அரபு இலக்கணத்துக்கு மாற்றமாக 2:102 வசனத்துக்கு பீஜே மொழி பெயர்த்துள்ளாரா?

2:102 வசனத்தின் தமிழாக்கத்தில்

“நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!” என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர்.

என்று நாம் மொழிபெயர்த்துள்ளோம்.

இது அரபு இலக்கண விதிக்கு எதிரானது என்று சிலர் விமர்சனம் செய்து பதிவுகளைப் போட்டு வருகின்றனர்.

அவர்களது பதிவின் சாராம்சம் என்னவென்றால் சூனியம் கற்றால் காஃபிராகி விடுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டனர். இந்த எச்சரிக்கையின் காரணமாக அவர்கள் கணவன் மனைவிக்கு இடையில் பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டனர்.

இந்தக் கருத்தைத் தருவதற்காக

فَيَتَعَلَّمُونَ

என்ற சொல்லில் உள்ள

فَ ஃபா

என்ற சொல்லுக்கு எனவே என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம்.

எனவே என்று காரணத்தைக் கூறுவதாக இருந்தால்

فَيَتَعَلَّمُونَ

என்று இறுதியில் நூன் இருக்கக் கூடாது. நூனை நீக்கி விட்டு

فَيَتَعَلَّمُو

என்று தான் சொல்லப்படும்.

இவ்வசனத்தில் நூன் நீக்கப்படவில்லை என்பதால் எனவே என்று பொருள் செய்திருப்பது தவறு என்பது அவர்களின் வாதம்.

பாதி இலக்கணம் படித்ததால் இப்படி வாதிட்டுள்ளனர்.

இரு செய்திகளுக்கு இடையே ஃபா என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்.

இரண்டாவதாக சொன்ன செய்திக்கு முதலில் சொன்ன செய்தி காரணமாக இருக்கும்.  இதன் காரணமாக இதை (சபபிய்யா) காரணத்துடன் இணைந்து வரும் ஃபா என்று சொல்லப்படுகிறது.

காரணத்துடன் இணைந்து  பயன்படுத்தப்படும்

 ஃபா فَ

என்ற சொல் இரு வகைகளில் பயன்படுத்தப்படும்.

ஒரு வகையான பயன்பாட்டில் வருங்கால வினையில் உள்ள நூன் நீக்கப்படும்.

இன்னொரு வகையான பயன்பாட்டில் நூன் நீக்கப்படாது.

இதை இரு உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

وَقُلْنَا يَاآدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ (35)2

இம்மரத்தை நெருங்காதீர்கள். அநியாயக்காரர்களில் நீங்கள் ஆகி விடுவீர்கள்.

இதில் இரண்டு செய்திகள் உள்ளன.

மரத்தை நெருங்காதீர்கள் என்பது முதல் செய்தி.

அநியாயக்காரராகி விடுவீர்கள் என்பது இரண்டாவது செய்தி.

இரண்டாவது செய்தியுடன் ஃபா என்பது சேர்ந்துள்ளது.

மரத்தை நெருங்கியது தான் அநியாயக்காரர்களாக ஆவதற்குக் காரணம்.

இந்த இடத்தில் அரபு மூலத்தில்

فَتَكُونَا

என்று உள்ளது. இதன் அசல் வடிவம்

فَتَكُوْنَانِ

காரணமாக உள்ள இரண்டாம் வாக்கியத்தில் ஃபா இணைந்ததால் فَتَكُوْنَانِ

என்ற சொல்லில் நூன் நீக்கப்பட்டு

فَتَكُونَا

என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த விதியின் அடிப்படையில் தான் 2:102 வசனத்தில்

فَيَتَعَلَّمُونَ

என்ற சொல்லில் நூன் நீக்கப்படாமல் உள்ளதால் காரணம் என்ற பொருளில் எனவே என்று பொருள் செய்யக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

காரணமாக உள்ள வாக்கியத்துடன் ஃபா இணைவது இரு வகைகளில் உள்ளதை அறியாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.

காரணம் நடந்து முடிந்த பின் அதன் விளைவைச் சொல்வது ஒரு வகை.

காரணம் நிகழ்வதற்கு முன் அதன் விளைவைச் சொல்வது இரண்டாம் வகை.

இம்மரத்தை நெருங்காதீர்கள். அநியாயக்காரராகி விடுவீர்கள் என்ற வாக்கியத்தை அல்லாஹ் சொல்லும் போது ஆதம் ஹவ்வா ஆகிய இருவரும் மரத்தை நெருங்கவில்லை. இனி நெருங்கினால் அநியாயம் செய்தவர்களாவீர் என்று சொல்லப்பட்டுள்ளது.

இது காரணம் நிகழ்வதற்கு முன் ஃபா இனைவதற்கு உதாரணமாகும்.

எனக்கு நீ உதவி செய்தாய்! எனவே நான் உனக்கு உதவி செய்வேன் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். நான் உதவி செய்வதற்கு நீ உதவி செய்தது தான் காரணம் என்ற கருத்து உள்ளது.

ஆனால் முதல் வாக்கியத்தில் இருந்து இது வேறுபடுகிறது.

