317. தத்துப் பிள்ளைகள்

இவ்வசனங்களில் (33:4, 58:2) தத்துப் பிள்ளைகள் சொந்தப் பிள்ளைகளாக ஆக மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

குழந்தை இல்லாதவர்கள் கொஞ்சி மகிழ்வதற்காக பிறரது குழந்தையை எடுத்து தமது பிள்ளை போல் வளர்ப்பதை இஸ்லாம் ஏன் தடுக்கிறது என்பதைத் தக்க காரணத்துடன் திருக்குர்ஆன் விளக்குகிறது

இவ்வுறவு போலித்தனமான உறவாகும். போலித்தனமான எல்லாவிதமான உறவுகளையும் இஸ்லாம் நிராகரிக்கிறது. தனது தந்தை இன்னார் என்று தெரிந்திருந்தும் வேறொருவரைத் தனது தந்தை எனக் கூறும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். யாருக்கோ பிறந்த பிள்ளையைத் தனது பிள்ளை என்று கூறிச் சொந்தம் கொண்டாடுகின்ற தந்தைமார்களும் இருக்கிறார்கள்.

இது வாய் வார்த்தைகளால் மனிதர்கள் செய்துகொள்கின்ற கற்பனை தானே தவிர, ஒருவரது பிள்ளை எந்தக் காரணத்தைக் கொண்டும் இன்னொருவனுக்குப் பிள்ளையாக முடியாது.

ஒரு மனிதன் தனக்குப் பிறக்காத குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் தந்தையாக முடியாது. இது மனிதர்களாகச் சொல்லிக் கொள்கின்ற வார்த்தை என்று கூறி இஸ்லாம் இதை அடியோடு நிராகரிக்கின்றது.

இரத்த சம்பந்தமான உறவுகள் ஏற்பட வேண்டுமானால் உண்மையிலேயே இரத்த சம்பந்தம் இருக்க வேண்டும். அது தான் நேர்மையானது; நீதியானது எனவும் இவ்வசனம் (33:4,5) அறிவுரை கூறுகின்றது.

ஓரு குழந்தை உருவாவதற்கு காரணமாக இருந்தவனே அக்குழந்தையின் தந்தையாக இருக்க முடியும். வளர்த்தவரை தந்தை என்று கூறுவது பொய்யாகும்.

ஒரு பிராணியை ஒருவன் வளர்த்தால் அப்பிராணிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா? ஒரு செடியை ஒருவன் வளர்ப்பதால் அச்செடிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா? தத்தெடுத்து வளர்ப்பவரை தந்தை என்று கூறுவது இது போன்றே அமைந்துள்ளது.

வளர்ப்பவரைப் பொறுப்பாளர் என்று கூறலாம். தந்தை என்று கூறுவது போலி உறவாகும்.

இஸ்லாமின்  ஆரம்ப கட்டத்தில் ஒருவர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தால் அக்குழந்தைக்கு அவர் தான் தந்தை என்று கருதும் வழக்கம் இருந்தது. வளர்ப்பு மகன், தன்னை எடுத்து வளர்த்தவருக்கு வாரிசாகி வந்தார். பின்பு இஸ்லாம் இதைத் தடை செய்து விட்டது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

“வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்” எனும் 33:5 வசனம் அருளப்படும் வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வளர்க்கப்பட்ட ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை முஹம்மதின் புதல்வர் ஸைத் என்றே அழைத்து வந்தோம்.

(நூல் : புகாரீ 4782)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைத் என்பவரை எடுத்து வளர்த்ததாகவும், அதனால் அவர் முஹம்மதின் மகன் அழைக்கப்பட்டதாகவும், வளர்த்தவர் தந்தையாக முடியாது என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தவுடன் அவ்வாறு அழைக்கப்படுவது நிறுத்தப்பட்டதாகவும் இந்த ஹதீஸ் கூறுகிறது.

