வட்டியினால் மனிதனுக்கு நன்மை தானே ஏற்படுகிறது?
வட்டி கடன் மனித குலத்துக்கு நன்மை தராது என்று கூறியுள்ளீர்கள். ஆனால் வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்கினால் சில வருடங்களுக்குள் அதன் மதிப்பு பல மடங்காகி விடுகிறது. முறையாக தவணை செலுத்தினால் வீட்டுக் கடன் நமக்கு நன்மை தான் தருகிறது விளக்கம் தரவும்.
பர்வீன்
பதில்:
வட்டிக்கு கடன் வாங்கி அதன் மூலம் வீடு வாங்கினால் அந்த வீட்டின் மதிப்பு அதிகமாவதால் அதில் நன்மை இருப்பதாக நீங்கள் வாதிடுவதில் எந்த உண்மையும் இல்லை.
பத்து லட்சம் ரூபாய்க்கு வட்டிக்கு கடன் வாங்கி நீங்கள் வீடு வாங்கினால் அதற்கான வட்டி ஒரு லட்சம் சேர்ந்து 11 லட்சமாக ஆகிவிடுகின்றது. பின்னர் 12 லட்சமாக அந்த வீட்டின் மதிப்பு உயர்ந்தால் ஒரு லட்சம் லாபம் என்று உங்களுக்குத் தெரிகிறது. ஆனால் சொந்தக் காசு போட்டு வாங்கினால் அல்லது வட்டியில்லா கடன் மூலம் வாங்கினால் அபோது நமக்கு இரண்டு லட்சம் ரூபாய் நமக்கு லாபமாக ஆகும். இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்க வேண்டியதை ஒரு லட்சமாக குறைத்தது வட்டி தான்.
ஒவ்வொருவரும் தத்தமது வசதிக்கு ஏற்ப வீடு வாங்க முற்பட்டால் ஒரு சதவிகிதம் பேர் வீடு வாங்குவார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் வசதியில்லாதவர்களுக்கும் வீடு வாங்க கடன் கிடைத்தால் இப்போது வீடு வாங்க அலைபவர்களின் சதவிகிதம் பத்து சதமாக ஆகும். இதனால் செயற்கையாக வீடுகளின் விலை அதிகரிக்கப்படும். பத்து வீட்டுக்கு பத்து பேர் போட்டி போடும் நிலை மாறி பத்து வீட்டுக்கு நூறு பேர் போட்டி போடும் நிலை ஏற்பட்டு வீடுகளின் விலை உயரும்.
இந்த வகையிலும் இது கேடாக அமைகின்றது.
இது பற்றி அறிய
அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி ஏன்
27.06.2011. 2:40 AM