ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது

ஒருவர் மரணித்தவுடன், அல்லது மரணச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டும். நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்  என்பது இதன் பொருள்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது  நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

திருக்குர்ஆன் 2.155, 156, 157

மேற்கண்ட சொற்களை மரணத்தின் போது மட்டுமின்றி நமக்கு ஏற்படும் எத்தகைய துன்பத்தின் போதும் கூறுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

நமக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவரின் இழப்பு நம்மைப் பாதிக்கும் என்றால் பிரார்த்தனையையும் சேர்த்துக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர்.

صحيح مسلم 2165 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ – أَخْبَرَنِى سَعْدُ بْنُ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ كَثِيرِ بْنِ أَفْلَحَ عَنِ ابْنِ سَفِينَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَا مِنْ مُسْلِمٍ تُصِيبُهُ مُصِيبَةٌ فَيَقُولُ مَا أَمَرَهُ اللَّهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِى فِى مُصِيبَتِى وَأَخْلِفْ لِى خَيْرًا مِنْهَا. إِلاَّ أَخْلَفَ اللَّهُ لَهُ خَيْرًا مِنْهَا ». قَالَتْ فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُ أَىُّ الْمُسْلِمِينَ خَيْرٌ مِنْ أَبِى سَلَمَةَ أَوَّلُ بَيْتٍ هَاجَرَ إِلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. ثُمَّ إِنِّى قُلْتُهَا فَأَخْلَفَ اللَّهُ لِى رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم-. قَالَتْ أَرْسَلَ إِلَىَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- حَاطِبَ بْنَ أَبِى بَلْتَعَةَ يَخْطُبُنِى لَهُ فَقُلْتُ إِنَّ لِى بِنْتًا وَأَنَا غَيُورٌ. فَقَالَ « أَمَّا ابْنَتُهَا فَنَدْعُو اللَّهَ أَنْ يُغْنِيَهَا عَنْهَا وَأَدْعُو اللَّهَ أَنْ يَذْهَبَ بِالْغَيْرَةِ ».

ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது இறைவன் கட்டளையிட்டவாறு  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்  எனக் கூறிவிட்டு அல்லாஹும்ம மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தி வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா (இறைவா! எனது இத்துன்பத்துக்காக நீ கூலி தருவாயாக! இதை விடச் சிறந்ததை எனக்குப் பகரமாகத் தருவாயாக!) என்று கூறினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் அவருக்குப் பகரமாக்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் என் கணவர் அபூ ஸலமா இறந்த போது  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த குடும்பத்தவரான அபூ ஸலமாவை விட சிறந்த முஸ்லிம் வேறு யார் இருப்பார்?  என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்தப் பிரார்த்தனையைக் கூறினேன். என் கணவருக்குப் பகரமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்குத் தந்தான்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 1525, 1526,

இறந்தவரின் வீட்டுக்கு அல்லது நோயாளியைச் சந்திக்கச் செல்பவர் நல்லதையே கூற வேண்டும். ஒரு நோயாளியை நாம் சந்திக்கச் சென்றால் அவர் பிழைப்பது அரிது என்ற நிலையில் இருந்தாலும், அவருக்கு நல்லதைத் தான் கூற வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தைத் தருவான் என்பன போன்ற சொற்களைத் தான் கூற வேண்டும்.

இது போல் தான் மரணித்தவர் வீட்டுக்குச் சென்றாலும் அவரது உறவினர்களிடம் நல்லதையே கூற வேண்டும்.

صحيح مسلم 2168 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا حَضَرْتُمُ الْمَرِيضَ أَوِ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلاَئِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ ». قَالَتْ فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سَلَمَةَ قَدْ مَاتَ قَالَ « قُولِى اللَّهُمَّ اغْفِرْ لِى وَلَهُ وَأَعْقِبْنِى مِنْهُ عُقْبَى حَسَنَةً ». قَالَتْ فَقُلْتُ فَأَعْقَبَنِى اللَّهُ مَنْ هُوَ خَيْرٌ لِى مِنْهُ مُحَمَّدًا -صلى الله عليه وسلم-.

