்றம் வராது.
صحيح البخاري 2068 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ، الرَّهْنَ فِي السَّلَمِ، فَقَالَ: حَدَّثَنِي الأَسْوَدُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ»
போர்க்களத்தில் அணிந்து கொள்ளும் தமது கவசத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் அடகு வைத்துள்ளார்கள்.
நூல் : புகாரி : 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467
அந்தக் கவசம் அந்த யூதரால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனிக்கவில்லை.
மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் என்பதற்காக தடுக்கப்பட்ட மதுபானம் போன்றவற்றை முஸ்லிம் அல்லாதவருக்கும் நாம் விற்கக் கூடாது. இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிமல்லாதவருக்கும் மதுபானம் அருந்த அனுமதிக்கப்படாது. ஆனால் பட்டாடை, தங்கம் போன்றவைகளை முஸ்லிம் அல்லாதவர் பயன்படுத்த இஸ்லாமிய அரசு தடுக்காது.
உண்ணவும், பருகவும், பயன்படுத்தவும், வைத்திருக்கவும் எப்பொருட்களுக்கு இஸ்லாம் தடை விதித்து விட்டதோ அவற்றை மட்டுமே விற்கலாகாது. நன்மை தீமை இரண்டு வழிகளிலும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள பொருட்களை நாம் விற்க எந்தத் தடையும் இல்லை. வாங்குபவன் தீமைக்குப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக முடியாது.
ஆல்கஹால் கலந்த ஸ்ப்ரே விற்கலாமா
ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடிய வகையில் இதைப் பயன்படுத்துவது மட்டுமே தவறு. போதை ஏற்படாத வகையில் இதைப் பயன்படுத்தினால் தவறில்லை என்ற முடிவுக்கு வரலாம்.
போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
صحيح البخاري 6124 – حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ، قَالَ لَهُمَا: «يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا» قَالَ أَبُو مُوسَى: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنَ العَسَلِ، يُقَالُ لَهُ البِتْعُ، وَشَرَابٌ مِنَ الشَّعِيرِ، يُقَالُ لَهُ المِزْرُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ»
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் “அல்பித்உ’ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் “மிஸ்ர்’ என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 6124
سنن الترمذي 1865 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ دَاوُدَ بْنِ بَكْرِ بْنِ أَبِي الفُرَاتِ، عَنْ ابْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ»
“அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதீ 1788, நஸயீ 5513
صحيح مسلم 63 – (977) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ أَبُو بَكْرٍ: عَنْ أَبِي سِنَانٍ، وقَالَ ابْنُ الْمُثَنَّى: عَنْ ضِرَارِ بْنِ مُرَّةَ، عَنْ مُحَارِبٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا ضِرَارُ بْنُ مُرَّةَ أَبُو سِنَانٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَهَيْتُكُمْ عَنِ النَّبِيذِ إِلَّا فِي سِقَاءٍ، فَاشْرَبُوا فِي الْأَسْقِيَةِ كُلِّهَا، وَلَا تَشْرَبُوا مُسْكِرًا»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி, நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால், போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.
நூல்: முஸ்லிம் 5325
صحيح مسلم 70 – (1733) وحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَاللَّفْظُ لِقُتَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَمُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى الْيَمَنِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّ شَرَابًا يُصْنَعُ بِأَرْضِنَا يُقَالُ لَهُ الْمِزْرُ مِنَ الشَّعِيرِ، وَشَرَابٌ يُقَالُ لَهُ الْبِتْعُ مِنَ الْعَسَلِ، فَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 5329
மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காகவே இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றன. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் தான் போதை ஏற்படும். எனவே அதைப் பருகுவது கூடாது. உடலில், ஆடையில் பட்டால் நுகர்ந்தால் போதை ஏற்படாது.
மேலும் நறுமணத்தை வெளியில் கொண்டு வந்து ஆடையில் சேர்ப்பிக்கும் வேலையைத் தான் வாசணைத் திரவியங்களில் ஆல்கஹால் செய்கின்றது. பாட்டிலிலிருந்து வெளியே வந்தவுடன் இந்த ஆல்கஹால் காற்றில் பட்டு ஆவியாகி விடுகின்றது. ஆடையில் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. நறுமணம் மட்டுமே ஆடையில் தங்குகிறது.
எனவே ஆல்கஹால் கலந்த வாசணைத் திரவியங்களைப் பயன்படுத்துவதையும் விற்பதையும் மார்க்கம் தடை செய்யவில்லை.
ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்கலாமா
போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா?
இந்த விஷயத்தில் கிடைக்கும் ஆதாரங்கள் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்டதாக உள்ளதால் இது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.
صحيح مسلم 12 – (1984) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ وَائِلٍ الْحَضْرَمِيِّ، أَنَّ طَارِقَ بْنَ سُوَيْدٍ الْجُعْفِيَّ، سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَمْرِ، فَنَهَاهُ – أَوْ كَرِهَ – أَنْ يَصْنَعَهَا، فَقَالَ: إِنَّمَا أَصْنَعُهَا لِلدَّوَاءِ، فَقَالَ: «إِنَّهُ لَيْسَ بِدَوَاءٍ، وَلَكِنَّهُ دَاءٌ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள்; அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், “மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்” என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அது மருந்தல்ல; நோய்” என்றார்கள்.
நூல் : முஸ்லிம் 5256
இந்த ஹதீஸையும் இதே போல் அமைந்த வேறு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு ஹராமான பொருள் கலந்த மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகம் அவர்களின் வாதத்தை நிறுவப் போதுமானதாக இல்லை. மதுவையே மருந்தாகப் பயன்படுத்துவதற்கும் மதுவையும் மற்றும் சில பொருட்களையும் கலந்து மருந்து தயாரிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த ஹதீஸில் அந்த மனிதர் மருந்து தயாரிப்பதாகக் கூறவில்லை. மருந்துக்காக மதுவைக் காய்ச்சுகிறேன் என்று தான் கூறுகிறார். இதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கிறார்கள். சில நோய்களுக்கு மதுவை அருந்தினால் அதில் குனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரது செயல் அமைந்துள்ளது.
எந்த நோய்க்கும் மது மருந்து அல்ல என்ற முடிவைத்தான் இந்த ஹதீஸில் இருந்து எடுக்க முடியும். மது என்ற பெயரை இழந்து மருந்து என்ற நிலையை அடையும் போது அதைத் தடுக்க இது ஆதாரமாக ஆகாது.
தடை செய்யப்பட்டவைகளைக் கொண்டு மருந்து செய்யலாம் என்ற கருத்துக்குத் தான் வலுவான ஆதாரங்கள் உள்ளன.
மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவைகளை நிர்பந்த நிலையில் ஒருவர் செய்தால் அது குற்றமாகாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும்.
நிர்பந்தத்துக்கு ஆளானவர்கள் தடை செய்யப்பட்டதைச் செய்தால் அவர்கள் மீது குற்றம் இல்லை என்று 2:173, 5:3, 6:119, 6:145, 16:115 அல்லாஹ் இவ்வசனங்களில் கூறுகிறான்.
மேற்கண்ட வசனங்களில் இரத்தம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் நிர்பந்தம் காரணமாக ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்தலாம் என்று அனைத்து அறிஞர்களும் கூறுகின்றனர்.
நிர்பந்தம் என்பதன் குறைந்தபட்ச அளவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பினவருமாறு விளக்கியுள்ளனர்.
مسند أحمد 21901 – حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٌ (1) ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ: أَنَّهُمْ قَالُوا: يَا رَسُولَ اللهِ، إِنَّا بِأَرْضٍ تُصِيبُنَا بِهَا الْمَخْمَصَةُ، فَمَتَى تَحِلُّ لَنَا الْمَيْتَةُ؟ قَالَ: إِذَا لَمْ تَصْطَبِحُوا، وَلَمْ تَغْتَبِقُوا، وَلَمْ تَحْتَفِئُوا، فَشَأْنُكُمْ بِهَا “
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்குப் பஞ்சம் ஏற்படுகிறது. எந்த நிலையில் தாமாகச் செத்தவை எங்களுக்கு ஹலாலாகும்?” என்று நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலையில் அருந்தும் பால், மாலையில் அருந்தும் பால் உங்களுக்குக் கிடைக்காவிட்டால் அதை உண்ணலாம் என்றனர்.
நூல்கள்: அஹ்மத் 20893, 20896, தாரமி 1912
ஒரு நாள் உணவு கிடைக்காவிட்டாலே ஒருவன் நிர்பந்த நிலையை அடைந்து விடுகிறான் என்பதை இந்த நபிமொழியில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
ஒரு நாள் பசியை விட நோயில் விழுந்து கிடப்பது அதிக நிர்பந்தம் என்பதை அறிவுடயோர் மறுக்க மாட்டார்கள். எனவே நோய் நிவாரணம் கிடைக்கும் என்றால் தடை செய்யப்பட்டவைகளை மருந்தாக உட்கொள்ள மார்க்கத்தில் தடை இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு கூட்டத்தினர் நோயுற்ற போது அவர்களை ஒட்டகத்தின் சிறுநீரை அருந்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதை அருந்திய உடன் அவர்கள் குணமடைந்தார்கள் என்று ஹதீஸ்களில் காணப்படுகிறது.
