ஈஸா நபி கியாமத் நாளின் அடயாளம் என்பது சரியா?

கேள்வி

43:61 வசனத்தில் ஈஸா நபி மறுமை நாளின் அடையாளம் என்று மொழி பெயர்ப்பு மிக பெரும் மோசடியாக தெரிகிறது. இல்முல் சா அத்தி என்பது மறுமை நாளின் அடையாளம் என்று மொழி பெயர்த்துள்ளீர்கள். இல்ம் என்பது அறிவு என்று இருக்க அது மறுமை குறித்து பேசும் போது ஈஸா நபியை அங்கே தினிப்பதற்காக அறிவை அடையாளமாக மாற்றலாமா? அந்த வசனம் குர்ஆனையே குறிக்கிறது. அதுவே எந்த மாற்றமும் இல்லாமல் நேரடியாக பொருள்படுகிறது. மேலும் அந்த வசனத்தின் முடிவில் ஈஸா நபி மறுமை நாளின் அடையாளம்; எனவே என்னைப் பின்பற்றுங்கள் என்று ரசூல் சல் அவர்களை சொல்லச் சொல்வது கேலியாக முடியும். அவர் மறுமை நாளின் அடையாளம் என்று தான் கிருத்துவர்கள் நம்புகிறார்கள். அதையே ரசூல் சல் அவர்கள் கூறி அதனால் தன்னைப் பின்பற்றச் சொல்வார்களா? அல்லது குர்ஆன் மறுமை நாளின் குறித்த இல்மை தருகிறது என்று சொல்லி தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்வார்கள்?

நௌசாத், சுவீடன்

பதில்

நமது இந்த மொழி பெயர்ப்பு கவனமில்லாமல் செய்யப்பட்டதல்ல. மிகுந்த கவனத்துடன் தான் செய்யப்பட்டுள்ளது. மறு ஆய்வுக்கு இடமில்லாத வகையில் தான் கவனமாகச் செயல்பட்டுள்ளோம்.

அடையாளம் என்ற மொழிபெயர்ப்பு சரியா என்பதை முதலில் பார்ப்போம். பின்னர் உங்கள் வாதம் சரியா எனப் பார்ப்போம்.

43:61 வசனத்தில் இல்மு (عِلْمٌ) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் அறிவு என்று இருக்க அடையாளம் என்று மொழி பெயர்க்கலாமா என்று கேட்டுள்ளீர்கள்.

இல்மு என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்று கருதி இக்கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இச்சொல்லுக்கு கல்வி என்ற பொருளும் உண்டு. அடையாளம் என்ற பொருளும் உண்டு.

علم என்ற சொல்லில் இருந்து தான் علامة (அலாமத்) என்ற சொல் பிறக்கிறது. அடையாளம் என்பது இதன் பொருள். இதன் பன்மைச் சொல்லான علامات (அலாமாத்) என்ற சொல் அடையாளங்கள் என்ற பொருளில் திருக்குர்ஆனிலும் (16:16) பயன்படுத்தப்பட்டுள்ளது.

16{وَعَلَامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ  [النحل: 16

கடல் பயணிகளுக்கு மலைகள் அடையாளமாக உள்ளதால் மலைகளைக் குறிக்க اعلام  என்ற சொல் 42:32, 55:24 ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

42{وَمِنْ آيَاتِهِ الْجَوَارِ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ [الشورى: 32]

55{ وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ} [الرحمن: 24]

இச்சொற்கள் அனைத்தும் இல்ம் என்ற அதே வேர்ச் சொற்களைக் கொண்டவையாகும்.

குறிப்பிட்ட துறையைக் குறிப்பதற்கும் இல்ம் என்ற சொல் பயன்படுத்தப்படும்.

இல்ம் எனும் சொல் மற்றொரு சொல்லுடன் இணைத்துச் சொல்வதாக இருந்தால் இடைச் சொல் உதவியில்லாமல் நேரடியாக சேர்த்துச் சொல்லப்படும்.

