கூட்டுக் குர்பானியின் சட்டங்கள்!

ஹஜ் பெருநாள் தினத்தில் ஆட்டைக் குர்பானி கொடுப்பவர் தனிப்பட்ட முறையில் கொடுக்கலாம்.

மாடுகளைக் குர்பானி கொடுப்பதாக இருந்தால் ஒரு மாட்டில் ஏழு நபர்கள் வீதம் கூட்டு சேர்ந்து குர்பானி கொடுக்கலாம்.

ஆட்டைக் குர்பானி கொடுக்க பொருள் வசதி இருந்தாலும் வசதி இல்லாவிட்டாலும் மாட்டில் ஒரு பங்கு சேரலாம். மாட்டில் ஏழில் ஒரு பங்கும் ஒரு ஆடும் சமமானவை தான். ஒன்றை விட மற்றொன்று சிறந்ததல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகம், மாடு ஆகியவற்றில் கூட்டு சேர்ந்து குர்பானி கொடுக்கலாம் என்று அனுமதியளித்துள்ளனர்.

صحيح مسلم

350 – (1318) حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مَالِكٌ، ح وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، – وَاللَّفْظُ لَهُ – قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «نَحَرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ»

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது,

“நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம்.”

நூல் : முஸ்லிம் : 2537.

ஏழு பேருக்கு ஒரு மாடு என்பதை இரு விதமாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்த மாடு இந்த ஏழு பேருக்கானது; அந்த மாடு அந்த ஏழு பேருக்கானது தெளிவுபடுத்துதல் ஒரு வகை.

எழுபது பேரிடம் பங்கு சேர்த்து பத்து மாடுகளை வாங்குதல் ஒரு வகை.

முதல் வகையில் பங்கு சேர்ந்தவருக்கு தனது மாடு இது என்று தெரியும். அல்லது இன்ன எடையில் இன்ன விலையில் உள்ளது என்று தெரியும்.

இரண்டாவது கருத்துப்படி குறிப்பாக தனது மாடு எது என்று தெரியாது. இந்த பத்து மாட்டில் ஏதோ ஒரு மாடு என்று தான் தெரியும். இவர் சார்பில் கொடுக்கப்படும் மாட்டின் எடை எவ்வளவு விலை எவ்வளவு என்ற எந்த விபரமும் அவருக்குத் தெரியாது.

முதல் வகையில் பங்கு சேர்வதற்குத் தான் மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இரண்டாவது வகையில் தெளிவின்மை உள்ளதால் அதற்கு அனுமதி இல்லை.

صحيح مسلم

353 – (1318) وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، قَالَ: «اشْتَرَكْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَجِّ وَالْعُمْرَةِ كُلُّ سَبْعَةٍ فِي بَدَنَةٍ» فَقَالَ رَجُلٌ لِجَابِرٍ: أَيُشْتَرَكُ فِي الْبَدَنَةِ مَا يُشْتَرَكُ فِي الْجَزُورِ؟ قَالَ: ” مَا هِيَ إِلَّا مِنَ الْبُدْنِ، وَحَضَرَ جَابِرٌ الْحُدَيْبِيَةَ، قَالَ: نَحَرْنَا يَوْمَئِذٍ سَبْعِينَ بَدَنَةً اشْتَرَكْنَا كُلُّ سَبْعَةٍ فِي بَدَنَةٍ “

“நாங்கள் ஹுதைபியா நாளில் எழுபது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டோம். ஒவ்வொரு ஏழு நபர்கள் ஒரு ஒட்டகத்தில் கூட்டு சேர்ந்து கொண்டோம் என்று ஜாபிர் (ரலி) கூறுகிறார்கள். ஜாபிர் அவர்கள் ஹுதைபியாவில் பங்கெடுத்தவராவார்.

நூல் : முஸ்லிம் : 2540

ஒவ்வொரு ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தில் பங்கு சேர்ந்து குர்பானி கொடுத்தார்கள் என்ற வாசகம் கவனிக்கத்தக்கது.

