கண்ணீர் விட்டு அழலாம்

ஒருவர் மரணித்து விட்டால் கண்ணீர் விட்டு அழுவது தவறல்ல. அழுவதால் பொறுமையை மேற்கொள்ளவில்லை என்று ஆகிவிடாது. ஏனெனில் பொறுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துன்பங்களின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

صحيح البخاري 1303 – حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَبْدِ العَزِيزِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا قُرَيْشٌ هُوَ ابْنُ حَيَّانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي سَيْفٍ القَيْنِ، وَكَانَ ظِئْرًا لِإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبْرَاهِيمَ، فَقَبَّلَهُ، وَشَمَّهُ، ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ، فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَذْرِفَانِ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ»، ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ العَيْنَ تَدْمَعُ، وَالقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا، وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ» رَوَاهُ مُوسَى، عَنْ سُلَيْمَانَ بْنِ المُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ [ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணத்தை நெருங்கிய போது நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா?  என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்ஃபின் மகனே! இது இரக்க உணர்வு  என்று கூறி விட்டு வேறு வார்த்தையில் பின் வருமாறு விளக்கினார்கள்.  கண்கள் கண்ணீர் வடிக்கின்றன; உள்ளம் கவலைப்படுகிறது; நமது இறைவன் பொருந்திக் கொள்ளாத எதையும் நாம் கூற மாட்டோம். இப்ராஹீமே! உமது பிரிவுக்காக நாம் கவலைப்படுகிறோம்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1303

صحيح البخاري 1304 – حَدَّثَنَا أَصْبَغُ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ سَعِيدِ بْنِ الحَارِثِ الأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: اشْتَكَى سَعْدُ بْنُ عُبَادَةَ شَكْوَى لَهُ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ فَوَجَدَهُ فِي غَاشِيَةِ أَهْلِهِ، فَقَالَ: «قَدْ قَضَى» قَالُوا: لاَ يَا رَسُولَ اللَّهِ، فَبَكَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَأَى القَوْمُ بُكَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكَوْا، فَقَالَ: «أَلاَ تَسْمَعُونَ إِنَّ اللَّهَ لاَ يُعَذِّبُ بِدَمْعِ العَيْنِ، وَلاَ بِحُزْنِ القَلْبِ، وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا – وَأَشَارَ إِلَى لِسَانِهِ – أَوْ يَرْحَمُ، وَإِنَّ المَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ» وَكَانَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «يَضْرِبُ فِيهِ بِالعَصَا، وَيَرْمِي بِالحِجَارَةِ، وَيَحْثِي بِالتُّرَابِ»

ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவரை நோய் விசாரிப்பதற்காக அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) ஆகியோருடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றனர். அவரது குடும்பத்தினர் அவரைச் சுற்றி இருப்பதைக் கண்டனர். முடிந்து விட்டதா?  என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இல்லை  என்று (வீட்டில் உள்ளவர்கள்) கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்கள் அழுவதைக் கண்டவுடன் மக்களும் அழுதார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  கண்ணீர் வடித்ததற்காகவோ, உள்ளத்தால் கவலைப்பட்டதற்காகவோ அல்லாஹ் தண்டிக்க மாட்டான். என்றாலும் இதன் காரணமாகவே தண்டிப்பான் அல்லது அருள் புரிவான்  என்று கூறி விட்டு தமது நாவைச் சுட்டிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1304

صحيح البخاري 1284 – حَدَّثَنَا عَبْدَانُ، وَمُحَمَّدٌ، قَالاَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ إِنَّ ابْنًا لِي قُبِضَ، فَأْتِنَا، فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ، وَيَقُولُ: «إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ، وَلْتَحْتَسِبْ»، فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا، فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمَعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ – قَالَ: حَسِبْتُهُ أَنَّهُ قَالَ كَأَنَّهَا شَنٌّ – فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا؟ فَقَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»

