பன்றித்தோல் தொடர்பான வியாபாரம் கூடுமா?

முத்து முஹம்மத்

பதில் :

எந்தப் பிராணியின் தோலானாலும் அது பதனிடப்பட்டால் தூய்மையடைந்து பயன்படுத்துவதற்கு ஏற்றதாகி விடுகின்றது. இதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

547 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ وَعْلَةَ أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ طَهُرَرواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை அடைந்துவிடும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

தோல் பதனிடப்பட்டால் அது தூய்மையாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது ஹராமாக்கப்பட்ட பிராணிகளின் தோலைப் பற்றியதாகத் தான் இருக்க முடியும். முறையாக அறுக்கப்பட்ட ஹலாலான பிராணிகளைப் பொருத்த வரை மலஜலம் தவிர அதன் அனைத்து பாகங்களுமே தூய்மையானவை தான். அதனால் தான் அதை நாம் உண்ணுகிறோம்.

உண்ண அனுமதிக்கப்படாத பிராணிகள் தூய்மையற்றவையாக உள்ளதால் அதன் தோலும் தூய்மையற்றதாக இருக்கும் என்ற சந்தேகம் ஏற்படும். எனவே தான் தோல் பதனிடப்பட்டால் அது தூய்மையாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதி விலக்கு அளிக்கின்றனர்.

1797 حَدَّثَنَا سُفْيَانُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنِ ابْنِ وَعْلَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ رواه أحمد

எந்தத் தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறனார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அஹ்மது

السنن الكبرى للبيهقي  – كتاب الطهارة

 أخبرنا أبو القاسم عبد الرحمن بن عبيد الله بن عبد الله بن الحربي من أهل الحربية ببغداد ، نا أبو بكر محمد بن عبد الله الشافعي ، أنا إبراهيم بن الهيثم ، ثنا علي بن عياش ، ثنا محمد بن مطرف ، عن زيد بن أسلم ، عن عطاء بن يسار ، عن عائشة ، عن النبي صلى الله عليه وسلم قال :   طهور كل إهاب دباغه   . رواته كلهم ثقات *

பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : பைஹகீ

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் கூடுதலாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

முதல் ஹதீஸில் அய்யுமா இஹாபின் அதாவது எந்தத் தோலாயினும் பாடம் செய்யப்பட்டால் அது தூய்மையாகி விடும் எனக் கூறுகிறார்கள்.

இரண்டாவது ஹதீஸில் குல்லு இஹாபின் ஒவ்வொரு தோலும் பாடம் செய்யப்பட்டால் அது தூய்மையாகி விடும் என்று கூறுகிறார்கள்.

பாடம் செய்யப்பட்ட எந்தத் தோலையும் தூய்மையற்றவை எனக் கருதக் கூடாது என்ற கருத்தை இந்தச் சொற்கள் தெளிவாகச் சொல்கின்றன.

தாமாகச் செத்த பிராணிகளும் பன்றியைப் போல் ஹராம் என்பதை நாம் அறிவோம். இதைத் தடை செய்யும் வசனத்தில் பன்றியை மூன்றாவதாகக் கூறும் இறைவன் தாமாகச் செத்த பிராணிகளை முதலாவதாகக் கூறுகிறான். தாமாகச் செத்த பிராணியின் மாமிசத்தைத் தடை செய்த இஸ்லாம் அதன் தோலுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துள்ளது.

حدثنا زهير بن حرب حدثنا يعقوب بن إبراهيم حدثنا أبي عن صالح قال حدثني ابن شهاب أن عبيد الله بن عبد الله أخبره أن عبد الله بن عباس رضي الله عنهما أخبره  : أن رسول الله صلى الله عليه و سلم مر بشاة ميتة فقال ( هلا استمتعتم بإهابها ) . قالوا إنها ميتة . قال ( إنما حرم أكلها )

2221 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்றபோது, இதன் தோலை நீங்கள் பயன்படுத்தக் கூடாதா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், இது செத்த ஆடாயிற்றே! என்றனர். அதற்கு அதை உண்பது தான் தடை செய்யப்பட்டுள்ளது! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2221, 1492, 5531, 5532

செத்த ஆடு ஹராமாக இருந்தும் அதன் தோலைப் பயன்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர்.