அதாவது 70 ஒட்டகங்களில் 490 பேரைக் கூட்டாகத் திரட்டி குர்பானி கொடுக்கவில்லை.

ஒவ்வொரு ஏழு பேர் தாமாகக் கூட்டு சேர்ந்து ஒரு ஒட்டகம் கொடுத்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

குர்பானி கொடுக்கும் ஏழு பேர் தாமாகக் கூட்டு சேர்ந்து ஒரு மாட்டை வாங்கலாம்.

மக்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக ஜமாஅத்துகளோ, இயக்கங்களோ பங்கு சேர்த்து அவர்களுக்காக மாடுகளை வாங்கலாம்.

ஆனால் ஒவ்வொரு பங்கு சேர்ந்தவர்களுக்காகவும் வாங்கப்பட்ட மாடு இது என்று தெளிவுபடுத்த வேண்டும்.

மேற்கண்ட ஹதீஸில் இருந்து இதை நாம் அறியலாம்.

ஆனால் இன்று நடைமுறை அவ்வாறு இல்லை.

70 நபர்களிடம் பங்கு வாங்கி பத்து மாடுகள் வாங்குகிறார்கள். அந்தப் பத்து மாடுகளில் ஒரு பங்குதாரரின் மாடு எது என சொல்லப்படுவதில்லை. தான் குர்பானி கொடுக்கும் மாடு எது என குர்பானி கொடுப்பவருக்கே தெரிவதில்லை.

பத்து மாடுகளில் சில மாடுகள் 20 ஆயிரம், சில மாடுகள் 30 ஆயிரம், சில மாடுகள் நாற்பதாயிரம் என்ற இருக்கலாம். 20 ஆயிரம் ரூபாய்க்கான பங்கு இவ்வளவு, முப்பதாயிரம் ரூபாய்க்கான மாட்டின் பங்கு இவ்வளவு, நாற்பதாயிரம் ரூபாய் மாட்டின் பங்கு இவ்வளவு என்று தெளிவுபடுத்தி பங்குகள் வாங்க வேண்டும். பங்கு வாங்கும் போது அப்படி தெளிவுபடுத்த முடியாவிட்டாலும் முன்பணம் என்ற வகையில் பங்கை வாங்கிக் கொள்ளலாம்.

வாங்கி முடித்த பின் உங்கள் பங்கில் வாங்கிய மாடு இத்தனை கிலோ, அதன் விலை இவ்வளவு, மீதி இவ்வளவு உள்ளது. அல்லது மீதி இவ்வளவு நீங்கள் தர வேண்டும் என்று தெளிவுபடுத்த வேண்டும்.

இதைத் தான் ஒவ்வொரு ஏழு பேருக்கு ஒரு மாடு என்ற ஹதீஸ் மூலம் அறிய முடிகிறது.

மார்க்கத்தில் எல்லாவிதமான கொடுக்கல் வாங்கலும் தெளிவுபடுத்துவது அவசியம்.

صحيح البخاري

2239 – حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي المِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ، وَالنَّاسُ يُسْلِفُونَ فِي الثَّمَرِ العَامَ وَالعَامَيْنِ، أَوْ قَالَ: عَامَيْنِ أَوْ ثَلاَثَةً، شَكَّ إِسْمَاعِيلُ، فَقَالَ: «مَنْ سَلَّفَ فِي تَمْرٍ، فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ»، حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، بِهَذَا: «فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்களில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பேரீச்சம் பழத்திற்காக ஒருவர் முன்பணம் கொடுத்தால் என்ன எடை என்பதையும், என்ன அளவு என்பதையும் குறிப்பிட்டு முன்பணம் கொடுக்கட்டும்! என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2239, 2240, 2241

முன் கூட்டியே பணம் வாங்கும் எந்த வியாபாரமாக இருந்தாலும் எடை எவ்வளவு, அளவு எவ்வளவு என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

இது குர்பானிக்கும் பொருந்தும்.