தன் மகன் மரணத்தை நெருங்கி விட்டான் என்ற செய்தியை நபிகள் நாயகத்தின் மகள் (ஸைனப்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லி அனுப்பி  உடனே வர வேண்டும்  என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மகளுக்கு ஸலாம் கூறச் சொல்லிவிட்டு  அல்லாஹ் எடுத்துக் கொண்டது அவனுக்குரியது. அவன் கொடுத்ததும் அவனுக்குரியது. அவனிடத்தில் ஒவ்வொன்றும் நேரம் நிர்ணயிக்கப்பட்டதாக உள்ளது. எனவே அவர் பொறுமையைக் கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்க்கட்டும்  என்று செய்தி சொல்லி அனுப்பினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் சத்தியம் செய்து கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்று மறு செய்தி அனுப்பினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅது பின் உபாதா (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) மற்றும் பலர் புறப்பட்டனர். சிறுவர் (பேரன்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுக்கப்பட்டார். அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.  அல்லாஹ்வின் தூதரே! இது என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இந்த இரக்க உணர்வை அல்லாஹ் மனித உள்ளங்களில் அமைத்திருக்கிறான். தனது அடியார்களிடம் இரக்கம் காட்டுபவருக்கே அல்லாஹ்வும் இரக்கம் காட்டுவான்  என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரி 1284, 5655, 6655, 7377

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுததற்கும் மற்றவர்கள் அழுத போது அதைத் தடுக்காமல் இருந்ததற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

(பார்க்க புகாரி 3063, 1288, 1244, 1293)

அழுகையும் துக்கமும் மூன்று நாட்களே!

அழுவதற்கும், துக்கத்தில் ஆழ்ந்து போவதற்கும் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சரியாக உண்ணாமல் பருகாமல் தொழிலுக்குச் செல்லாமல் இருப்பதற்கும் அனுமதி உண்டு. அனுமதி இருந்தாலும் மூன்று நாட்களுக்குப் பின் அழுவதற்கு அனுமதி இல்லை.

நான்காவது நாளில் வழக்கமான நடவடிக்கைகளில் இறங்கிவிட வேண்டும். அதன் பின்னரும் அழுதால், துக்கத்தை வெளிப்படுத்தினால் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவில்லை என்ற நிலையை அடைவார்கள்.

صحيح البخاري 313 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: أَوْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «كُنَّا نُنْهَى أَنْ نُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا،

இறந்தவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்தக் கூடாது  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். கணவரைத் தவிர. கணவர் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்தலாம்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)

நூல்: புகாரி 313, 5341, 5343

صحيح البخاري 1280 – حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ نَافِعٍ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، قَالَتْ: لَمَّا جَاءَ نَعْيُ أَبِي سُفْيَانَ مِنَ الشَّأْمِ، دَعَتْ أُمُّ حَبِيبَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا بِصُفْرَةٍ فِي اليَوْمِ الثَّالِثِ، فَمَسَحَتْ عَارِضَيْهَا، وَذِرَاعَيْهَا، وَقَالَتْ: إِنِّي كُنْتُ عَنْ هَذَا لَغَنِيَّةً، لَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ، أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلَّا عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»

அபூ ஸுஃப்யான் மரணித்த செய்தி கிடைத்ததும் அவரது மகள் உம்மு ஹபீபா (நபிகள் நாயகத்தின் மனைவி) அவர்கள் மூன்றாம் நாள் அன்று மஞ்சள் நிற நறுமணத்தைக் கொண்டு வரச் சொல்லி தமது விலாவிலும், கையிலும் தடவிக் கொண்டார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பும் பெண்கள், கணவர் தவிர மற்றவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தைக் காட்டக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிருக்கா விட்டால் இந்த நறுமணம் எனக்குத் தேவையற்றது  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைனப் (ரலி)