நீங்கள் நோயாளியையோ, மரணித்தவரையோ காணச் சென்றால் நல்லதையே கூறுங்கள். ஏனெனில் நீங்கள் கூறுவதற்கு வானவர்கள் ஆமீன் கூறுகின்றனர்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 1527

மரணச் செய்தியைக் கேட்டவுடன் பாவமன்னிப்புத் தேடல்

மரணச் செய்தி நம்மிடம் கூறப்பட்டால்  அவரை அல்லாஹ் மன்னிக்கட்டுமாக!  என்று அவருக்காக உடனே துஆச் செய்ய வேண்டும்.

صحيح البخاري 1327 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ أَنَّهُمَا حَدَّثَاهُ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: نَعَى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجَاشِيَّ صَاحِبَ الحَبَشَةِ، يَوْمَ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ»

அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஷி இறந்த செய்தியை நபிகள் நாயகம் அறிவித்த போது  உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1328

مسند أحمد بن حنبل 22604 – حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الرحمن بن مهدي ثنا الأسود بن شيبان عن خالد بن شمير قال : قدم علينا عبد الله بن رباح فوجدته قد اجتمع إليه ناس من الناس قال ثنا أبو قتادة فارس رسول الله صلى الله عليه و سلم قال بعث رسول الله صلى الله عليه و سلم جيش الأمراء وقال عليكم زيد بن حارثة فإن أصيب زيد فجعفر فإن أصيب جعفر فعبد الله بن رواحة الأنصاري فوثب جعفر فقال بأبي أنت يا نبي الله وأمي ما كنت أرهب أن تستعمل على زيدا قال امضوا فإنك لا تدري أي ذلك خير قال فانطلق الجيش فلبثوا ما شاء الله ثم أن رسول الله صلى الله عليه و سلم صعد المنبر وأمر أن ينادى الصلاة جامعة فقال رسول الله صلى الله عليه و سلم ناب خير أو ثاب خير شك عبد الرحمن ألا أخبركم عن جيشكم هذا الغازي إنهم انطلقوا حتى لقوا العدو فأصيب زيد شهيدا فاستغفروا له فاستغفر له الناس ثم أخذ اللواء جعفر بن أبي طالب فشد على القوم حتى قتل شهيدا أشهد له بالشهادة فاستغفروا له ثم أخذ اللواء عبد الله بن رواحة فأثبت قدميه حتى أصيب شهيدا فاستغفروا له ثم أخذ اللواء خالد بن الوليد ولم يكن من الأمراء هو أمر نفسه فرفع رسول الله صلى الله عليه و سلم إصبعيه وقال اللهم هو سيف من سيوفك فانصره وقال عبد الرحمن مرة فانتصر به فيومئذ سمي خالد سيف الله ثم قال النبي صلى الله عليه و سلم انفروا فأمدوا إخوانكم ولا يتخلفن أحد فنفر الناس في حر شديد مشاة وركبانا

ஸைத் (ரலி), ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோரின் மரணச் செய்தியை மக்களுக்கு நபிகள் நாயகம் அறிவித்த போது  அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்  எனக் கூறியுள்ளனர்.

நூல்: அஹ்மத் 21509

இறந்தவரை ஏசக் கூடாது

ஒருவர் மரணித்து விட்டால் அவரைப் பற்றி நல்லதாகக் கூற முடிந்தால் அவ்வாறு கூற வேண்டும். நல்லதாகக் கூறுவதற்கு ஏதும் இல்லாவிட்டால் வாய் மூடிக் கொள்ள வேண்டும். ஏசுவதற்கு அனுமதி இல்லை.

صحيح البخاري 1393 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَسُبُّوا الأَمْوَاتَ، فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا»

இறந்தவர்களை நீங்கள் ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் செய்ததை (அதன் பயனை) அவர்கள் அடைந்து விட்டனர்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1393, 6516

سنن الترمذي 1982 – حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، قَالَ: سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تَسُبُّوا الأَمْوَاتَ فَتُؤْذُوا الأَحْيَاءَ.

இறந்தவரை ஏசி உயிருடன் உள்ளவர்களை வேதனைப்படுத்தாதீர்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)

நூல்: திர்மிதீ 1905