صحيح البخاري 1501 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ نَاسًا مِنْ عُرَيْنَةَ اجْتَوَوْا المَدِينَةَ «فَرَخَّصَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتُوا إِبِلَ الصَّدَقَةِ، فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا، وَأَبْوَالِهَا»، فَقَتَلُوا الرَّاعِيَ، وَاسْتَاقُوا الذَّوْدَ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُتِيَ بِهِمْ، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَرَ أَعْيُنَهُمْ، وَتَرَكَهُمْ بِالحَرَّةِ يَعَضُّونَ الحِجَارَةَ
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உக்ல்’ அல்லது உரைனா’ குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே பால் ஒட்டகங்களைச் சென்றடைந்து, அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறியதும் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகப் பராமரிப்பாளரைக் கொன்றுவிட்டனர்; ஒட்கங்களை ஓட்டிச் சென்றனர். முற்பகல் வேளையில் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களிடம் வரவே அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பிடித்து வர ஒரு) படைப் பிரிவை அனுப்பிவைத்தார்கள். நண்பகல் நேரத்தில் அவர்களை(ப் பிடித்து)க் கொண்டு வரப்பட்டது. அவர்களுடைய கைகளையும் கால்களையும் துண்டிக்கச் செய்தார்கள். அவர்களுடைய கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடிடப்பட்டது. பிறகு (மதீனா புறநகரான பாறைகள் மிகுந்த) ஹர்ரா’ பகுதியில் அவர்கள் போடப்பட்டனர். அவர்கள் (நா வறண்டு) தண்ணீர் கேட்டும் அவர்களுக்கு தண்ணீர் புகட்டப்படவில்லை.
அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இவர்கள் (பொது மக்களுக்குரிய ஒட்டகங்களைத்) திருடினார்கள்; (ஒட்டகப் பராமரிப்பாளரைக்) கொலை செய்தார்கள்; நம்பிக்கை கொண்ட பின்னர் நிராகரிப்பாளர்களாய் மாறினார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டனர். (இத்தகைய கொடுங்செயல் புரிந்ததனால்தான் அவர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை அளிக்க நேர்ந்தது.)
புகாரி 1501, 3018, 4192, 4610, 5658, 5686, 5727, 6802, 6804, 6805
சிறுநீர் அசுத்தமானது என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். 7:157 வசனத்தின் மூலமும் இதை நாம் அறிய முடியும்.
அதை மருத்துவத்துக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருந்தச் சொல்லியுள்ளதில் இருந்து தடை செய்யப்பட்ட காரியங்களை மருத்துவத்துக்காக செய்யலாம் என்பதை அறிந்து கொள்கிறோம்.
பெரும்பாலான மருத்துவ முறைகள் தடை செய்யப்பட்ட முறைகளாகத் தான் இருக்கும். அது போல் பெரும்பாலான மருந்துகளும் தடை செய்யப்பட்ட பொருள்களாகவே இருக்கும். இது சாதாரண உண்மையாகும்.
ஒருவரின் வயிற்றை அல்லது உடலின் ஒரு பகுதியை அறுப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது தான். ஒருவரின் உடலில் ஊசியால் குத்துவதும் தடுக்கப்பட்டது தான். ஒருவரை வேதனைப்படுத்துவதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது தான்.
ஆனாலும் மருத்துவம் என்று வரும்போது ஆபரேசனுக்காக உறுப்புகள் அறுக்கப்படுகின்றன. அகற்றப்படுகின்றன. இஞ்சக்ஷன் மூலம் குத்தப்படுகிறது. இவை பொதுவாகத் தடுக்கப்பட்டுள்ளதால் மருத்துவத்தின் போதும் தடுக்கப்பட்டவை என்று கூற முடியாது.
அது போல் பல்வேறு ரசாயனங்கள் மூலம் தான் எல்லா மாத்திரைகளும் தயாரிக்கப்படுகின்றன. அவை அனைத்துமே சாதாரண நிலையில் மனிதனுக்குக் கேடு விளைவிப்பவை தான். சாதாரணமான நேரத்தில் நோய் தீர்க்கும் மாத்திரைகளைச் சாப்பிடுவது நிச்சயம் கேடு விளைவிக்கும். கேடு விளைவிப்பவை ஹராம் என்பதால் மருத்துவத்தின் போது இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று யாருமே சொன்னதில்லை.
இன்னும் சொல்லப் போனால் உயிர் காக்கும் பல மருந்துகள் விஷத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக அறுவை சிகிச்சையின் போதும் மற்ற நேரங்களிலும் இரத்தம் அதிகம் வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் விஷத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. சாதாரண நேரத்தில் விஷத்தை உட்கொள்ள அனுமதி இல்லை என்றாலும் மருத்துவம் என்று வரும் போது அது அனுமதிக்கப்பட்டதாகவும் சில நேரங்களில் கட்டாயக் கடமையாகவும் ஆகிவிடுகிறது.
பட்டாடை ஆண்களுக்கு ஹராம் என்ற போதும் மருத்துவ நோக்கத்தில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் அதை அணிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
صحيح البخاري 2919 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ المِقْدَامِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا حَدَّثَهُمْ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَالزُّبَيْرِ فِي قَمِيصٍ مِنْ حَرِيرٍ، مِنْ حِكَّةٍ كَانَتْ بِهِمَا»
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
புகாரி 2919, 2920, 5839
இவை அனைத்தும் நிர்பந்தம் என்ற காரணத்தினால் மருந்துக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நிர்பந்தம் இல்லாத் போது சாதாரணமாக இவற்றையோ இவை கலந்த பொருளையோ உட்கொள்ள அனுமதி இல்லை.
உண்டியல் மூலம் பணம் அனுப்புவது கூடுமா?
ஒருவர் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்குப் பணம் அனுப்பினால் அந்தப் பணத்துக்கு அரசாங்கம் வரி வாங்குகிறது. இந்த வரியைச் செலுத்தாமல் இருப்பதற்காக அரசுக்குத் தெரியாத வகையில் மறைமுகமாக பணத்தை அனுப்புவதற்கு உண்டியல் முறை என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதும் இதையே தொழிலாகச் செய்வதும் மார்க்கத்தில் கூடுமா?
நாம் சம்பாதிக்கும் பணத்தை நாம் விரும்பும் வகையில் பயன்படுத்த இஸ்லாம் அனுமதிக்கிறது. இஸ்லாமியச் சட்டப்படி அமைந்த அரசாங்கத்தில் உண்டியல் போன்ற செயல்கள் சட்ட விரோதமாகக் கருதப்படாது.
உண்டியல் மூலம் ஒருவர் தனது சொந்தப் பணத்தை அனுப்பினால் அதற்காக மறுமையில் இறைவன் கேள்வி கேட்க மாட்டான். இறைவனிடம் குற்றவாளியாக ஆக மாட்டோம்.
ஆனால் நாம் வாழும் நாட்டில் அது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதனால் ஏற்படும் விளைவுகளைச் சுமக்க வேண்டியது வரும். இது போன்ற தொழில்களைச் செய்யும் போது ஏதோ கொலைகாரனைப் போல் அரசாங்கம் நம்மை அடையாளப்படுத்தும். நமது கொளரவத்துக்குப் பங்கம் ஏற்படும். சுயமரியாதை இழந்து குற்றவாளிகள் போல் நிற்கும் நிலை ஏற்படும். மேலும் இது போன்ற தொழில் செய்பவர்களின் குடும்பத்துப் பெண்களும் சொல்லொணாத துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள். சமூகத்தில் ஏதோ கேடிகளைப் போல் நம்மை ஆக்கி விடுவார்கள் என்பதைக் கவனிப்பது நல்லது.
சட்டப்படி பணம் அணுப்பாமல் உண்டியல் மூலம் அனுப்புவதற்கு அரசாங்கத்தின் வரிவிதிப்பு முறையும் காரணமாக உள்ளது. கொள்ளைக்காரர்களுக்கு நிகராக அநியாய வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாற்பது சதவிகிதம் அறுபது சதவிகிதம் வரி விதித்தால் எல்லோரும் அதில் இருந்து தப்பிக்கவே நினைப்பார்கள்.
அதுவும் பல வகையான வரிகள் விதிக்கப்படும் நாடுகளில் இந்தியா தான் முன்னனியில் உள்ளது.
நமது நாட்டில் எல்லாச் சட்டமும் மீறப்படுவதற்குக் காரணமே இது போன்ற அரசாங்கத்தின் அநியாயக் கொள்ளைதான். உண்டியல் மூலம் மக்கள் பணம் அனுப்புவதற்கும், கள்ளக் கணக்கு எழுதுவதற்கும் அரசாங்கமே முழுப் பொறுப்பு என்பதையும் மறுக்க முடியாது.