அறிவு என்ற சொல்லை குர்ஆன் பற்றிய அறிவு என்று சொல்ல வேண்டுமானால் இரு சொற்களையும் இடைச் சொல் உதவியில்லாமல் علم القران (இல்முல் குர்ஆன்) என இணைக்க வேண்டும்.

இடைச் சொல் உதவியுடன் இணைத்தால் அடையாளம் என்ற அர்த்தம் வரும்.

இல்மு عِلْمٌ என்ற சொல்லுடன் அஸ்ஸாஅத் السَّاعَةِ எனும் சொல் இணைக்கப்பட்ட நான்கு சொற்கள் குர்ஆனில் உள்ளன. அவற்றில் மூன்று சொற்கள் லி لِ என்னும் இடைச் சொல் துணையில்லாமல் இணைக்கப்பட்டுள்ளது. ஈஸா நபி குறித்த சொல் அப்படி இணைக்கப்படாமல் லி لِ என்ற இடைச் சொல்லின் துணையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இடைச்சொல் துணையில்லாமல் இணைக்கப்பட்ட சொற்களுக்கு கியாமத் நாள் பற்றிய அறிவு என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஈஸா நபி பற்றி பேசும் வசனத்தில் லி لِ எனும் இடைச் சொல்லின் துணையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அடையாளம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அறிவு என்று பொருள் கொள்வதாக இருந்தால் மற்ற மூன்று இடங்களில் பயன்படுத்தப்பட்டது போல் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும்

அந்த நான்கு வசனங்களையும் காண்க

31{إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ  السَّاعَةِ} [لقمان: 34

41{إِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ } [فصلت: 47

43{وَعِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَإِلَيْهِ تُرْجَعُونَ} [الزخرف: 85

இம்மூன்று வசனங்களிலும் இல்மு என்ற சொல் அஸ்ஸாஅத் எனும் சொல்லுடன் நேரடியாக இணைந்துள்ளதால் இம்முன்று சொற்களுக்கும் கியாமத் நாள் பற்றிய அறிவு என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம்.

ஆனால் 43:61 வசனத்தில் இல்முஸ்ஸாஅத் என கூறாமல் இல்முன் லிஸ் ஸாஅதி என்று கூறப்பட்டுள்ளது. லி என்ற இடைச் சொல்லால் இணைக்கப்பட்டுள்ளதால் கியாமத் நாளின் அடையாளம் என்பதே சரியான மொழி பெயர்ப்பாகும்.

43{وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ  [الزخرف: 61

அடுத்து ஹு என்ற சொல் அவர் என்ற பொருளிலும், அது என்ற பொருளிலும் பயன்படுத்தப்படும். நீங்கள் அது என்று பொருள் கொண்டு குர்ஆனைக் குறிக்கும் என்று கேட்டுள்ளீர்கள்.

நாம் அவர் என்று பொருள் கொண்டு ஈஸா நபி என  பொருள் கொண்டுள்ளோம்.

ஹு என்ற சொல்லுக்கு பொருள் கொள்\ளும் போது அதற்கு முன் எது பற்றி பேசப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஈஸா நபி பற்றித் தான் பேசப்பட்டுள்ளது என்பதால் இவ்விடத்தில் குர்ஆன் என்று கருத முடியாது.

மேலும் இல்ம் என்பதற்கு அடையாளம் என்பது தான் பொருள் என நிருபணமாகி விட்டதால் குர்ஆன் என்ற அர்த்தம் பொருந்தாது. குர்ஆன் கியாமத் நாளின் அடையாளமாக இல்லை. கியாமத் நாளின் நெருக்கத்தில் குர்ஆன் அருளப்படும் என்று இருந்தால் தான் குர்ஆன் கியாமத் நாளின் அடையாளம் என்று சொல்ல முடியும்.

ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று நாம் சொல்வது போல் கிறித்தவர்களும் நம்புகிறார்கள் என்ற அடிப்படையில் பின்வரும் கருத்தைக் கூறியுள்ளீர்கள்..