அது போல் தத்தெடுத்து வளர்க்கும் பெண்கள் அக்குழந்தைக்குத் தாயாக முடியாது.

அக்குழந்தை ஆண் குழந்தையாக  இருந்து பருவ வயதை அடைந்துவிட்டால் ஒரு அந்நியரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அந்த ஒழுங்குகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக தன்னால் வளர்க்கப்பட்ட ஆண் குழந்தை இளமைப்பருவம் அடைந்த பின் அவருடன் தனியாக இருப்பது, பர்தா இல்லாமல் அவருக்கு முன்னால் காட்சி தருவது போன்றவை கூடாது. அந்நிய ஆணுடைய அந்தஸ்தையே அவருக்குக் கொடுக்க வேண்டும்.

ஒருவர் குழந்தை இல்லை என்பதற்காக ஆண் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். பின்னர் அவருக்கு அல்லாஹ் ஒரு பெண் குழந்தையைக் கொடுக்கிறான். அந்தப் பெண் குழந்தை பருவமடைந்ததும் அவர் வளர்த்த ஆணுக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுக்கலாம். ஏனெனில் அந்த ஆண் இவரது மகனல்ல. எனவே இவரது மகளுக்கும் அவன் சகோதரனாக மாட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது.

இது போல் வளர்த்தவர் மரணித்து விட்டால் அவரது சொத்துக்களுக்கு பெற்ற மகன் வாரிசாவது போல், வளர்க்கப்பட்டவன் வாரிசாக முடியாது. ஏனெனில் இவன் அவரது மகன் அல்ல. உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் போன்ற பல உறவினர்கள் இருக்கும் போது யாரோ ஒருவனை வாரிசு எனக் கூறுவது அந்த உறவினர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். உறவினர்களைப் பகைக்கும் நிலைமை ஏற்படும்.

வளர்க்கப்பட்டவனுக்கு ஏதேனும் கொடுக்க விரும்பினால் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமல் மரண சாசனம் எழுதலாம். அல்லது உயிருடன் இருக்கும் போதே எதையாவது கொடுக்கலாம்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாமா

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா? முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற ...

ஒட்டு முடி வைக்கலாமா

ஒட்டு முடி வைக்கலாமா பதில் : ஒட்டுமுடி வைத்துக் கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 5205حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ هُوَ ...

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ ...

குர்ஆன் ஓதத் தெரியாதவர் எப்படி தொழுவது?

குர்ஆனில் எதுவும் மனனம் இல்லாதவர்கள் எப்படி தொழுவது? தொழுகையை துவக்கும் போது ஆரம்பமாக ஓதும் துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அதன் பின்னர் அல்ஹம்து அத்தியாயமும் தெரிந்த அத்தியாயங்களும் ஓதவேண்டும் ...

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா நம் தமிழகத்து மவ்லவிமார்களில் பலரும் அரைக்கைச் சட்டை அணியக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பொதுவாக அரைக்கைச் சட்டை அணியலாம் என்றாலும்,தொழுகையின் போது முழங்கை வரை மறைக்க ...

ஜனாஸா தொழுகைச் சட்டங்கள்

ஜனாஸா தொழுகை சட்டங்கள் இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் ...

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா? துல்ஹஜ் மாதம் 1 முதல் 9 வரை சிலர் நோன்பு வைக்கிறார்கள், அப்படி வைக்கலாமா? அல்லது 9 அரபாத் நாள் மட்டும் வைக்க ...

கலீஃபாக்கள் யார்? அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?

நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா? நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். 2600حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா? பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள். صحيح البخاري 5504 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ...

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா? இக்பால், முத்துப்பேட்டை பதில் மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் ...

விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் ஷாத் எனும் வகையில் அடங்குமா

ஸாயிதா பற்றிய விமர்சனம் ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் இவரைத் தொடர்பு படுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சிலர் செய்து ...

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? கட்டுரை

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் ...

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...