நூல்: புகாரி 1280, 1282

سنن النسائي 5227 – أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أَنْبَأَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ أَبِي يَعْقُوبَ، عَنْ الْحَسَنِ بْنِ سَعْدٍ يُحَدِّثُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ: أَمْهَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آلَ جَعْفَرٍ ثَلَاثَةً أَنْ يَأْتِيَهُمْ ثُمَّ أَتَاهُمْ، فَقَالَ: «لَا تَبْكُوا عَلَى أَخِي بَعْدَ الْيَوْمِ» ثُمَّ قَالَ: «ادْعُوا إِلَيَّ بَنِي أَخِي»، فَجِيءَ بِنَا كَأَنَّا أَفْرُخٌ فَقَالَ: «ادْعُوا إِلَيَّ الْحَلَّاقَ» فَأَمَرَ بِحَلْقِ رُءُوسِنَا مُخْتَصَرٌ

அபூ தாலிபின் மகன் ஜஃபர் (ரலி) மரணித்த பின் மூன்று நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் ஜஃபரின் குடும்பத்தாரிடம் வந்தார்கள். இன்றைய தினத்துக்குப் பின் என் சகோதரருக்காக அழக் கூடாது எனக் கூறினார்கள். என் சகோதரரின் புதல்வர்களை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார்கள். நாங்கள் பறவைக் குஞ்சுகள் போல (தலைமுடி சீர் செய்யப்படாமல்) கொண்டு வரப்பட்டோம். உடனே நாவிதரை அழைத்து வரச் செய்து எங்கள் தலையை மழிக்குமாறு கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: ஜஃபரின் மகன் அப்துல்லாஹ்

நூல்கள்: நஸாயீ 5132, அபூ தாவூத் 3660, அஹ்மத் 1659

தந்தை இறந்து விட்டால் மகனுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று இந்த ஹதீஸைப் புரிந்து கொள்ளக் கூடாது. கவலையின் காரணமாக ஜஃபரின் குடும்பத்தினர் குழந்தைகளைப் பராமரிக்கவில்லை. முட்டையிலிருந்து வெளி வந்த குஞ்சுகள் எவ்வாறு மயிர்களைச் சிலிப்பிக் கொண்டிருக்குமோ அது போன்ற நிலையில் அக்குழந்தைகள் இருந்ததால் மொட்டை அடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸின் வாசகத்திலிருந்தே இதை அறியலாம்.

ஒப்பாரி வைக்கக் கூடாது

கண்ணீர் விட்டு அழுவதற்கு மட்டும் தான் இஸ்லாத்தில் அனுமதி உள்ளது. ஒப்பாரி வைப்பதற்கு அறவே அனுமதி இல்லை. ஒப்பாரி வைத்தல் இறை மறுப்புக்கு நிகரான குற்றம் என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர்.

صحيح مسلم 236 – وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبِى وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « اثْنَتَانِ فِى النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ الطَّعْنُ فِى النَّسَبِ وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ ».

இரண்டு காரியங்கள் மக்களிடம் உள்ளன. அவை இரண்டும் அவர்களை இறை மறுப்பில் தள்ளி விடும். பிறரது பாரம்பரியத்தைப் பழித்தல், இறந்தவர்களுக்காக ஒப்பாரி வைத்தல்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 100

மூடத்தனமான காரியங்களைச் செய்யக்கூடாது

سنن أبي داود 3131 – حدَّثنا مُسدَّدٌ، حدَّثنا حميدُ بن الأسودِ، حدَّثنا حجاجٌ عاملُ عُمرَ ابن عبد العزيز على الرَّبَذَةِ، قال: حدَّثني أَسيد بن أبي أَسيد عن امرأةٍ من المبايعات، قالتْ: كان فيما أخذَ علينا رسولُ الله – صلى الله عليه وسلم – في المعروفِ الذي أخذ علينا أن لا نعصيَه فيه: أن لا نَخْمِشَ وجهاً، ولا ندعوَ ويْلاً، ولا نَشُقَّ جَيباً، ولا نَنشُرَ شعراً

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களிடம் உடன்படிக்கை எடுத்த போது, இவ்வுடன்படிக்கையை மீறக் கூடாது; துன்பத்தின் போது முகத்தில் கீறக் கூடாது; தீமையை வேண்டக் கூடாது; சட்டையைக் கிழிக்கக் கூடாது; தலை முடியை விரித்துப் போட்டுக் கொள்ளக் கூடாது  என்று உறுதிமொழி எடுத்தனர்.

நூல்: அபூ தாவூத் 2724

صحيح البخاري 1294 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا زُبَيْدٌ اليَامِيُّ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الخُدُودَ، وَشَقَّ الجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الجَاهِلِيَّةِ»

கன்னத்தில் அறைந்து கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், மூடத்தனமான வார்த்தைகளைப் பேசுபவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி 1294, 1297, 1298, 3519

மொட்டையடிக்கக் கூடாது

பொதுவாக ஒருவர் மொட்டை அடிப்பதற்கும், முடி வளர்ப்பதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆயினும் மரணத்திற்கு அடையாளமாக மொட்டை அடிப்பதற்கு அனுமதி இல்லை. கணவன் இறந்ததற்காக மனைவியும் தந்தை இறந்ததற்காக மகனும் மொட்டை அடிக்கும் வழக்கம் பலரிடம் காணப்படுகிறது. இதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.

صحيح مسلم 299 – حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالاَ أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ أَخْبَرَنَا أَبُو عُمَيْسٍ قَالَ سَمِعْتُ أَبَا صَخْرَةَ يَذْكُرُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ وَأَبِى بُرْدَةَ بْنِ أَبِى مُوسَى قَالاَ أُغْمِىَ عَلَى أَبِى مُوسَى وَأَقْبَلَتِ امْرَأَتُهُ أُمُّ عَبْدِ اللَّهِ تَصِيحُ بِرَنَّةٍ. قَالاَ ثُمَّ أَفَاقَ قَالَ أَلَمْ تَعْلَمِى – وَكَانَ يُحَدِّثُهَا – أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « أَنَا بَرِىءٌ مِمَّنْ حَلَقَ وَسَلَقَ وَخَرَقَ ».

அபூ மூஸா (ரலி) அவர்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகி மூர்ச்சயைகி விட்டார். அவரது தலை அவரது மனைவியின் மடி மீது இருந்தது. அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அலறினார். அவருக்கு அபூ மூஸா அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. மயக்கம் தெளிந்ததும்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரை விட்டு நீங்கிக் கொண்டார்களோ அவர்களை விட்டு நானும் நீங்கிக் கொள்கிறேன். அலறுபவள், மொட்டை அடிப்பவள், ஆடைகளைக் கிழித்துக் கொள்பவள் ஆகியோரை விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கிக் கொண்டார்கள்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ புர்தா (ரலி)

நூல்: முஸ்லிம் 149

கவனிக்க ஆள் இல்லாத போது சிறுவர்களின் முடிகளைச் சரியாகப் பராமரிக்க முடியாது என்றால் அதற்காக மொட்டை அடிப்பது தவறல்ல என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

சிரைத்தும் சிரைக்காமலும்

தலை முடியை மழிப்பது என்றால் தலை முழுவதும் மழிக்க வேண்டும். ஒரு பகுதியை மட்டும் மழித்துவிட்டு மற்ற பகுதியை மழிக்காமல் விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

தமிழகத்தின் சில பகுதிகளில் இரண்டு பக்கம் இரண்டு குடுமிகளை விட்டுவிட்டு மற்ற பகுதியைச் சிரைக்கும் வழக்கம் இருக்கிறது. அது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

سنن النسائي 5048 – أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى صَبِيًّا حَلَقَ بَعْضَ رَأْسِهِ وَتَرَكَ بَعْضًا، فَنَهَى عَنْ ذَلِكَ، وَقَالَ: «احْلِقُوهُ كُلَّهُ أَوِ اتْرُكُوهُ كُلَّهُ»

ஒரு சிறுவரின் தலை ஒரு பகுதி சிரைக்கப்பட்டும் இன்னொரு பகுதி சிரைக்கப்படாமலும் இருந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதற்குத் தடை விதித்தார்கள். முழுமையாகச் சிரையுங்கள்; அல்லது முழுமையாக விட்டு விடுங்கள்  என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: நஸாயீ 4962, அஹ்மத் 5358