ஒரு பெண்ணின் தாய் மாமா அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு பொறுப்பேற்று இருக்கும் போது அவரே அப்பெண்னின் திருமணத்துக்கும் வலியாக பொறுப்பாளராக ஆகமுடியுமா?
பதில்
ஒரு பெண்ணுடைய திருமணத்தின் பொறுப்பாளர் விஷயமாக அப்பெண்ணே முதல் உரிமை படைத்தவர் ஆவார். அவர் பொறுப்பாளர் விஷயமாக முடிவு எடுக்காவிட்டால் தந்தை வழியில் உள்ள ஆண்கள் பொறுப்பாளராக ஆவார்கள்.
அந்தப் பெண் நம்பகமான வேறு யாரையாவது பொறுப்பாளராக நியமித்துக் கொண்டால் அதற்கான உரிமை அவளுக்கு உண்டு. தாய் வழி உறவினரையோ நம்பகமான பெரியவர்களையோ அப்பெண் நியமித்தால் அவர்கள் பொறுப்பாளராக ஆக முடியும்.
இது குறித்த விபரங்களைக் காண்போம்.
صحيح البخاري
6970 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلاَ تُنْكَحُ البِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ» قَالُوا: كَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ»
6970 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கன்னி கழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாத வரை அவளுக்கு மண முடித்து வைக்கலாகாது. கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது என்று கூறினார்கள். மக்கள், எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)? என்று கேட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவள் மௌனமாயிருப்பதே (அதற்கு அடையாள மாகும்) என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 6970
صحيح البخاري
6971 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ ذَكْوَانَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «البِكْرُ تُسْتَأْذَنُ» قُلْتُ: إِنَّ البِكْرَ تَسْتَحْيِي؟ قَالَ: «إِذْنُهَا صُمَاتُهَا
6971 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(திருமண விஷயத்தில்) கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரவேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், கன்னிப் பெண் (வெளிப்படையாகத் தன் சம்மதத்தைத் தெரிவிக்க) வெட்கப்படுவாளே? என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளுடைய அனுமதி என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 6971
பொறுப்பாளர் எனும் தகுதி நிபந்தனைக்கு உடபட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் விளக்குகிறார்கள். தாம் விரும்பும் ஆணுக்கு தனது பொறுப்பில் உள்ள பெண்னைத் திருமணம் செய்து கொடுக்கும் அளவுக்கு பொறுப்பாளருக்கு அதிகாரம் இல்லை. பெண்ணிடம் சம்மதம் கேட்டு அவர் சம்மதித்தால் மட்டுமே பொறுப்பாளர் திருமணம் செய்து கொடுக்க முடியும்.
கணவன் யார்? மஹர் என்ன என்பது உள்ளிட்ட அனைத்திலும் பெண்ணின் சம்மதம் அவசியமாகும். பெண்ணின் விருப்பத்தின் படி செயல்படும் ஊழியர் நிலையில் தான் பொறுப்பாளரின் அதிகாரம் உள்ளது. தன் விருப்பப்படி செயல்படும் அதிகாரம் திருமண விஷயத்தில் இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.
பெண்ணின் விருப்பபடி திருமணம் செய்து கொடுக்க பொறுப்பாளர் மறுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி மறுத்தால் ஒரு பெண் திருமணம் செய்யாமலே இருக்க வேண்டும் என்று அறிவுடைய மக்கள் முடிவு செய்ய மாட்டார்கள். பொறுப்பாளர் அல்லாத ஒருவரை பொறுப்பாளராக ஆக்கி அவர் திருமணம் செய்ய வேண்டுமே தவிர பொறுப்பாளர் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் திருமணம் எனும் நபிவழியைப் புறக்கணிக்க முடியாது.
صحيح البخاري
2310 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي قَدْ وَهَبْتُ لَكَ مِنْ نَفْسِي، فَقَالَ رَجُلٌ: زَوِّجْنِيهَا، قَالَ: «قَدْ زَوَّجْنَاكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ»
2310 ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னை அன்பளிப்பாகத் தந்துவிட்டேன்! என்றார். அங்கிருந்த ஒரு மனிதர் இவரை எனக்கு மணமுடித்துத் தாருங்கள்! என்று கேட்டார். உம்மிடமிருக்கும் குர்ஆன் பற்றிய ஞானத்தின் காரணமாக உமக்கு இவரை மணமுடித்துத் தந்தோம்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 2310
صحيح البخاري
5120 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ العَزِيزِ بْنِ مِهْرَانَ، قَالَ: سَمِعْتُ ثَابِتًا البُنَانِيَّ، قَالَ: كُنْتُ عِنْدَ أَنَسٍ وَعِنْدَهُ ابْنَةٌ لَهُ، قَالَ أَنَسٌ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَلَكَ بِي حَاجَةٌ؟ ” فَقَالَتْ بِنْتُ أَنَسٍ: مَا أَقَلَّ حَيَاءَهَا، وَا سَوْأَتَاهْ وَا سَوْأَتَاهْ، قَالَ: «هِيَ خَيْرٌ مِنْكِ، رَغِبَتْ فِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا»
5120 ஸாபித் அல் புனானி அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் (ரலி) அவர்கள் அருகில் இருந்தேன். அன்னாருடன் அவர்களுடைய புதல்வியார் ஒருவரும் இருந்தார். (அப்போது) அனஸ் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு கோரியபடி ஒரு பெண் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (மணமுடித்துக் கொள்ள) நான் தங்களுக்கு அவசியமா? எனக் கேட்டார் என்று கூறினார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்களுடைய புதல்வி, என்ன வெட்கங்கெட்டத் தனம்! என்ன அசிங்கம்! என்ன அசிங்கம்!! என்று சொன்னார்.அனஸ் (ரலி) அவர்கள், அந்தப் பெண்மணி உன்னை விடச் சிறந்தவர்; அந்தப் பெண் நபியவர்களை (மணந்துகொள்ள) ஆசைப்பட்டார். ஆகவே, தன்னை மணந்து கொள்ளுமாறு கோரினார் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 5120
ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தன்னை ஒப்படைப்பதாகச் சொல்கிறார். அதாவது நீங்கள் என்னை மணந்து கொள்ளுங்கள் அல்லது யாருக்காவது மணமுடித்துக் கொடுங்கள் என்பது இதன் கருத்தாகும். அதாவது வலி எனும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.