ஆன்லைன் வணிகம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத புது வகை வணிகமாக ஆன்லைன் வணிகள் அமைந்துள்ளது. எனவே இதற்கு நேரடி ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் இது குறித்து நாம் என்ன முடிவு எடுக்கலாம் என்பதற்கான அடிப்படைகள் இஸ்லாத்தில் தெளிவாக உள்ளன.
صحيح البخاري 2166 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا نَتَلَقَّى الرُّكْبَانَ، فَنَشْتَرِي مِنْهُمُ الطَّعَامَ فَنَهَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَبِيعَهُ حَتَّى يُبْلَغَ بِهِ سُوقُ الطَّعَامِ
நாங்கள் (சரக்கு கொண்டுவரும்) வணிகர்களை எதிர்கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்குவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கடைவீதிக்குக் கொண்டு செல்லாமல் (அதே இடத்தில்) விற்பதைத் தடை செய்தார்கள்.
நூல் : புகாரி 2166
எந்தப் பொருளையும் அதற்கான சந்தைக்கு வருவதற்கு முன்னர் இடைமறித்து வாங்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளதை இதிலிருந்து நாம் அறியலாம்.
பொருளை உற்பத்தி செய்பவர் அப்பொருளை அதற்கான சந்தைக்கு கொண்டு வந்தால்தான் சந்தை நிலவரம் அவருக்குத் தெரியவரும். அதற்கேற்ப அவர் விலை நிர்ணயம் செய்து அதற்கேற்ற பயனை அவர் அடைய முடியும். ஆனால் சந்தைக்கு வருவதற்கு முன் இடைமறித்து உற்பத்தியாளர்களிடம் பணமுதலைகள் கொள்முதல் செய்வதால் உற்பத்தியாளருக்கு சந்தை நிலவரம் தெரியாமல் போகும். குறைந்த விலைதான் அவருக்குக் கிடைக்கும்.
அது மட்டுமின்றி உற்பத்தியாகும் பொருட்கள் சந்தைக்கு வருவதற்கு முன் கொள்முதல் செய்பவர்கள் விரும்பியவாறு அதிக இலாபம் வைத்து கொள்ளை அடிக்கும் நிலையும் ஏற்படும்.
இதனால் உற்பத்தி செய்தவருக்கும் நட்டம் ஏற்படுகிறது. நுகர்வோருக்கும் நட்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே சந்தைக்கு வருவதற்கு முன்னர் பொருட்களை இடைமறித்து வாங்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அனைத்துப் பொருட்களையும் ஒருவர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளும்போதும் இதைவிட மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன.
இந்த வகையில் ஆன்லைன் வர்த்தகம் ஒரு மோசடியாக அமைகின்றது.
மக்களுக்கு எதுவும் நேரடியாகக் கிடைக்கக் கூடாது; தன்மூலமாக மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் பதிவு செய்துகொள்கின்றனர். இதன் நோக்கம் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் தாறுமாறாகக் கொள்ளை லாபம் அடிப்பதுதான்.
ஆன்லைனில் பொருட்களை விலை பேசிவிட்டு அதைப் பதுக்கி வைக்கிறார்கள். அதற்குத் தட்டுப்பாடு வந்த உடன் அதற்குரிய விலையைவிட அதிக விலைக்கு விற்கிறார்கள். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் தட்டுப்பாடு வந்த உடன் விலையை அதிகப்படுத்தி விற்கிறார்கள். இதுவே விலைவாசி உயர்வதற்கு காரணமாக இருக்கிறது. உள்ளூர்வாசி வெளியூர்வாசிக்கு விற்கக்கூடாது என்கிற ஹதீஸின் அடிப்படையில் இந்த வகையான வியாபாரம் தடை செய்யப்பட்டதாக அமைகிறது.
صحيح البخاري 2133 – حَدَّثَنِي أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் ஓர் உணவுப் பொருளை வாங்கினால், அது அவரது கைக்கு (முழுமையாக) வந்து சேராதவரை அதை அவர் விற்கக்கூடாது!
நூல் : புகாரி 2133, 2132, 2137
எந்தப் பொருளை ஒருவர் விற்பதாக இருந்தாலும் அதைத் தன் பொறுப்பில் அவர் கையகப்படுத்த வேண்டும். அதன் பின்னரே விற்க வேண்டும். ஆனால் ஆன்லைன் மூலம் ஒரு டன் தங்கத்துக்கு பணம் செலுத்தி ஒருவர் பதிவு செய்து கொள்கிறார். அதை அவர் தன் வசப்படுத்துவதில்லை. தனது பொறுப்பில் எடுத்துக் கொள்வதில்லை. மாறாக பெயரை மட்டும் பதிவு செய்து கொள்கிறார். யாரிடமிருந்து பொருளை வாங்குவதாக பதிவு செய்தாரோ அவரது பொறுப்பில்தான் அந்தத் தங்கம் இருக்கும்.
இதைத்தான் மேற்கண்ட ஹதீஸ் தடுக்கின்றது.
வியாபாரத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பிழைக்க வேண்டும். அதிகமான மக்கள் வியாபாரிகளாக இருக்கும்போதுதான் இஷ்டத்துக்கு விலை நிர்ணயம் செய்வது தடுக்கப்படும். ஒவ்வொரு வியாபாரியும் தன் பொறுப்பில் பொருளைக் கையகப்படுத்த வேண்டும் எனும்போது ஒரு அளவுக்கு மேல் இது சாத்தியப்படாது. அனைத்தையும் ஒரு சிலர் கையகப்படுத்த முடியாது. இதனால் ஏராளமான வியாபாரிகள் களத்தில் இருப்பார்கள்.
ஆனால் கையகப்படுத்தாமல் பதிவு செய்து கொள்ளும்போது உலகில் உள்ள அனைத்து தங்கத்தையும் அனைத்து வெள்ளியையும் ஒருவரோ அல்லது மிகச்சிலரோ பதிவு செய்து வைத்துக்கொண்டு மற்ற வியாபாரிகளுக்குக் கிடைக்காமல் செய்துவிட முடியும். இதனால் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் இஸ்லாம் இதை தடை செய்கிறது.
பங்கு வர்த்தகம்
ஷேர் மார்க்கெட் எனும் பங்குச்சந்தை உண்மையில் வியாபாரமே அல்ல. அது ஒரு சூதாட்டமும் மோசடியுமாகும். இது பற்றி நாம் விபரமாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஷேர் மார்க்கெட் என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஒரு கோடி ரூபாய் மூலதனத்தில் இயங்கி வருவதாக வைத்துக் கொள்வோம். இந்த ஒரு கோடி ரூபாயில் முப்பது லட்சம் ரூபாய் பங்குகளை அந்தக் கம்பெனி சந்தையில் விற்பனை செய்யும். மீதி எழுபது இலட்சம் ரூபாய் மதிப்புடைய பங்குகளைத் தன்வசத்தில் வைத்துக் கொள்ளும். தனது நிறுவனத்தில் பாதிக்கும் குறைவான பங்குகளை சந்தையில் விற்பதால் இது பங்குச் சந்தை எனப்படுகிறது. ஒரு பங்கு என்பது பத்து ரூபாய் என்ற அளவைத் தாண்டக் கூடாது என்பது விதி. ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்க நினைத்தால் பத்து ரூபாய் மதிப்பில் நூறு பங்குகளை வாங்க வேண்டும்.
இதை மட்டும் பார்க்கும் போது இதில் எந்தத் தவறும் இல்லாதது போல் தோன்றும். ஆனால் இதற்குள் ஏராளமான அயோக்கியத்தனங்களும் மோசடிகளும் மறைந்து கிடக்கின்றன.
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தில் முப்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள பங்குகளை ஒருவர் வாங்கி அதை மற்றவரிடம் அதே விலைக்கு விற்றால் அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் முப்பது லட்சம் ருபாய்க்கு பங்குகளை வாங்கியவர் அதை அறுபது லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். அறுபது லட்சத்துக்கு வாங்கியவர் அதை ஒரு கோடிக்கு விற்கிறார். ஒரு கோடிக்கு வாங்கியவர் இரண்டு கோடிக்கு விற்கிறார். இப்படி பல கைகள் மாறுகின்றன. முப்பது லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பங்கு முகமதிப்பு என்றும் இப்போது இரண்டு கோடியாக உயர்ந்து விட்ட மதிப்பு சந்தை மதிப்பு என்றும் கூறப்படுகிறது.
அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பு ஒரு கோடி தான். அந்தக் கம்பெனியில் உள்ள இருப்புக்களை ஆய்வு செய்தால் ஒரு கோடி தான் தேறும். ஆனால் அந்தக் கம்பெனியின் முப்பது சதவிகித பங்குகள் மட்டுமே சந்தை மதிப்பில் இரண்டு கோடியாக ஆக்கப்பட்டுள்ளது. உண்மையில் முப்பது லட்சம் ரூபாய்தான் அந்தக் கம்பெனியில் நமக்கு உள்ளது. அந்தக் கம்பெனி லாபம் தரும் போது முகமதிப்புக்குத் தான் அதாவது முப்பது லட்சம் ரூபாய்க்குத்தான் லாபம் தருவார்கள். இரண்டு கோடிக்கு லாபம் தரமாட்டார்கள். முப்பது லட்சம் ரூபாய்தான் அதன் மதிப்பாக இருக்கும் போது பொய்யான மாயையை ஏற்படுத்தி இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பதற்கு நிகரான மோசடி வேறு ஒன்றும் இருக்க முடியாது.
