அப்சல் குரு விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி நியாயம்!

அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பின் மூலம் நீதி சாகடிக்கப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்நாட்டில் அடுத்தடுத்து தொடர் சமபவங்கள் அரங்கேறி வருகின்றன.

வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட முஸ்லிம் பத்திரிக்கையாளர்:

டெல்லியில் உள்ள பிரபல பத்திரிக்கையாளர் இப்திகார் ஜிலானியின் வீட்டை டெல்லி போலீசார் சுற்றி வளைத்து அவரை வீட்டுக் காவலில் அடைத்து நமது நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து(?) வருகின்றார்கள்.

பாராளுமன்றம் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான இப்திகார் ஜிலானியின் வீட்டுக்குச் சென்ற டெல்லி போலீசார், ஜிலானி வீட்டை விட்டு வெளியே போக முடியாதபடி அவரைத் தடுத்து நிறுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் கவுன்சிலிங் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜுவிடம் ஜிலானி புகார் தெரிவித்தார். தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களையும், குழந்தைகளையும் டெல்லி போலீசார் அவமதித்து வேதனைப்படுத்தியதாகவும் அவர் புகாரில் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஜிலானியை வெளியே போக விடாமல் தடுத்து நிறுத்திய டெல்லி போலீசாரை சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து மார்கண்டேய கட்ஜு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் சட்டத்தை மீறிய வகையில் ஜிலானியில் வீட்டுக்குள் நுழைந்த டெல்லி போலீசார் அவரை வீட்டுக் காவலில் கைது செய்தது போல் செயல்பட்டு வெளியே போகவிடாமல் தடுத்து சிறைப்படுத்தி வைத்தனர். அவரது குடும்பத்தார், குழந்தைகள் ஆகியோரையும் துன்புறுத்தியுள்ளனர். இத்தகைய செயல்கள் ஜெர்மனியில் நடைபெற்ற நாஜியின் சர்வாதிகார ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது.

ஜனநாயகத்துக்கு மாறான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரான இந்த செயல்களில் ஈடுபட்ட போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது இன்னும் 48 மணி நேரத்துக்குள் சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும். என்று அந்த கடிதத்தில் மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

இப்படி முஸ்லிம்கள் என்றால் ஒரு நீதியும், முஸ்லிம் அல்லாதவர்கள் என்றால் ஒரு நீதியும் வழங்கும் அரசுகளும், நீதிமன்றங்களும் சிறுகச் சிறுக நீதி நியாயங்களை சாகடித்து வருகின்றனர்.

கிலானி சொன்ன உண்மைகள்:

அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட இதே நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு கொடுமையான சித்தரவதைகள் அனுபவித்து பிறகு குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட டெல்லி பேராசிரியர் கீலானி அவர்கள் சில செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்சல் குருவிற்காக அவரது மனைவி தான் கருணை மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனைவி தபாசமிற்கு இந்தத்தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் அவரது உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காதது மிகப்பெரிய மோசடி என்று பேராசிரியர் கீலானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நான் இப்போது தான் அப்சல் மனைவியிடம் பேசினேன். அவருக்கு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது தெரியவில்லை. செய்தி சானல்கள் வழியே தான் அவர் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது, இது மனித உரிமைக்கு விழுந்துள்ள பெரிய அடி என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிப்ரவரி 4 ஆம் தேதியே தூக்கு உறுதி செய்யப்பட்டது என்றால் ஏன் அவரது மனைவியிடம் தெரிவிக்கப்படவில்லை? இது மட்டுமல்ல கருணை மனு நிராகரிப்பு மீதான நீதித்துறை மறுபரிசீலனையும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் மக்புல் பட் 1984ஆம் ஆண்டு இவ்வாறுதான் அவரது குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரக்சியமாக தூக்கிலிடப்பட்டு திகாரிலேயே புதைக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் அனைத்து சட்ட நடைமுறைகளும் புறந்தள்ளப்பட்டுள்ளது. அவருக்குத் தூக்கு தண்டனை அளித்தது முழுதும் அரசியல் தீர்மானமே. சட்டம் ஒழுங்கு என்று கூறப்படுவது ஒரு சாக்குப் போக்குதான். இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார் பேராசிரியர் கீலானி.

அப்சல் குருவை துக்கிலிட்டு புதைக்கப்பட்ட பிறகு அவரது குடும்பத்திற்கு கிடைத்த கடிதம்:

பிப்ரவரி 6ஆம் தேதியே அப்சல் குரு குடும்பத்திற்கு தூக்கிலிடப்படும் செய்தியை ஸ்பீட் போஸ்டில் அனுப்பி விட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் கூறியிருந்தது. ஆனால் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் உறையில் உள்ள ஸ்டாம்பில் பிப்ரவரி 8ஆம் தேதி என்று இருந்தது.

பிப்ரவரி 9ஆம் தேதி சனிக்கிழமையன்று திகார் ஜெயிலில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு, தூக்கிலிடப்படும் செய்தி அடங்கிய ஸ்பீட் போஸ்ட் மிகவும் ஸ்பீடாக பிப்ரவரி 11ஆம் தேதி அவரது குடும்பத்தினரிடம் சேர்ந்துள்ளது!! ஸ்பீட் போஸ்டின் ஸ்பீட் இதுவென்றால் சாதாரண போஸ்ட் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்!

இதைவிடக்கொடுமை, இந்தக் கடிதம் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பிப்ரவரி 9ஆம் தேதியன்று மாலை ஜம்மு காஷ்மீர் தபால் நிலையத்திற்கு கிடைத்துள்ளது.

கடிதத்தில் அப்சல் குருவின் கிராமத்தின் முகவரி இருந்துள்ளது.

கடிதத்தை நாங்கள் வாங்க முதலில் மறுத்தோம், ஆனால் உறவினர்கள் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம் என்று கூறினார்கள் அதனால் வாங்கினோம், தூக்கிலிடப்பட்டு உடலும் புதைக்கப்பட்ட பிறகு தூக்கிலிடப்படும் செய்தி எங்களுக்குக் கிடைத்து என்ன பயன் என்று அவரது குடும்பத்தினர் ஆதங்கத்துடன் கேள்வியெழுப்பினர்.

உள்துறை அமைச்சகம் அன்று வாய்கிழிய தொலைக்காட்சியில் அப்சல் குருவின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியதாக கூறி வந்தது. இப்போது குட்டு உடைந்தது.

மற்றொரு வேதனையான வேடிக்கை என்னவெனில் அரசுத் தரப்பில் பிப்ரவரி 6ஆம் தேதியே அப்சல் குரு குடும்பத்திற்கு தூக்கிலிடப்படும் செய்தியை ஸ்பீட் போஸ்டில் அனுப்பிவிட்டோம் என்று கூறியிருந்தது. ஆனால் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் உறையில் உள்ள ஸ்டாம்பில் பிப்ரவரி 8ஆம் தேதி என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது.

இப்போது இந்தக் கடிதம் கையில் கிடைப்பது மிகவும் கொடூரமானது என்று அப்சல் குடும்பத்தினர் வேதனையுடன் கூறியுள்ளனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது இந்த செயல் என்றும் அப்சல் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இதுதான் இவர்கள் கடைபிடிக்கும் நீதி பரிபாலனம்..

காங்கிரஸ் கயவர்களுக்கு சமாதி கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் தக்க பாடம் கற்பிப்பது நிச்சயம்.

11.02.2013. 8:35 AM

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...