பொதுவாக எந்த வியாபாரத்தில் விற்பவரோ, வாங்குபவரோ ஏமாற்றப்படுகிறாரோ, அல்லது இருவரில் ஒருவர் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதோ அது போன்ற அனைத்து வியாபாரங்களும் தடுக்கப்பட்டவை என்பது தான் இஸ்லாமிய வணிகத்தின் அடிப்படையாகும். மேற்கண்ட ஹதீஸில் இருந்து இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் எந்த மாட்டில் குர்பானி கொடுக்கிறார் என்று தெரிவித்து மேலதிகமாக வாங்கிய பங்குகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

ஒருவர் பத்து கிலோ எடையுள்ள ஆட்டைக் குர்பானி கொடுக்கிறார். இன்னொருவர் இருபது கிலோ எடையுள்ள ஆட்டைக் குர்பானி கொடுக்கிறார். இரண்டும் குர்பானி என்றாலும் அதிகம் செலவிட்டவருக்கு அதற்கேற்ப கூடுதல் நன்மை கிடைக்கும். இரண்டுக்கும் சமமான நன்மை கிடைக்காது.

அது போல் தான் கூட்டாகக் கொடுக்கும் போது நமது பங்கு இந்த தரத்தில் உள்ள மாட்டுக்கானது என்று நம்பி பங்கு தரும் போது அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். ஒருவர் எந்த மாட்டில் பங்கு சேர்கிறார் என்று அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

மாடுகளுக்கு 1,2,3 என வரிசை எண் போட்டு அல்லது வேறு ஏதேனும் அடையாளம் இட்டு அதன் எடையையும், விலையையும் குறிப்பிட்டு, குறிப்பிட்ட மாடு எந்த ஏழு நபர்களுக்கு உரியது என்று தெளிவாக்க வேண்டும்.

அதாவது இந்த எண் கொண்ட மாடு உங்களுக்கானது. அதன் எடை இவ்வளவு, அதன் விலை இவ்வளவு. உங்கள் வகையில் மீதம் இவ்வளவு உள்ளது. அல்லது நீங்கள் மேற்கொண்டு தர வேண்டியது இவ்வளவு உள்ளது என்று தெளிவாக்க வேண்டும். அதாவது பங்குதாரர் என்ன விலைக்குரிய  மாட்டில் பங்கு சேர்ந்துள்ளார் என்பதை அவருக்கு தெரிவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நம்பிக்கை துரோகம் செய்யும் நிலை ஏற்படும்.

70 பங்குகள் சேர்ந்தன; அதில் பத்து மாடுகள் வாங்கினோம் என்று குருட்டாம் போக்கில் கணக்கு காட்டாமல் ஒவ்வொரு மாட்டுக்கும் உரிய ஏழு பங்குதாரர்களுக்கு உரிய விபரங்களைத் தர வேண்டும்.

ஒவ்வொரு மாட்டிலும் பங்காளிகளாக எந்த ஏழு பேர் என்று பிரித்துக் காட்ட வேண்டும். ஜாபிர் (ரலி) ஹதீஸில் ஒவ்வொரு ஏழு நபர்கள் ஒரு மாட்டில் சேர்ந்து கொண்டோம் என்று தான் உள்ளது. 490 பேரும் கூட்டாக சேர்ந்து 70 ஒட்டகத்தை பலியிட்டோம் என்று சொல்லப்படவில்லை.

மாட்டின் விலையுடன் மாடு வாங்குவதில் இருந்து குர்பானி விநியோகம் செய்யும் வரை ஆகும் செலவுகளையும் பங்குதாரர் கணக்கில் சேர்க்கலாம்.

இஸ்லாம் காட்டும் இந்த நேர்மையான வழியில் குர்பானி கொடுத்தால் குர்பானி கொடுத்தவர்களுக்கு நன்மை கிடைப்பது போல் அதற்காக உதவியவர்களுக்கும் நன்மை கிடைக்கும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...