பங்குகளின் மதிப்பை ஏற்றிவிடுவதற்காக பல மோசடிகள் செய்யப்படும். அதாவது முப்பது லட்சம் ரூபாய்க்கு பங்குகளை வெளியிட்ட அந்த நிறுவனம் இதற்கென உள்ள புரோக்கர்கள் மூலம் இந்த நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் நூறு மடங்கு உயரப் போகிறது என்றெல்லாம் பரப்பிவிடுவார்கள். தாங்கள் விற்ற பங்குகளை பினாமிகளின் பெயரால் தாங்களே வாங்கி வைத்துக் கொண்டு தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள். இந்தக் கம்பெனியின் பங்குகள் உத்தரவாதமானவை. பாதுகாப்பானவை. எனவே அதை வாங்கியவர்கள் விற்க மாட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்யப்படும். இப்போது முப்பது லட்சம் ரூபாய் பங்குகளை பத்து கோடி ரூபாய்க்கும் கிடைத்தாலும் வாங்குவதற்கு சூதாடிகள் தயாராக இருப்பார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் பினாமி பெயரில் வாங்கிய பங்குகளை மீண்டும் விற்பனை செய்து அந்தக் கம்பெனி கொள்ளை அடித்து விடும்.
அதாவது ஒரு கோடி ரூபாய் மட்டுமே மதிப்புடைய அந்தக் கம்பெனி முப்பது சதவிகித்தை மட்டும் பத்து கோடிக்கு விற்று விடும். புரிவதற்கு எளிதாக சிறிய தொகையைக் குறிப்பிடுகிறோம். ஆயிரம் கோடி முதலீடு என்றால் அதில் முப்பது சதவிகிதம் 300 கோடி தான். 300 கோடி முகமதிப்புள்ள பங்குகள் ஒரு லட்சம் கோடிக்கு விற்கப்பட்டால் இது எவ்வளவு பெரிய கொள்ளை?
நாங்கள் பத்து கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளதால் அந்த அளவுக்கு எங்களுக்கு அந்தக் கம்பெனியில் உரிமை வேண்டும் என்று கேட்டால் பிடரியைப் பிடித்து தள்ளிவிடுவார்கள். இதன் மதிப்பு முப்பது லட்சம் தான் என்பார்கள்.
ஏன் இப்படி பங்குகளை வாங்குகின்றனர்? மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. கம்பெனிகள் பெரிய அயோக்கியர்கள் என்றால் இவர்கள் சிறிய அயோக்கியர்கள். முப்பது லட்சம் பங்குகளை நாம் ஒரு கோடிக்கு வாங்கினாலும் அதை இரண்டு கோடிக்கு விற்கலாம். மதிப்பு ஏறப்போகிறது என்று பில்டப் கொடுக்கும் போது கூடுதல் விலைக்கு அடுத்தவன் தலையில் கட்டலாம் என்ற மோசடி புத்தியின் காரணமாகவே இப்படி வாங்குகிறார்கள். அந்தக் கம்பெனியில் பங்குதாரராக சேர்வதற்காக அல்ல.
இது மோசடி என்பதால் இது அப்பட்டமான ஹராமாகும். யாரையும் ஏமாற்றி பொருளீட்டுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கம்பெனியில் நாம் சேர்ந்தால் நம்முடைய பங்கு ஹலாலான தொழிலில் இடப்பட்டுள்ளதா? அல்லது ஹராமான தொழிலில் இடப்பட்டுள்ளதா? என்பது தெரியாது. ஆகுமான தொழில் என்று உறுதியாகத் தெரியாத வரை அதில் நாம் முதலீடு செய்வது கூடாது.
ஒரு வியாபாரத்தில் கூட்டுச் சேர்பவர்கள் அந்த வியாபாரத்தின் மொத்தக் கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்கு உரிமை பெற்றவர்கள். ஆனால் பங்குகளை வாங்கி கூட்டு சேர்ந்தவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படாது. எந்தத் தொழிலில் முதலீடு செய்யப்பட்டது? எவ்வளவு செலவானது,? எவ்வளவு இலாபம் வந்தது? என்ற எந்த விபரத்தையும் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது.
தானும் ஏமாந்து அடுத்தவனையும் ஏமாற்றும் இந்த மோசடியில் முஸ்லிம்கள் அறவே ஈடுபடக் கூடாது.
தரகுத் தொழில் கூடுமா?
பொதுவாக தரகு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. நமக்கு ஒரு வீடு வாடகைக்கோ விலைக்கோ தேவை என்றால் அதற்கேற்ற வீடுகள் எங்கெங்கே உள்ளன என்பதை நாம் அறிந்து வைத்திருக்க முடியாது. நாம் நமது வீட்டை அல்லது ஏதாவது சொத்தை விற்க நினைத்தால் யார் வாங்கும் எண்ணத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிய முடியாது. இதற்காகவே சிலர் முயற்சித்து தகவல்களைத் திரட்டித் தருவதை தமது முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றனர். தரகர்கள் இல்லாவிட்டால் இது போன்ற பல வியாபாரங்கள் தடைபட்டு விடும்.
மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அவசியமானதாக ஆகிவிட்ட தரகுத் தொழிலை முழுமையாக ஆகும் எண்றும் சொல்ல முடியாது. முற்றிலும் கூடாது என்றும் சொல்ல முடியாது.
இதில் ஹராமானதும் உண்டு. ஹலாலானதும் உண்டு. ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாக உழைத்து அவருக்கு வேண்டிய தகவலைக் கொடுத்து அதற்காக கமிஷன் பெற்றால் அது ஹலாலான தொழிலாகும்.
ஒரு வீட்டை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள். தரகரைத் தொடர்பு கொண்டு இது குறித்த தகவலும் ஒத்துழைப்பும் வேண்டும் எனக் கோருகிறீர்கள். அவர் உங்களுக்கு மட்டும் விசுவாசமாக உழைத்து உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் ஒத்துழைக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் உங்களுக்கு சொத்தை விற்க விரும்பும் நபரிடம் போய் அதிக விலைக்கு தலையில் கட்டி விடுகிறேன்; எனக்கு ஒரு சதவிகிதம் தரவேண்டும் என்று அங்கேயும் பேரம் பேசி உங்களிடம் வந்து குறைந்த விலையில் அமுக்கி விடுகிறேன் எனக்கு ஒரு சதவிகிதம் தர வேண்டும் எனக் கூறினால் இது வடிகட்டிய அயோக்கியத்தனமும் மோசடியுமாகும்.
இப்படி இரு தரப்புக்கும் சாதகமாக உழைப்பதாக சொல்லி ஏமாற்றாமல் ஏதாவது ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாக நடந்தால் அதில் மோசடி ஏதும் இல்லாததால் அதற்குத் தடை போட முடியாது.
ஆனால் நடைமுறையில் இரு பக்கமும் கமிஷன் வாங்கி இருவரையும் ஏமாற்றுவது தான் தற்போது தரகுத் தொழிலின் இலக்கணமாக உள்ளது. இது ஹராமாகும்.
ஒருவரிடம் நாம் கமிஷன் வாங்கும் போது அவரது பிரதிநிதி என்ற முறையில் செயல்பட வேண்டும். அவருக்கு ஆதாயம் தேடித்தரும் வகையில் அவருக்காக உழைக்க வேண்டும். அப்படி இல்லாமல் இரு பக்கமும் நாடகம் நடத்தினால் இருவரையும் ஏமாற்றியதாக அமையும். இந்த வருவாய் ஹராமாகும்.
மேலும் தொகைக்கு ஏற்ப கமிஷன் வாங்கினால் அது வாங்குபவருக்கு நட்டத்தை ஏற்படுத்தும். அவருக்கு விசுவாசமாக நடப்பதற்குப் பதிலாக அவருக்கு நட்டத்தை ஏற்படுத்தி விட்டு அவரிடமே கமிஷன் வாங்குவதை இஸ்லாம் அனுமதிக்காது.
உதாரணமாக ஒருமாத வடகையைக் கமிஷனாகத் தர வேண்டும் என்று பேரம் பேசி தரகு வேலை பார்த்தால் அதிகக் கமிஷன் கிடைப்பதற்காக அதிக வாடகைக்குப் பேசும் நிலை ஏற்படும்.
இடத்தின் உரிமையாளர் சார்பில் பேசினால் அதில் உரிமையாளருக்கு லாபம் கிடைக்கும்.
ஆனால் வாடகைக்கு இடம் தேடுபவர் சார்பில் பேசினால் இடம் தேடுபவருக்கு இது நட்டத்தையே ஏற்படுத்தும்.