முதல் உதாரணத்தில் மரத்தை நெருங்கவில்லை. இனிமேல் நெருங்கினால் அநியாயம் என்ற கருத்தில் உள்ளது.

இரண்டாம் உதாரணத்தில் உதவி செய்தல் எனும் காரியம் உன்னிடமிருந்து நிகழ்ந்து விட்டது. அதன் காரணமாக நான் உதவி செய்வேன் என்று சொல்லப்பட்டுள்ளது

காரணம் நிகழ்வதற்கு முன் அதனுடன் ஃபா சேர்த்தால் அப்போது தான் அதன்னுடன் இணைந்த வருங்கால வினையில் நூனை நீக்க வேண்டும்.

காரியம் நிகழ்ந்த பின் அதனுடன் ஃபா சேர்த்தால் அப்போது நூன் போகாது.

இந்த வேறுபாடு விளங்காமல் தான் அரபு இலக்கணத்தில் பிழை என்று வாதிடுகிறார்கள்.

இம்மரத்தை நெருங்காதீர்கள்.

அநியாயம் செய்தவர்களாவீர்

என்ற இரு வாக்கியத்துக்கு இடையில் அப்படி செய்தால் என்ற  வாக்கியம் மறைந்து இருக்கும்.

இம்மரத்தை நெருங்காதீர்கள்.

அப்படிச்செய்தால்

அநியாயம் செய்தவர்களாவீர்

என்பது இதன் முழு வடிவமாகும்.

இதனால் இதை

السببية الجزائية

என்று கூறுவார்கள்.

இரண்டாம் வகையில் எந்த வாக்கியமும் மறைந்து இருக்காது. எனவே அவற்றில் நூனை நீக்கக் கூடாது.

எனவே என்று பொருள் செய்யும் எல்லா இடங்களும் இந்த வகையானவை தான்.

உதாரணத்துக்கு சில வசனங்களை எடுத்துக் காட்டுகிறோம்.

مَا يَنْظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ (49) فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةً وَلَا إِلَى أَهْلِهِمْ يَرْجِعُونَ (50)36

அவர்கள் விவாதித்துக் கொண்டு இருக்கும் போது திடீரென பெரும் சப்தம் ஏற்பட்டு அவர்கள் அழிவார்கள். எனவே அவர்கள் தமது சொத்துக்கள் குறித்து மரண சாசனம் செய்ய இயலாது என்று அல்லாஹ் இவ்வசனங்களில் கூறுகிறான்.

அவர்கள் மரண சாசனம் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் இதற்கு முன்னர் சொல்லப்பட்ட விஷயம் தான். அதாவது எதிர்பாராமல் கியாமத் நாள் வருவதால் மரண சாசனம் செய்ய இயலாது என்று இங்கே சொல்லப்படுகிறது.

இந்த இடத்தில்

فَلَا يَسْتَطِيعُونَ

என்று இறுதியில் நூன் நீக்கப்படாமல் உள்ளது.

فَلَا يَسْتَطِيعُو

சொல்லப்படவில்லை.

انْظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا (48)17

அவர்கள் உமக்கு எப்படி உதாரணம் கூறுகின்றனர் எனக் கவனிப்பீராக! எனவே அவர்கள் வழிகெட்டனர் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவர்கள் வழி கெட்டதற்குக் காரணம் இதற்கு முன்னர் சொன்னது தான். அதாவது பொருத்தமில்லாத உதாரணங்களை நபிக்குப் பயன்படுத்தியதால் இவர்கள் வழிகெட்டனர்.

இந்த இடத்தில்

فَلَا يَسْتَطِيعُونَ

என்று இறுதியில் நூன் நீக்கப்படாமல் உள்ளது.

فَلَا يَسْتَطِيعُو

என்று சொல்லப்படவில்லை.

أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا (105)16

அவர்களின் அமல்கள் அழிந்து விட்டன. எனவே அவர்களுக்கு நாம் தராசை நிறுவ மாட்டோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களின் அமல்கள் அழிந்து போனது தான் அவர்களுக்காக தராசை நிறுவாததற்குக் காரணம் என்பது எனவே என்ற சொல்லால் இங்கே உணர்த்தப்படுகிறது.

முதல் வகையான ஃபா என்ற சொல்லாக இருந்தால்

ஃபலா நுகீம

فَلَا نُقِيم

என்று வந்திருக்கும்.

ஃபலா நுகீமு என்று வந்திருக்காது.

காரணம் நிகழ்ந்த பின் காரியம் கூறப்படும் சொற்களில் ஃபா என்ற சொல் இடம் பெற்றால் அங்கே நூன் நீக்கப்படாது. இதனடிப்படையில் தான் 2:102 வசனத்தில் நூன் நீக்கப்படவில்லை

சூனியத்தைக் கற்றால் காஃபிராகி விடுவீர்கள் என்ற எச்சரிக்கை நிகழ்ந்து விட்டது. அதன் காரணமாக சூனியம் அல்லாததைக் கற்றனர் என்று சொல்லப்பட்டுள்ளதால் இது இரண்டாம் வகை ஃபா ஆகும்.

இதை விளங்காமல் விமர்சனம் செய்துள்ளனர் என்பதை இந்த விளக்கத்தின் மூலம் அறியலாம்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...