548 حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مَنْصُورٍ وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا وَقَالَ ابْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا عَمْرُو بْنُ الرَّبِيعِ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ أَنَّ أَبَا الْخَيْرِ حَدَّثَهُ قَالَ رَأَيْتُ عَلَى ابْنِ وَعْلَةَ السَّبَإِيِّ فَرْوًا فَمَسِسْتُهُ فَقَالَ مَا لَكَ تَمَسُّهُ قَدْ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ قُلْتُ إِنَّا نَكُونُ بِالْمَغْرِبِ وَمَعَنَا الْبَرْبَرُ وَالْمَجُوسُ نُؤْتَى بِالْكَبْشِ قَدْ ذَبَحُوهُ وَنَحْنُ لَا نَأْكُلُ ذَبَائِحَهُمْ وَيَأْتُونَا بِالسِّقَاءِ يَجْعَلُونَ فِيهِ الْوَدَكَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ قَدْ سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ دِبَاغُهُ طَهُورُهُ رواه مسلم

அபுல்கைர் மர்ஸத் பின் அப்தில்லாஹ் அல்யஸனீ கூறுகிறார் :

நான் அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ அவர்கள் தோலாடை ஒன்றை அணிந்திருப்பதைக் கண்டேன். நான் அதைத் தடவிப் பார்த்தேன். அப்போது அவர்கள்,  ஏன் இதைத் தடவிப் பார்க்கிறீர்கள்? நான் இதை (அணிவது) பற்றி அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,  நாங்கள் மேற்கே வசித்து வருகிறோம். எங்களுடன் (ஆப்பிரிக்கர்களான) பர்பர் இன மக்களும் அக்னி ஆராதகர்(களான மஜூசி)களும் வசித்து வருகின்றனர். அவர்கள் அறுத்த ஆடுகள் எங்களிடம் கொண்டு வரப்படுவதுண்டு. ஆனால், அவர்கள் அறுத்ததை நாங்கள் சாப்பிடுவதில்லை. மேலும், அவர்கள் தோல் பைகளில் கொழுப்புகளை வைத்து எங்களிடம் கொண்டு வருகின்றனரே (அந்தத் தோலை நாங்கள் பயன்படுத்தலாமா?)  என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள்,  நாங்கள் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அதற்கு அவர்கள்,  அதைப் பதனிடுவதே அதைத் தூய்மையாக்கி விடும்  என்று பதிலளித்தார்கள்   என்றார்கள்.

நூல் : முஸ்லிம்

ஆடு மாடு போன்ற உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் தோலைப் பொறுத்த வரை அது பதனிடப்பட்டாலும் பதினடப்படாவிட்டாலும் அவற்றை பயன்படுத்துவது ஆகுமானதாகும். எனவே மேற்கண்ட ஹதீஸ்கள் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் தோலைப் பற்றிப் பேசவில்லை. மாறாக உண்பதற்குத் தடை செய்யப்பட்ட பிராணிகளின் தோலைப் பற்றியே பேசுகின்றன.

பதனிடுவதற்கு முன்பு தடை செய்யப்பட்டதாக இருந்த பிராணிகளின் தோல் குறித்தே அது பதனிடப்பட்டு விட்டால் பயன்படுத்தலாம் எனக் கூற முடியும். எனவே மேற்கண்ட ஹதீஸ் உண்பதற்குத் தடை செய்யப்பட்ட பிராணிகளின் தோல் பதனிடப்பட்டு விட்டால் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று அனுமதிக்கின்றன.

பன்றி உண்பதற்குத் தடை செய்யப்பட்ட பிராணியாக இருந்தாலும் அதன் தோல் பதனிடப்பட்டு விட்டால் அதை பயன்படுத்திக் கொள்ள இந்த ஹதீஸ்கள் அனுமதிக்கின்றன.

சிலர் பன்றிக்கு மட்டும் இதிலிருந்து விதிவிதிலக்கு அளித்து அதன் தோல் பதனிடப்பட்டாலும் துய்மையாகாது; பயன்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனர்.

ஆனால் இச்சட்டத்திலிருந்து பன்றிக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கு இவர்கள் வைக்கும் வாதங்களும் ஏற்புடையதாக இல்லை.

பன்றியின் மீதுள்ள முஸ்லிம்களுக்கு கடுமையான வெறுப்பு உள்ளது. இதனால் பன்றி விஷயத்தில் இச்சட்டத்தைக் கூற பலருடைய மனம் இடம் கொடுப்பதில்லை. ஆனால் ஹலால், ஹராம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இது போன்று நமது மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானது.

எனவே பன்றித் தோலால் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தலாம். மார்க்கம் அனுமதித்துள்ளது.

20.02.2011. 22:46 PM

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...