விற்பவர் சார்பில் கமிஷன் அடிப்படையில் பேசி தரகு வேலை பார்த்து அவரிடம் மட்டும் கமிஷன் வாங்கலாம். வாங்குபவரிடம் கமிஷன் அடிப்படையில் பேசாமல் இடத்தை முடித்துத் தந்தால் இவ்வளவு ரூபாய் என்று பேசினால் அவருக்கு லாபம் தரும் வகையில் குறைத்து பேசி அவருக்கு விசுவாசமாக இருக்க முடியும்.
விலை விஷயத்திலும் வாடகை விஷயத்திலும் தலையிட்டு விலையை ஏற்றிவிடுவது தான் புரோக்கர்களின் பணியாக உள்ளது. வீடுகள் நிலங்கள் போன்றவற்றின் தாறுமாறான விலை உயர்வுக்கு புரோக்கர்கள் தான் காரணமாக உள்ளனர். விலையை ஏற்றிவிடுவதற்காக கமிஷன் வாங்குவதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது.
இடைத் தரகர் வேலை பார்க்கும் போது விலையை அல்லது வாடகையை சந்தை நிலவரத்தை விட அதிகமாகக் கூட்டுவதற்கு முயற்சி செய்தால் அது ஹராமாகும்.
2160 – حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «لاَ يَبْتَاعُ المَرْءُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது! (வாங்கும் நோக்கமின்றி) விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே விலை கேட்காதீர்கள்! (விலையை உயர்த்துவதற்காக ஆளமர்த்தி அதிக விலை கேட்கச் செய்வதும் கூடாது!) கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!
நூல்: புகாரி 2160 2158 2140
صحيح البخاري 2166 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا نَتَلَقَّى الرُّكْبَانَ، فَنَشْتَرِي مِنْهُمُ الطَّعَامَ فَنَهَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَبِيعَهُ حَتَّى يُبْلَغَ بِهِ سُوقُ الطَّعَامِ
நாங்கள் (சரக்கு கொண்டுவரும்) வணிகர்களை எதிர்கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்குவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கடைவீதிக்குக் கொண்டு செல்லாமல் (அதே இடத்தில்) விற்பதைத் தடை செய்தார்கள்.
நூல் : புகாரி 2166
விலையில் தலையிடுவதாக இருந்தால் விலையை ஏற்றிவிடாமல் ஒரு தரப்பில் மட்டும் கமிஷன் வாங்கிக் கொண்டு சந்தை விலையை ஏற்றிவிடாமல் அந்தத் தரப்புக்கு உழைக்கலாம்.
புரோக்கர் தலையிடாமல் இருவரும் பேசிக் கொள்ளுங்கள் என்று தொடர்பை மட்டும் ஏற்படுத்தி. என்ன விலைக்கு படிந்தாலும் இவ்வளவு ரூபாய் எனக்குக் கமிஷனாகத் தர வேண்டும் என்ற அடிப்படையில் பேசிக் கொண்டால் அப்போது இவரது வேலை தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பது மட்டும் தான். எனவே இரு தரப்பிலும் கமிஷன் வாங்கலாம்.
இரவல் மற்றும் அமானிதப் பொருள் காணாமல் போனால்
மற்றவரிடம் நாம் இரவலாகப் பெற்ற பொருள் அல்லது மற்றவர்கள் நம்மிடம் அமானிதமாக ஒப்படைத்த பொருள் காணாமல் போய்விட்டால் அதற்கு யார் பொறுப்பு என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
காணாமல் போகும் பொருள்களில் இரவலுக்கும் அமானிதத்துக்கும் ஒரே நிலைப்பாட்டை எடுக்க முடியாது. இரண்டுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது.
ஒருவர் தனது பொருளைப் பாதுகாப்பாக வைப்பதற்காக நம்பிக்கையான மனிதரிடம் கொடுத்து வைக்கிறார். இது அமானிதம் எனப்படும். அமானிதம் பெற்றவருக்கு இதில் ஆதாயம் ஏதும் இல்லை. அவர் உதவி செய்யும் நோக்கில்தான் அமானிதப் பொருளை வாங்கி வைத்துக் கொள்கிறார்.
இந்த நிலையில் அப்பொருள் திருடப்பட்டாலோ, தீப்பிடித்து எரிந்து போனாலோ, அல்லது காணாமல் போனாலோ அமானிதமாக வாங்கி வைத்தவர் அதற்குப் பொறுப்பாளராக மாட்டார். அவர் கூறுவது உண்மைதான் என்று ஆய்வு செய்து உண்மை எனத் தெரியவந்தால் அமானிதம் கொடுத்தவர் அதை மன்னித்து விட்டுவிட வேண்டும். நம் கைவசத்தில் அப்பொருள் இருக்கும்போது காணாமல் போனால் அதை எப்படி எடுத்துக் கொள்வோமோ அப்படியே இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இரவல் என்பது இரவல் பெற்றவருடைய தேவைக்காக மற்றவரிடம் கேட்டுப் பெறுவதாகும். அதைப் பயன்படுத்தும் அனுமதியோடு அப்பொருள் அவர் கைவசத்தில் தரப்படுவதால் அதற்கு ஏற்படும் இழப்புகளுக்கு அவர்தான் பொறுப்பாளியாவார். இரவல் பெற்ற பொருள் காணாமல் போனால் அல்லது திருட்டு போனால் அப்பொருளுக்கான நட்ட ஈடு கொடுக்கும் கடமை இரவல் வாங்கியவருக்கு உண்டு.
سنن الترمذي
1265 – حدثنا هناد و علي بن حجر قالا حدثنا إسماعيل بن عياش عن شرحبيل بن مسلم الخولاني عن أبي أمامة قال : سمعت النبي صلى الله عليه و سلم يقول في الخطبة عام حجة الوداع العارية مؤداة والزعيم غارم والدين مقضي قال أبو عيسى وفي الباب عن سمرة و صفوان بن أمية و أنس قال وحديث أبي أمامة حديث حسن غريب وقد روي عن أبي أمامة عن النبي صلى الله عليه و سلم أيضا من غير هذا الوجه
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் இரவல் பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். இன்னொருவனின் கடனுக்குப் பொறுப்பேற்றவர் கடனாளியாவார். (அந்தக் கடனை அவரே தீர்க்க வேண்டும்) கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
நூல்கள் : திர்மிதி, அபூதாவூத்
கால்நடைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு
எந்த இழப்பாக இருந்தாலும் பொறுப்புகளில் யார் தவறு செய்துள்ளார்கள் என்ற அடிப்படையில்தான் இழப்பீட்டுக்கு பொறுப்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.
سنن أبي داود
3570 – حدثنا محمود بن خالد ثنا الفريابي عن الأوزاعي عن الزهري عن حرام بن محيصة الأنصاري عن البراء بن عازب قال : كانت له ناقة ضارية فدخلت حائطا فأفسدت فيه فكلم رسول الله صلى الله عليه و سلم فيها فقضى أن حفظ الحوائط بالنهار على أهلها وأن حفظ الماشية بالليل على أهلها وأن على أهل الماشية ما أصابت ماشيتهم بالليل
பர்ரா இப்னு ஆஸிப் அவர்களின் ஓட்டகம் ஒருவருடைய தோட்டத்தில் நுழைந்து அதை நாசப்படுத்தியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொருளுக்குரியவர்கள் பகலில் அதைப் பாதுகாக்க வேண்டுமென்றும், கால்நடைக்குரியவர்கள் இரவில் கால்நடைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்கள்.
நூல் : அபூதாவுத் 3098
பகல் நேரத்தில் கால்நடைகளால் சேதம் ஏற்படாமலிருக்கும் வகையில் தோட்டத்தின் சொந்தக்காரர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். பகலில் கால்நடைகள் மற்றவர்களின் பயிர்களைச் சேதப்படுத்தினால் கால்நடைகளின் உரிமையாளர்கள் எந்த நட்டஈடும் கொடுக்கத் தேவை இல்லை. ஏனெனில் தோட்டத்தின் உரிமையாளர் பகலில் தனது தோட்டத்தைப் பாதுகாக்கும் கடமையில் தவறியுள்ளார்.
இரவில் தோட்டங்களை அதன் உரிமையாளர்கள் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அவற்றைக் கட்டிப்போட்டு மற்றவர்களின் தோட்டங்களில் மேயாமல் தடுக்கும் கடமை உண்டு. எனவே இரவில் கால்நடைகள் பயிர்களைச் சேதப்படுத்தினால் கால்நடைகளின் உரிமையாளர்கள் அதற்கான இழப்பீட்டை தோட்டத்தின் உரிமையாளருக்கு அளிக்க வேண்டும்.
சிகிச்சையின்போது ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு
மருத்துவ சிகிச்சையின்போது உயிரிழப்புகள் ஏற்படுவதுண்டு. அல்லது உறுப்புகள் ஊனமாவதுண்டு. இதற்காக மருத்துவரைப் பொறுப்பாளியாக்கி இழப்பீடு பெற முடியுமா என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளனர்.