அந்த வசனத்தின் முடிவில் ஈஸா நபி மறுமை நாளின் அடையாளம்; எனவே என்னைப் பின்பற்றுங்கள் என்று ரசூல் சல் அவர்களை சொல்லச் சொல்வது கேலியாக முடியும் என்று கேட்டுள்ளீர்கள்.

நீங்கள் இந்த வசனத்தை மட்டும் வைத்து இப்படி வாதிடுகிறீர்கள். இது குறித்து பேசும் 57 வது வசனம் முதல் 61 வசனம் வரை சேர்த்துப் பார்த்தால் இந்தக் கேள்விக்கு இடமில்லை.

{وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْيَمَ مَثَلًا إِذَا قَوْمُكَ مِنْهُ يَصِدُّونَ (57) وَقَالُوا أَآلِهَتُنَا خَيْرٌ أَمْ هُوَ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ (58) إِنْ هُوَ إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَاهُ مَثَلًا لِبَنِي إِسْرَائِيلَ (59) وَلَوْ نَشَاءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَلَائِكَةً فِي الْأَرْضِ يَخْلُفُونَ (60) {وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ (61)} [الزخرف: 61]

57. மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்டபோது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் (ஏளனமாகக்) கூச்சலிட்டனர்.

58. “எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?” என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!

59. நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை.459 இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

60. நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கியிருப்போம்.

61. “அவர் (ஈஸா) அந்த நேரத்தின்1 அடையாளமாவார்.342 அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி” (எனக் கூறுவீராக.)

இதில் 57வது வசனம் கிறித்தவர்கள் பற்றிப் பேசவில்லை. ஈஸா நபியை ஏற்காத மக்கத்து காஃபிர்களைப் பற்றி பேசுகிறது. ஈஸா நபி தந்தையில்லாமல் பிறந்ததைக் கேட்டு அவர்கள் எள்ளி நகையாடினார்கள்.

ஈஸா நபி சம்மந்தமாக நபிகள் நாயகம் கொண்ட கருத்தில் மக்காவின் காஃபிர்கள் இருக்கவில்லை. அதற்கு மாற்றமான கருத்தில் தான் இருந்தனர். எனவே என்னைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறுவது கேலிக்குரியதாக ஆகாது.

அவர் எப்படி உயர்த்தப்பட்டு இருக்க முடியும்? இது சாத்தியமற்றதல்லவா என்ற எண்ணம் ஆழ்மனதில் இருப்பதால் அதைப் பொய்யாக்க இயன்ற வரை மனித மனம் நினைக்கிறது.

ஆனால் அவரது பிறப்பு இதை விட அற்புதமானது சாத்தியமற்றது என்பதை நம்புவோருக்கு இது பிரச்சனை இல்லை.

மிஃராஜில் நபியை அழைத்துப் போனதில் நபியின் திறமை  ஒன்றும் இல்லை. வல்லமை மிக்க அல்லாஹ்வின் வல்லமையைக் காட்டும் நிகழ்வு என்று புரிந்து கொள்கிறோம்.

அது போல் தான் ஈஸா நபி உயத்தப்பட்டதில் அவரது ஆற்றலோ வல்லமையோ வெளிப்படவில்லை. அல்லாஹ் தான் நினைத்த்தைச் செய்யும் வல்லமை உள்ளவன் என்று புரிந்து கொண்டால் இதில் எந்த மனக்குழப்பமும் ஏற்படாது.

ஈஸா நபி குறித்து கீழ்க்கண்ட ஆக்கங்களையும் பார்க்கவும்

ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா

ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டாரா

ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை ஏற்பார்கள்

ஈஸா நபி உயர்த்தப்பட்டதை உறுதி செய்யும் மறுமை விசாரணை

உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார்

இறுதிக்காலத்தில் ஈஸா வருவார்

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...