Author: PJ Admin

445.வேதத்தை வியாபாரமாக்குதல்

445.வேதத்தை வியாபாரமாக்குதல் இவ்வசனங்களில் (2:41, 2:174, 2:187, 3:199, 5:44, 9:9) அல்லாஹ்வின் வசனங்களை அற்பவிலைக்கு விற்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனை அல்லது அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பனை செய்வதை இது குறிக்காது. அல்லாஹ்வின் வசனங்களை யூதர்கள் வியாபாரமாக ஆக்கியதைக்…

444. தூய ஆவி மூலம் பலப்படுத்துதல்

444. தூய ஆவி மூலம் பலப்படுத்துதல் தூய ஆவியால் ஈஸா நபியைப் பலப்படுத்தினோம் என்று 2:87, 2:253, 5:110 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது. தூய ஆவி இதனை உமது உள்ளத்தில் இறக்கினார் என்று 16:102 வசனத்தில் கூறப்படுகிறது. நம்பிக்கைக்குரிய ஆவி என்று…

443. ஸாபியீன்கள்

443. ஸாபியீன்கள் இவ்வசனங்களில் (2:62, 5:69, 22:17) ஸாபியீன்கள் என்ற பிரிவினர் பற்றி கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஸபூர் வேதப்படி நடப்பவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு எந்தச் சான்றும் இல்லை. மற்றும் சிலர் நெருப்பை வணங்கும் சமுதாயமே ஸாபியீன்கள் என்று கூறுகின்றனர்.…

442. மன்னு, ஸல்வா

442. மன்னு, ஸல்வா இவ்வசனங்களில் (2:57, 7:160, 20:80) இஸ்ரவேலர்களுக்கு மன்னு, ஸல்வா எனும் இரு உணவுகள் இறைவன் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்விரண்டு சொற்களும் அரபு மொழிச் சொற்கள் அல்ல. இவ்விரு உணவுகளும் அரபுகளிடையே அறிமுகமாகி இருந்த உணவும் அல்ல.…

441. உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்ட உயிரினங்கள்

441. உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்ட உயிரினங்கள் இவ்வசனங்கள் (2:28, 3:27, 6:95) உயிரற்றதில் இருந்தே உயிருள்ளவற்றை அல்லாஹ் படைத்துள்ளதாகக் கூறுகின்றன. உயிரற்ற பொருட்களில் இருந்து வேறு உயிரற்ற பொருட்கள் உருவாகியுள்ளன என்பதை நாம் அறிவோம். மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் உயிருள்ளவற்றில் இருந்து…

440. வேறு கோள்களில் உயிரினங்கள்

440. வேறு கோள்களில் உயிரினங்கள் பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதன் வாழ முடியாது என்று திருக்குர்ஆன் கூறுவது 175வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியைத் தவிர மற்ற கோள்களில் மனிதனல்லாத உயிரினங்கள் இருக்க முடியும் என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.…

439. ஊமைத்தன்மைக்குக் காரணம் என்ன

439. ஊமைத்தன்மைக்குக் காரணம் என்ன காதுகளில் ஏற்படும் குறைபாடுகளால் செவிட்டுத் தன்மை ஏற்படும் என்பதையும், கண்களில் ஏற்படும் கோளாறுகளால் பார்வையில் கோளாறு ஏற்படும் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அது போல் ஊமைத்தன்மை ஏற்படுவதற்கு வாயில் ஏற்படும் குறைபாடு காரணமா? என்றால்…

438. ஜம்ஜம் நீரூற்று

438. ஜம்ஜம் நீரூற்று மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் (3:97) கூறுகிறது. தெளிவான அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையிலும், மக்கள் கண்டு களிக்கும் வகையிலும், எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும்…

437. ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது எது?

437. ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது எது? ஒரு குழந்தை உருவாக ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் அவசியம் என்று பல வசனங்களில் கூறும் திருக்குர்ஆன் ஆண் பெண் என தீர்மானிக்கப்படுவதைப் பற்றிக் கூறும் இவ்வசனத்தில் (75:39) அவ்விருவரிலிருந்து எனக் கூறாமல்…

436. நீருக்குள் பிரசவம்

436. நீருக்குள் பிரசவம் 19:23,24 வசனத்தில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப்போது இதைக் கண்டுபிடித்துள்ளது. ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது…