Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

291. தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடலாமா?

291. தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடலாமா? தூய்மையானவர்களைத் தவிர யாரும் இதைத் தொட மாட்டார்கள் என இவ்வசனத்தில் (56:79) கூறப்படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு தூய்மையில்லாத யாரும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். உளூ எனும் தூய்மை இல்லாதவர்களும், குளிப்பு…

290. அனைவருக்கும் உரிமையான கஅபா

290. அனைவருக்கும் உரிமையான கஅபா பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கும், சாதியினருக்கும், இனத்தவருக்கும் அதிகமான முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் முஸ்லிம்களின் முதன்மையான வணக்கத்தலமாகிய கஅபா ஆலயத்தில் அதன் அருகில் வசிப்பவர்களும், தூரத்தில் வசிப்பவர்களான உலக மக்கள் அனைவரும் சமமான…

289. விதியை நம்புதல் மூட நம்பிக்கையா?

289. விதியை நம்புதல் மூட நம்பிக்கையா? இவ்வசனத்தில் (57:23) விதியை ஏன் நம்ப வேண்டும் என்பதற்கான காரணமும், அதனால் கிடைக்கும் நன்மையும் சொல்லப்படுகிறது. விதியை நம்புவது இஸ்லாமின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகும். இஸ்லாம் மார்க்கத்தில் எல்லா நம்பிக்கைகளுக்கும் அறிவுப்பூர்வமாக விளக்கம் அளிக்க…

288. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு

288. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு வானத்தை “பாதுகாக்கப்பட்ட முகடு” என்று இவ்வசனங்கள் (2:22, 21:32, 40:64, 52:5) கூறுகின்றன. கூரை, முகடு என்று கூறுவதாக இருந்தால் மேலிருந்து வரும் ஆபத்துகளையும், கடும் வெப்பத்தையும், மழையையும், பனியையும் தடுத்து நிறுத்த வேண்டும். “நமக்கு…

287. திருக்குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை

287. திருக்குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை இவ்வசனத்தில் (21:30) வானம், பூமி அவற்றுக்கு இடைப்பட்ட அனைத்தும் ஒரே பொருளாக இருந்தது; அதை நாமே பிளந்தெடுத்தோம் என்று கூறப்படுகின்றது. அதன் பின்னர் புகை மண்டலம் ஏற்பட்டதையும், அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்கள்…

286. இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே?

286. இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே? இவ்வசனங்களில் (58:8,9) “இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா?” என்று அல்லாஹ் கேட்கிறான். இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன என்பதைக் கவனமாகச் சிந்திக்க வேண்டும். ஏ இரகசியம் பேசுவது முதலில் அடியோடு…

285. சூனியம் ஒரு தந்திரமே!

285. சூனியம் ஒரு தந்திரமே! சூனியம், சூனியம் செய்பவர், சூனியம் செய்யப்பட்டவர் ஆகிய சொற்கள் 5:110, 7:109, 7:116, 7:118, 7:119, 7:120, 10:2, 10:76,77, 11:7, 20:57, 20:63, 20:66, 20:69, 20:71, 21:3, 26:35, 26:153, 26:185, 27:13,…

284. புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு

284. புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு இவ்வசனங்களில் (20:53, 43:10, 78:6) பூமியைத் தொட்டிலாக இறைவன் ஆக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால்…

283. முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல்

283. முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல் உள்நோக்கத்துடன் மூஸா நபியிடம் ஃபிர்அவ்ன் கேட்ட கேள்விக்கு சமயோசிதமாகவும், உண்மைக்கு முரணில்லாமலும் மூஸா நபி அளித்த பதில் இவ்வசனத்தில் (20:51,52) எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் தவறான கொள்கையில் இருப்பதாகக் கூறுகிறாயே, அப்படியானால் இதே கொள்கையில்…

282. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு

282. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு இவ்வசனத்தில் (61:6) ஈஸா நபி அவர்கள் தமக்குப் பின் வரவிருக்கின்ற ஓர் இறைத்தூதரைப் பற்றி முன்னறிவிப்பு செய்தார்கள் என்றும், அவரது பெயர் ‘அஹ்மத்’ என்றும் கூறப்படுகிறது. பரவலாக நபிகள் நாயகம் (ஸல்)…