பொறுப்பாளரை மாற்றும் அதிகாரம் பெண்ணுக்கு இல்லை என்றால் உன் பொறுப்பாளரை அழைத்து வா என்றோ பொறுப்பாளர் எங்கே என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டிருப்பார்கள்.
சபையில் இருந்த ஒருவர் தனக்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து தரும்படி கேட்ட போது நான் திருமணம் செய்து தர முடியாது; பெண்ணின் பொறுப்பாளர் தான் திருமணம் செய்து வைக்க முடியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்கள். அப்படி எதுவும் கேட்காமல் பெண் சார்பில் கேட்கும் மஹரை தாமே முடிவு செய்து அப்பெண்ணை அவருக்கு மனமுடித்துக் கொடுக்கிறார்கள்.
பொறுப்பாளர் சரியில்லை என்று ஒரு பெண் கருதினால் தாய் வழி உறவுகளையோ அல்லது சமுதாயப் பிரமுகரையோ பொறுப்பாளராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளலாம். அப்படி கேட்கப்பட்டவர் பொறுப்பாளராக ஆகிக் கொள்ளலாம் என்பது இதில் இருந்து தெரிகிறது.
பொறுப்பாளராக இருப்பவர் பெண் விரும்பாத ஒருவருக்கு கட்டாயப்படுத்தி அவரைத் திருமணம் செய்து வைத்து விடக் கூடும். அப்படி நடந்தால் அதன் நிலை என்ன என்பது பின்வரும் ஹதீஸில் இருந்து தெரிகிறது.
صحيح البخاري
6969 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ القَاسِمِ: أَنَّ امْرَأَةً مِنْ وَلَدِ جَعْفَرٍ، تَخَوَّفَتْ أَنْ يُزَوِّجَهَا وَلِيُّهَا وَهِيَ كَارِهَةٌ، فَأَرْسَلَتْ إِلَى شَيْخَيْنِ مِنَ الأَنْصَارِ: عَبْدِ الرَّحْمَنِ وَمُجَمِّعٍ ابْنَيْ جَارِيَةَ، قَالاَ: فَلاَ تَخْشَيْنَ، فَإِنَّ خَنْسَاءَ بِنْتَ خِذَامٍ «أَنْكَحَهَا أَبُوهَا وَهِيَ كَارِهَةٌ، فَرَدَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ» قَالَ سُفْيَانُ: وَأَمَّا عَبْدُ الرَّحْمَنِ، فَسَمِعْتُهُ يَقُولُ: عَنْ أَبِيهِ: «إِنَّ خَنْسَاءَ»
6969 காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அவர்கள் கூறியதாவது:
ஜஅஃபர் அவர்களுடைய மக்களில் ஒரு பெண்மணி, தன்னைத் தன் காப்பாளர் தனக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்து வைக்கப்போகிறார் என அஞ்சினார். ஆகவே, அப்பெண்மணி ஜாரியா என்பவரின் (புதல்வர் யஸீதுடைய) புதல்வர்களான அப்துர் ரஹ்மான் , முஜம்மிஉ ஆகிய இரு அன்சாரிப் பெரியவர்களிடம் ஆளனுப்பி வைத்தார். அவர்கள் இருவரும், (பெண்களே!) அஞ்சாதீர்கள். ஏனெனில், கிதாம் என்பவரின் புதல்வியான கன்ஸாவை அவருடைய தந்தை அவருக்குப் பிடிக்காத ஒருவருக்கு மண முடித்துவைத்தார். (இது குறித்து அப் பெண்மணி முறையிட்ட போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்திருமணத்தை ரத்துச்செய்தார்கள் என்று கூறியனுப்பினார்கள்.
நூல் : புகாரி 6969
பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக செய்து வைத்த திருமணத்தை ரத்து செய்து பொறுப்பாளருக்கு தனி அதிகாரம் இல்லை என்று தெளிவுபடுத்துகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அப்பெண் பொறுப்பை ஒப்படைத்தது சமுதாயத் தலைவர் என்ற முறையில் தான் இதற்கு சிலர் விளக்கம் கொடுத்தாலும் அந்தத் தலைவர் பெண்ணின் பொறுப்பாளருக்கு அப்பொறுப்பை வழங்கலாம் என்பதும் அதில் அடங்கி விடும்.
பெண்களின் உரிமை சம்மந்தப்பட்ட விஷயத்தில் தனது பொறுப்பாளராக யார் இருக்க வேண்டும் என்பது பற்றியும் அவளே முடியும் செய்ய உரிமை உள்ளது என்பதே சரியாகும்.