سنن النسائي
4830 – أخبرني عمرو بن عثمان ومحمد بن مصفي قالا حدثنا الوليد عن بن جريج عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه و سلم : من تطبب ولم يعلم منه طب قبل ذلك فهو ضامن
யார் மருத்துவம் தெரியாமல் மருத்துவம் பார்க்கிறாரோ அதற்கு அவர்தான் பொறுப்பு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
நூல்கள் : நஸாயி, இப்னுமாஜா
மருத்துவம் செய்பவர் எந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கிறாரோ அந்த நோய்க்கான சிகிச்சையைச் சரியாக அறிந்தவராக இருந்து சிகிச்சையின்போது ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அவர் அதற்கு பொறுப்பாளியாக மாட்டார். அவர் எந்த இழப்பீடும் அளிக்கத் தேவையில்லை. ஆனால் மருத்துவம் தெரியாமல் ஒருவர் சிகிச்சை செய்து அதனால் நோயாளியின் உயிருக்கோ, உறுப்புக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவம் அறியாமல் சிகிச்சை செய்த மருத்துவர் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும்.
மருத்துவத்தை அறிந்தவர் என்பதன் பொருள் அவர் மருத்துவ பட்டம் படித்திருக்க வேண்டும் என்பதல்ல. அவர் செய்யும் சிகிச்சை சரியானதாக இருக்க வேண்டும் என்பதுதான்.
நன்கு படித்த மருத்துவர் கையில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்குப் பதிலாக காலில் அறுவை சிகிச்சை செய்தால், அல்லது வலது கண்ணுக்குப் பதிலாக இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்தால் அவரது பட்டம் அவரைக் காப்பாற்றாது. ஒரு நோய்க்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறியாமல் தேவை இல்லாத ஒரு அறுவை சிகிச்சை செய்கிறார். அதனால் நோயாளிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய்க்கு இது தேவையற்றது சம்மந்தமற்றது என்று கண்டுபிடிக்கப்பட்டால் அப்போதும் அவர் இழப்பீடு வழங்க வேண்டும்.
நோய்க்குள் சம்மந்தமில்லாத மருந்துகளை அவர் எழுதிக் கொடுத்து அதனால் பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு மருத்துவர் தான் பொறுப்பாளியாவார்.
பிறரது பொருளைச் சேதப்படுத்துவதன் இழப்பீடு
பிறரது பொருளை ஒருவர் சேதப்படுத்தி விட்டால் அந்தப் பொருளின் மதிப்புக்கு ஏற்க இழப்பீடு வழங்க வேண்டும்.
صحيح البخاري 5225 – حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ، فَأَرْسَلَتْ إِحْدَى أُمَّهَاتِ المُؤْمِنِينَ بِصَحْفَةٍ فِيهَا طَعَامٌ، فَضَرَبَتِ الَّتِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهَا يَدَ الخَادِمِ، فَسَقَطَتِ الصَّحْفَةُ فَانْفَلَقَتْ، فَجَمَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِلَقَ الصَّحْفَةِ، ثُمَّ جَعَلَ يَجْمَعُ فِيهَا الطَّعَامَ الَّذِي كَانَ فِي الصَّحْفَةِ، وَيَقُولُ: «غَارَتْ أُمُّكُمْ» ثُمَّ حَبَسَ الخَادِمَ حَتَّى أُتِيَ بِصَحْفَةٍ مِنْ عِنْدِ الَّتِي هُوَ فِي بَيْتِهَا، فَدَفَعَ الصَّحْفَةَ الصَّحِيحَةَ إِلَى الَّتِي كُسِرَتْ صَحْفَتُهَا، وَأَمْسَكَ المَكْسُورَةَ فِي بَيْتِ الَّتِي كَسَرَتْ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒரு மனைவியிடம் இருக்கும் போது இன்னொரு மனைவி உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருடைய வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்த மனைவி (ரோஷத்தில்) பணியாளின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), உங்கள் தாயார் ரோஷப்பட்டு விட்டார் என்று சொன்னார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு (சேதப்படுத்திய) மனைவியின் வீட்டிலிருந்து ஒரு தட்டைக் கொண்டு வரச்செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை அந்த வீட்டிலேயே வைத்துவிட்டார்கள்.
நூல் : புகாரி 5225
சொத்து தகராறைத் தீர்க்கும் வழிமுறை
ஒரு சொத்து யாருக்கு உரியது என்ற பிரச்சனை வந்தால் அதைத் தீர்ப்பதற்காக நீதிமன்றங்களுக்குச் சென்று பல வருடங்கள் அலைந்து பொருளாதாரத்தை மேலும் இழந்து ஓட்டாண்டியாகி விடுவதைக் காண்கிறோம். இஸ்லாத்தில் இதற்கான தீர்வு மிகவும் எளிமையானது.
ஒரு சொத்துக்கு இருவர் சொந்தம் கொண்டாடினால் அந்தச் சொத்து யாராவது ஒருவரின் கைவசத்தில்தான் இருக்கும். யாருடைய கைவசத்தில் அது உள்ளதோ அவர் தன்னுடையது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டத் தேவையில்லை. அவர் கைவசத்தில் சொத்து இருப்பதே ஒரு வகையான ஆதாரம்தான்.
யாருடைய கைவசத்தில் சொத்து இல்லையோ அவர் அந்தச் சொத்துக்கு உரிமை கொண்டாடினால் அது தன்னுடையதுதான் என்பதற்கு ஆவணங்களை அல்லது சாட்சிகளைக் கொண்டு வந்து நிரூபித்து விட்டால் எதிரியிடமிருந்து அந்தச் சொத்தைப் பிடுங்கி அவரிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படி ஆதாரம் காட்டாவிட்டால் சொத்துக்கு உரிமை கொண்டாடுபவர் உண்மையில் உரிமையாளராக இருந்தால்கூட அவருக்குச் சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படாது.
ஆதாரங்களைத் திரட்டுவதும் அதைப் பாதுகாப்பதும் இவர் மீதுள்ள கடமையாகும். அந்தக் கடமையில் அவர் தவறி விட்டு எவ்வித ஆதாரத்தையும் காட்டாமல் என்னுடையது என்று கூறுவது அர்த்தமற்றதாகும்.
ஒருவர் கைவசத்தில் உள்ள சொத்துக்கு மற்றவர் உரிமை கொண்டாடி வழக்கு தொடுத்தால் அந்த வழக்குக்கும் இஸ்லாம் ஓரளவு மதிப்பளிக்கிறது. சொத்தை யார் கைவசம் வைத்துள்ளாரோ அவர் இது அல்லாஹ்வின் மீது சத்தியமக என்னுடைய சொத்துதான் எனக் கூற வேண்டும். அவ்வாறு அவர் கூறிவிட்டால் அவருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.
இது என்னுடையதுதான் என்று சத்தியம் செய்யும் உரிமை யார் தன் கைவசத்தில் பொருளை வைத்துள்ளாரோ அவருக்கு மட்டும் உள்ளதாகும்.
سنن الترمذي 1341 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَغَيْرُهُ، عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي خُطْبَتِهِ: «البَيِّنَةُ عَلَى المُدَّعِي، وَاليَمِينُ عَلَى المُدَّعَى عَلَيْهِ
சத்தியம் செய்யும் உரிமை யாருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதோ அவருக்குத் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.
நூல் திர்மிதி
இவ்வாறு சத்தியம் செய்யக் கோரும்போது அவர் சத்தியம் செய்ய மறுத்தால் அந்தச் சொத்து தன்னுடையது அல்ல என்று அவரே ஒப்புக் கொள்கிறார் என்பதால் வழக்கு தொடுத்தவருக்கு சத்தியம் செய்யும் உரிமை வழங்கப்படும். இவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அவரே அப்பொருளுக்கு உரிமையாளர் என முடிவு செய்யப்படும்.
ஒரு வீடு இருக்கின்றது. இருவர் சேர்ந்து பணம் கொடுத்து அதை வாங்கியிருக்கின்றார்கள். இருவருமே அந்த வீட்டில் வசிக்கின்றனர். இப்போது யாருடைய கைவசத்தில் அந்த வீடு உள்ளது என்று சொல்ல முடியாது. இருவரும் சமநிலையில் உள்ளனர்.
இது போன்ற சூழ்நிலையில் மட்டும் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக இருவரில் ஒருவருக்கு சத்தியம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். அந்த வாய்ப்பு யாருக்கு என்பது சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவு செய்யப்படும்.
இதில் ஒருவர் பாதிக்கப்படுவார் என்பது உண்மைதான். ஆனால் ஏதாவது ஒரு தீர்ப்பு சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் அந்தச் சண்டை இருந்து கொண்டே இருக்கும். காலமெல்லாம் அவர்களுக்குள் பூசல் இருந்து கொண்டே இருக்கும். எனவேதான் இந்த ஏற்பாடு.
صحيح البخاري 2674 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَ عَلَى قَوْمٍ اليَمِينَ، فَأَسْرَعُوا فَأَمَرَ أَنْ يُسْهَمَ بَيْنَهُمْ فِي اليَمِينِ أَيُّهُمْ يَحْلِفُ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும்படி அழைத்தார்கள். அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
நூல் : புகாரி 2674
சீட்டுக் குலுக்கி தீர்வு காண்பது
صحيح البخاري 2688 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ، وَكَانَ يَقْسِمُ لِكُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ يَوْمَهَا وَلَيْلَتَهَا، غَيْرَ أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا وَلَيْلَتَهَا لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَبْتَغِي بِذَلِكَ رِضَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியூர் செல்லும்போது ஒரு மனைவியை அழைத்துச் செல்வார்கள். மனைவியர் அனைவரும் சமமானவர்கள் என்பதால் ஒருவருக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பது அநீதியாகி விடும். எனவே எல்லா மனைவியரின் பெயர்களையும் எழுதி சீட்டு குலுக்குவார்கள். யார் பெயர் வருகிறதோ அவரை அழைத்துச் செல்வார்கள்.
இது புகாரி 2688 ,2879, 4750 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
صحيح البخاري 2687 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي خَارِجَةُ بْنُ زَيْدٍ الأَنْصَارِيُّ، أَنَّ أُمَّ العَلاَءِ – امْرَأَةً مِنْ نِسَائِهِمْ – قَدْ بَايَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَتْهُ أَنَّ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ طَارَ لَهُ سَهْمُهُ فِي السُّكْنَى، حِينَ أَقْرَعَتْ الأَنْصَارُ سُكْنَى المُهَاجِرِينَ، قَالَتْ أُمُّ العَلاَءِ: فَسَكَنَ عِنْدَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، فَاشْتَكَى، فَمَرَّضْنَاهُ حَتَّى إِذَا تُوُفِّيَ وَجَعَلْنَاهُ فِي ثِيَابِهِ، دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ أَكْرَمَهُ؟»، فَقُلْتُ: لاَ أَدْرِي بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا عُثْمَانُ فَقَدْ جَاءَهُ وَاللَّهِ اليَقِينُ، وَإِنِّي لَأَرْجُو لَهُ الخَيْرَ، وَاللَّهِ مَا أَدْرِي وَأَنَا رَسُولُ اللَّهِ مَا يُفْعَلُ بِهِ»، قَالَتْ: فَوَاللَّهِ لاَ أُزَكِّي أَحَدًا بَعْدَهُ أَبَدًا، وَأَحْزَنَنِي ذَلِكَ، قَالَتْ: فَنِمْتُ، فَأُرِيتُ لِعُثْمَانَ عَيْنًا تَجْرِي، فَجِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «ذَاكِ عَمَلُهُ»
மக்காவாசிகள் நாடு துறந்து மதீனா வந்தபோது மதீனாவில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பம் மக்காவில் இருந்து வந்த ஒருவரை தமது பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஒருவருக்கு வசதியில்லாதவரின் வீடு, மற்றவருக்கு வசதி படைத்தவரின் வீடு என்பது போன்ற எண்ணம் நாடு துறந்த மக்களுக்கும் வரக் கூடாது; உள்ளுர் மக்களுக்கும் வரக்கூடாது என்பதற்காக சீட்டுக் குலுக்கி போட்டு யாருக்கு எந்த வீடு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடிவு செய்தார்கள்.
இது பற்றி புகாரி 2687, 1243, 3929, 7004, 7018 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
இரு சமூகத்தினர் கப்பலில் பயணம் செய்து போகின்றனர். கப்பலில் மேல்தளம் கீழ்தளம் என்று இரு தளங்கள் உள்ளன. இருவருமே நாங்கள்தான் மேல் தளத்தில் இருப்போம். அல்லது நாங்கள்தான் கீழ்த்தளத்தில் இருப்போம் எனப் போட்டியிடுகின்றனர். இப்போது சீட்டுக் குலுக்கி போட்டு முடிவு எடுக்கலாம் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
صحيح البخاري 2686 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي الشَّعْبِيُّ، أَنَّهُ سَمِعَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَثَلُ المُدْهِنِ فِي حُدُودِ اللَّهِ، وَالوَاقِعِ فِيهَا، مَثَلُ قَوْمٍ اسْتَهَمُوا سَفِينَةً، فَصَارَ بَعْضُهُمْ فِي أَسْفَلِهَا وَصَارَ بَعْضُهُمْ فِي أَعْلاَهَا، فَكَانَ الَّذِي فِي أَسْفَلِهَا يَمُرُّونَ بِالْمَاءِ عَلَى الَّذِينَ فِي أَعْلاَهَا، فَتَأَذَّوْا بِهِ، فَأَخَذَ فَأْسًا فَجَعَلَ يَنْقُرُ أَسْفَلَ السَّفِينَةِ، فَأَتَوْهُ فَقَالُوا: مَا لَكَ، قَالَ: تَأَذَّيْتُمْ بِي وَلاَ بُدَّ لِي مِنَ المَاءِ، فَإِنْ أَخَذُوا عَلَى يَدَيْهِ أَنْجَوْهُ وَنَجَّوْا أَنْفُسَهُمْ، وَإِنْ تَرَكُوهُ أَهْلَكُوهُ وَأَهْلَكُوا أَنْفُسَهُمْ “
அல்லாஹ்வின் சட்டங்களில் விட்டுக் கொடுப்பவருக்கும், அதை மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கூட்டத்தாரின் நிலையாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்பலின் கீழ்த் தளத்திலும் சிலருக்குக் கப்பலின் மேல்தளத்திலும் இடம் கிடைத்தது. கப்பலின் கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல்தளத்தில் இருந்தவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதனால் மேல் தளத்திலிருந்தவர்கள் துன்பமடைந்தார்கள். ஆகவே, கீழ்த்தளத்தில் இருந்த ஒருவன் ஒரு கோடரியை எடுத்து, கப்பலின் கீழ்த்தளத்தைத் துளையிடத் தொடங்கினான். மேல் தளத்திலிருந்தவர்கள் அவனிடம் வந்து, “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவன், “நீங்கள் என்னால் துன்பத்திற்குள்ளானீர்கள். எனக்குத் தண்ணீர் அவசியம் தேவைப்படுகின்றது. (அதனால், கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வேன்)” என்று கூறினான். (துளையிட விடாமல்) அவனது இரு கைகளையும் அவர்கள் பிடித்துக் கொண்டால் அவர்கள் அவனையும் காப்பாற்றுவார்கள்; தங்களையும் காப்பாற்றிக் கொள்வார்கள். அவனை அவர்கள் (கப்பலில் துளையிட) விட்டு விட்டால் அவனையும் அழித்து விடுவார்கள்; தங்களையும் அழித்துக் கொள்வார்கள்.
நூல் : புகாரி 2686
பாங்கு சொல்வது போன்ற நல்ல காரியங்களில் பலர் போட்டியிட்டால் அனைவரும் சமநிலையிலும் இருந்தால் சீட்டுக் குலுக்கி ஒருவரைத் தேர்வு செய்யலாம்.
صحيح البخاري 615 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ، لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا»
பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக் கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து)விடுவார்கள்.
நூல் : புகாரி 615, 654 ,721, 2689
மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி சம்பாதிப்பது
மதத்தின் பெயராலோ, ஜோதிடம், ஜாதகம், சகுனம் போன்ற மூடநம்பிக்கையின் பெயராலோ மக்களை ஏமாற்றி பிழைப்பதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். “அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக!
திருக்குர்ஆன் 9:34
மதகுருமார்கள் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் எந்த வியாபாரத்தையும் செய்து சம்பாதிக்கவில்லை. எந்த வியாபாரமும் செய்யாமல் மூட நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் விதைத்து அதன் மூலம் சம்பாதித்து வந்தனர் என்பதைத்தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.
மார்க்கத்தை வைத்து வயிறு வளர்ப்பது என்றால் என்ன? கூடாத ஒன்றை, பணம் வாங்கிக் கொண்டு கூடும் என்று பத்வா கொடுப்பது, குடும்பப் பிரச்சனைகளில் ஒரு தரப்புக்கு ஏற்ப பத்வா கொடுத்து பணம் பண்ணுவது, குற்றம் செய்தவனுக்கு என்ன தண்டனை மார்க்கத்தில் உள்ளதோ அதைச் சொல்லாமல் கொடுக்கும் காசுக்கு ஏற்ப மார்க்கத்தை வளைப்பது ஆகிய காரியங்களைத் தான் யூத மதகுருமார்கள் செய்து வந்தனர். அதைத் தான் அல்லாஹ் கண்டிக்கிறான்.
தாயத்து, தட்டு, கத்தம், பாத்திஹா போன்ற மார்க்கத்தில் இல்லாத விஷயங்களை மார்க்கம் போல் சித்தரித்துக் காட்டி இதன் மூலம் மக்களிடம் பணம் பறிப்பதும் இதில் அடங்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்றபோது அங்குள்ள யூதர்கள் இதுபோல் மார்க்கத்தை வளைத்து ஆதாயம் அடைந்து கொண்டிருந்தார்கள்.
இஸ்லாத்தில் உள்ள குற்றவியல் சட்டங்கள் போலவே தவ்ராத் எனும் யூதர்களின் வேதத்திலும் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் அந்தச் சட்டங்களை சாமானிய மக்களுக்கு மட்டும் பயன்படுத்துவார்கள். செல்வாக்குள்ளவர்களும் வசதி படைத்தவர்களும் அதே தவறைச் செய்தால் அவர்களுக்கு எளிதான இவர்களாக உருவாக்கிக் கொண்ட தீர்ப்பை வழங்குவார்கள்.
صحيح البخاري 3635 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ اليَهُودَ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلًا مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ». فَقَالُوا: نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: كَذَبْتُمْ إِنَّ فِيهَا الرَّجْمَ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا، فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: ارْفَعْ يَدَكَ، فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ، فَقَالُوا: صَدَقَ يَا مُحَمَّدُ، فِيهَا آيَةُ الرَّجْمِ، فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُجِمَا، قَالَ عَبْدُ اللَّهِ: فَرَأَيْتُ الرَّجُلَ يَجْنَأُ عَلَى المَرْأَةِ يَقِيهَا الحِجَارَةَ “
யூதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்கள். உடனே (யூதமத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும் என்று கூறும் வசனத்தின் மீது தனது கையை வைத்து மறைத்துக் கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், உன் கையை எடு என்று சொல்ல, அவர் தனது கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், அப்துல்லாஹ் பின் சலாம் உண்மை சொன்னார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது என்று சொன்னார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும்வரை கல்லால் அடிக்கும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவள் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை நான் பார்த்தேன்.
நூல் : புகாரி 3635
விவாகரத்து, குலா போன்ற குடும்பப் பிரச்சனைகளில் காசு வாங்கிக் கொண்டு அதற்கேற்ப தீர்ப்புகள் கூறும் மார்க்க அறிஞர்களும் ஷரீஅத் கோர்ட்டுகளும் இருக்கின்றனர். இவர்களின் இந்தக் கேடுகெட்ட செயலும் இந்த எச்சரிக்கையில் அடங்கும்.
அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்,445 தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
திருக்குர்ஆன் 2:174
அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. கியாமத் நாளில்1 அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
திருக்குர்ஆன் 3:77
மார்க்கத்தை மறைத்து எதைச் சம்பாதிக்கின்றார்களோ அவர்கள் சோறு உண்ணவில்லை. நரக நெருப்பைத்தான் உண்கின்றார்கள். அல்லாஹ் மறுமையில் இந்த தொழிலைச் செய்பவர்களுடன் பேசமாட்டான். அவர்களைப் பரிசுத்தப்படுத்த மாட்டான். அவர்களுக்குப் பயங்கரமான வேதனை இருக்கின்றது என்று அல்லாஹ் கடுமையாக எச்சரிப்பதைப் பார்த்து இவர்கள் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
மார்க்கப் பணிக்கு கூலி வாங்கலாமா?
வணக்கம் என்பது அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்யப்பட வேண்டும். அதற்காக மனிதர்களிடம் கூலி கேட்கக் கூடாது. இதில் இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை.
யார் உங்களிடம் கூலியைக் கேட்கவில்லையோ அவர்களைப் பின்பற்றுங்கள் அவர்கள்தான் நேர்வழியில் இருப்பவர்கள்.
திருக்குர்ஆன் 36:21
என்னுடைய கூட்டமே நான் உங்களிடம் கூலி கேட்கவில்லை என்னுடைய கூலி என்னைப் படைத்த அல்லாஹ்விடமே தவிர இல்லை நீங்கள் இதை சிந்திக்க மாட்டீர்களா?
திருக்குர்ஆன்11:51)
ஆனால் ஒருவர் மார்க்கப் பணிக்காகத் தனது முழு நேரத்தையும் செலவிடுகிறார். அதன் காரணமாக அவரால் தொழில் செய்யவோ பொருளீட்டவோ இயலவில்லை. அத்துடன் அவர் வசதி படைத்தவராகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் அவரது வணக்கத்துக்குக் கூலியாக இல்லாமல் அவரது தேவையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உதவித் தொகை வழங்கலாம். இத்தகையோருக்கு வழங்குவதற்குத் தான் முதலிடம் அளிக்க வேண்டும்.
அப்படி வழங்கப்படும் உதவித் தொகை அவர் செய்யும் வணக்கத்துக்குக் கூலியாகாது.
மார்க்கப் பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது மட்டுமல்லாமல் வலியுறுத்தப்பட்டும் உள்ளது.
(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:273
பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர். ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது தான் அவர் ஏழையாக இருப்பதற்கே காரணமாகவும் உள்ளது. இதன் காரணமாக அவரால் பொருளீட்டவும் இயலவில்லை.
இத்தகையவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமின்றி மார்க்கப் பணியிலும் ஈடுபடுகிறார் என்பதையும் கவனத்தில் கொண்டு தர்மங்கள் வழங்குவது தவறில்லை என்று இவ்வசனத்திலிருந்து தெரிகிறது.
ஒருவர் பொருளீட்டுவதற்கான முயற்சி எதனையும் மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க மார்க்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொள்வதைக் குறை கூறக் கூடாது; மாறாக இது பாராட்டப்பட வேண்டிய சேவை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.
அதே சமயத்தில் இவ்வாறு மார்க்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வோர் வேறு வருமானத்திற்கு வழியில்லை என்பதால் மற்றவர்களிடம் யாசிப்பதோ, சுய மரியாதையை இழப்பதோ கூடாது.
எந்த நிலையிலும் எவரிடமும் கேட்பதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு சுயமரியாதையைப் பேணுபவர்களுக்குத் தான் மார்க்கப் பணியைக் காரணம் காட்டி உதவியும் செய்ய வேண்டும். அவர்கள் யாசிக்க ஆரம்பித்து விட்டால் இந்தத் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்
திருக்குர்ஆன் 9:60
எட்டுவகையினருக்கு ஜகாத் கொடுக்குமாறு அல்லாஹ் கூறுகிறான்.
இவர்களில் ஒரு வகையினர் ஜகாத்தை வசூலிப்பவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஜகாத் என்பது ஒரு வணக்கமாகும். அதை வசூலிப்பதும் ஒரு வணக்கம்தான். ஆனாலும் வசூலிப்பதற்காக தன்னை அர்ப்பணிப்பவர் தனது நேரத்தைச் செலவிடுகிறார் என்பதால் அவருக்கு ஜகாத் நிதியில் இருந்து உதவலாம் என்று அல்லாஹ் அனுமதிக்கிறான்
அது போல்தான் மார்க்கத்துக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பிறரிடம் கையேந்தாதவாறு அவர்களின் தேவைகள் நிறைவேறுமளவுக்கு உதவித் தொகை வழங்குவது சமுதாயத்தின் கடமையாகும். அப்போதுதான் அவர்கள் உண்மையான மார்க்கத்தைச் சொல்வார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
மக்களுக்காக ஒருவர் தனது முழு நேரத்தையும் செலவிடும்போது பொதுநிதியில் இருந்து அவரது தேவைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்பதால்தான் அபூபக்ர் ரலி அவர்கள் பொதுநிதியில் இருந்து குடும்பத் தேவைக்கு எடுத்துக் கொள்வேன் என்று வெளிப்படையாக அறிவித்தார்கள்.
صحيح البخاري 2070 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: لَمَّا اسْتُخْلِفَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ، قَالَ: «لَقَدْ عَلِمَ قَوْمِي أَنَّ حِرْفَتِي لَمْ تَكُنْ تَعْجِزُ عَنْ مَئُونَةِ أَهْلِي، وَشُغِلْتُ بِأَمْرِ المُسْلِمِينَ، فَسَيَأْكُلُ آلُ أَبِي بَكْرٍ مِنْ هَذَا المَالِ، وَيَحْتَرِفُ لِلْمُسْلِمِينَ فِيهِ»
அபூபக்ர் (ரலி) கலீஃபாவாக ஆனபோது எனது தொழில் என் குடும்பத்தாரின் செலவுக்குப் போதுமானதாக இருந்தது என்பதை என் சமுதாயத்தினர் அறிவர்; இப்போது நான் முஸ்லிம்களின் (தலைமைப்) பொறுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன்; இனி அபூபக்ரின் குடும்பத்தினர் இந்தப் பொதுநிதியிலிருந்து உண்பார்கள். இதில் முஸ்லிம்களுக்காக நான் உழைப்பேன் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2070
பொதுவாகவே மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது, அவர்கள் தரித்திரர்களாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது.
மவ்லிது, ஃபாத்திஹா போன்ற பித்அத்துக்கள் உருவானதற்கும், மார்க்கத்தின் பெயரால் பொருளீட்டும் நிலை தோன்றியதற்கும் சமுதாயத்தில் நிலவுகின்ற இந்த மன நிலையும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல!
மார்க்கத்தில் தடுக்கப்பட்ட எந்த வணக்க வழிபாடுகளில் மார்க்கத்தை நாம் எப்படி பேணி நடக்கிறோமோ அது போல் பொருளாதாரத்தை திரட்டுவதிலும் பேணுதலாக நாம் நடந்தால் தான் மறுமையில் நாம் வெற்றி பெற முடியும். இதை உணர்ந்து நடக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக.