நான் யார்? நான் யார்? அப்துல் கலாம் விளக்கம்:

அப்துல் கலாம் குறித்தும், அவரது உண்மை நிலை குறித்தும் கடந்த காலங்களில் உணர்வு இதழில் எழுதப்பட்ட செய்திகளை காலத்தின் கட்டாயம் கருதி இங்கே மீள் பதிவு செய்கின்றோம்.

தான் பயின்ற திருச்சி புனித ஜோசப் கல்லூரிக்கு வருகை புரிந்தார் ஜனாதிபதி வேட்பாளர் அப்துல் கலாம். கல்லூரியைச் சுற்றிப் பார்த்து தனது மாணவப் பருவத்தை நினைவு கூர்ந்தார் கலாம்.

1950-54  ஆண்டுகளில் அப்துல் கலாமுடன் பயின்ற ஒரு முஸ்லிம் நண்பர், அப்துல் கலாமைச் சந்தித்து அந்தக் காலத்தில் புனித ஜோசப் கல்லூரியில் படித்த இரண்டே முஸ்லிம்கள் நாம்தான் என்பதை நினைவுபடுத்தினார். உடனே இடைமறித்த அப்துல் கலாம், தயவு செய்து என்னை முஸ்லிம் என்று கூறாதீர்கள், இந்தியன் என்று கூறுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி வேட்பாளராக கலாம் அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். பேட்டியின் முடிவில் தமிழகத்துச் செய்தியாளர்கள், நீங்கள் தமிழ்நாட்டுக்காரர். தமிழக மக்களுக்கு உங்கள் செய்தியை தமிழில் கூறுங்கள் எனக் கேட்டனர். அப்போது உடனிருந்த பிரமோத் மகாஜன், ஒரு பிராந்திய மொழியில் பேட்டித் தரக்கூடாது என்று அப்துல் கலாமைத் தடுத்தார். பிரமோத் மகாஜனின் உத்தரவுக்குப் பணிந்த அப்துல் கலாம் தமிழில் பேசுவதை தவிர்த்துக் கொண்டார்.

அப்துல் கலாமை முஸ்லிமாகவும், தமிழராகவும் தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை சிந்திக்க வேண்டும்.

ஜூலை 05 – 11,2002 தேதியிட்ட உணர்வில் எழுதியமேற்கண்ட செய்தியை வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறோம்.

அப்துல் கலாமின் அவமானப் பயணம்:

பதவியேற்றதும் முதல் சுற்றுப்பயணமாக குஜராத்துக்குப் போவதாக அப்துல் கலாம் முடிவெடுத்தவுடன் திடீரென ஆசாமி திருந்தி விட்டாரோ என பலரும் நினைத்தார்கள். ஆனால் அப்துல் கலாமின் குஜராத் பயணம் மணப்புண்ணுக்கு மருந்து போடுவதற்குப் பதிலாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்தது.

ஷா ஆலம் முகாம் உள்ளிட்ட பல அகதி முகாம்களில் இந்திய முஸ்லிம்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட சோகம் நிலை கொண்டுள்ளது. அரசாங்கமே நடத்திய அராஜகத்தால் வாழ்விழந்த முஸ்லிம்கள் ஆறாத் துயரோடு அங்கே தங்கியுள்ளனர். அகதிகளான பின்னரும் பாஜக அரசு அவர்களை இயன்றவரை இம்சித்து வருகிறது.

குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருக்கும் அப்துல் கலாம் அம்மக்களைச் சந்தித்திருந்தால் அவர்களுக்கு அது ஓர் ஆதரவாக இருந்திருக்கும். ஆனால் முஸ்லிம்கள் அதிக அளவில் தங்கியுள்ள அகதி முகாம்களை அப்துல் கலாம் முற்றிலும் தவிர்த்துள்ளார். அம்மக்களுக்கு இந்நிலை ஏற்படக் காரணமாக இருந்த பயங்கரவாதி நரேந்திர மோடியைத் தன்னோடே அழைத்துச் சென்றார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளை நேரில் சென்று பார்த்தார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிமல்லாத மக்களுக்கு குஜராத் அரசு உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்து மாடி வீடுகளைக் கட்டிக் கொடுத்ததையறிந்து அப்துல் கலாம் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்.

தனது வழக்கமான சிறுபிள்ளைத் தனங்களை அரங்கேற்றிட குழந்தைகளை அழைத்து கேள்விகள் கேட்டார். அதிலும் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளை அவர் சந்தித்து தனது மதச்சார்பின்மையை(?) சிதைக்கவில்லை.

நரேந்திர மோடியின் கண்ணசைவுக்கு ஏற்ப, தனது பார்வையிடல் பயணத்தை அமைத்துக் கொண்டார் அப்துல் கலாம். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து அவர் மறந்தும் விசாரிக்கவில்லை. மருந்துக்குக் கூட ஆறுதல் வார்த்தைகளைக் கூறவில்லை. பூகம்ப சேத இடங்களைப் பார்வையிட்டு தனது காருண்ய குணத்தை வெளிக்காட்டினார் கலாம்.

நேரு காலத்தில் கும்பமேளாவில் மக்கள் நசுங்கி உயிர்விட்ட இடம், கும்பகோணத்தில் மகாமக நெரிசல் சாவுகள், இன்னும் இருபது முப்பது வருடங்களுக்கு முன் நடந்த எத்தனையோ இழப்புகள் உள்ளன. அவற்றையும் அப்துல் கலாம் பார்வையிட்டு தனது கருணையைக் காட்டட்டும். குஜராத்தில் இப்போது நடந்துள்ள கொடுமைகளை இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பின்னால் ஜனாதிபதியாக பதவி ஏற்பவர் பார்த்துக் கொள்வார்.

இந்தக் கூத்துக்களைக் கண்ட ஒட்டுமொத்த உலகமும் உமிழ்கிறது.

ஆகஸ்ட் 23 – 29, 2002 தேதியிட்ட உணர்வில் நாம் எழுதியது. அப்துல் கலாமின் மரணத்தினால் இதை மறக்க மாட்டோம்.

கலாமின் குஜாராத் பயணம் ஒரு கண்துடைப்பு :

அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக நியமித்துவிட்டால் குஜராத்தில் தாங்கள் நடத்திய மனிதப் படுகொலைகளை உலக நாடுகளின் சிந்தனையிலிருந்து திசை திருப்பிவிடலாம் எனக் கனவு கண்ட பி.ஜே.பி உள்ளிட்ட சங்பரிவார சக்திகள், மீண்டும் ஒரு சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்துல் கலாமை குஜராத்திற்குச் செல்ல வைத்து தங்கள் கபட நாடகத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளனர்.

குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய முகாமான ஷா ஆலம் முகாம், மற்றும் ஜுஹாபுராவில் உள்ள சங்கவித் நகர் முகாம் ஆகியவை அப்துல் கலாமின் பயணத் திட்டத்தில் இடம்பெறவில்லை என டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு தெரிவித்துள்ளது.

இதற்கு மாறாக வெறும் 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட கலூபூரில் உள்ள ஹஜ் இல்லம் மற்றும் ஜூஹாபுராவில் உள்ள விதவைகள் இல்லம் ஆகியவை அப்துல்கலாம் பார்வையிடும் இடங்களில் உள்ளவையாகும்.

86  பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட நரோடா பாடியாவிற்குச் செல்லும் கலாம் முன்னாள் எம்.பி. எஹ்ஸான் ஜாப்ரீ உள்ளிட்ட 39 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சமன்புராவிற்குச் செல்லவில்லை.

பிரதமர் வாஜ்பேய் மற்றும் தலைமைத் தேர்தல் கமிஷனர் லிங்டோ உள்ளிட்டவர்கள் சென்ற மிகப்பெரும் நிவாரண முகாமான ஷா ஆலம் முகாமிற்கு கலாம் செல்லாதது பெரும் விந்தையாக உள்ளது.

செய்தி ஊடகங்களுக்குக் கூட தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஹஜ் இல்லம் மற்றும் விதவைகள் இல்லம் ஆகியவற்றிற்கு கலாம் செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் உடன்வர மாநில அரசு தடைவிதித்துள்ளது.

தலைமைத் தேர்தல் கமிஷனர் லிங்டோ வந்தபோது செய்தி ஊடகங்களில் மாநில அரசுக்கெதிராக மிகப்பெரும் விமர்சனங்கள் எழுந்ததைக் கண்டு எரிச்சலடைந்துள்ள அதிகாரிகள், அப்துல் கலாமின் வருகையின் போது செய்தியாளர்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பதில் கவனமாக உள்ளனர்.

மொத்தத்தில் அப்துல் கலாமின் குஜராத் பயணம் பாதிக்கப்பட்ட குஜராத் முஸ்லிம்களின் காயங்களைப் போக்குவதாக இல்லை. மாறாக முக்கிய நிவாரண முகாம்களைப் பார்வையிடச் செல்லாத அவரது போக்கு அவர் சங்பரிவாரின் கைப்பாவை தான் என்பதைச் சந்தேகமின்றி நிரூபித்துள்ளது.

ஆகஸ்ட் 16 – 22, 2002 தேதியில் நாம் எழுதியதை வரலாற்றுப் பதிவாக இங்கே வெளியிடுகிறோம்.

பா.ஜ.க. கொள்கையைப் பிரதிபலிக்கும் கலாம்:

பா.ஜ.க. கொள்கைகளுக்கு ஒத்து ஊதும் ஒருவரைத் தான் ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ.க தேர்ந்தெடுத்துள்ளது என்பதை அப்துல் கலாம் நிரூபித்து விட்டார். தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று அத்வானியும், அவருடைய ஆர்.எஸ்.எஸ். பரிவாரமும் பல தடவை கூறி வந்துள்ளது. அந்தக் கீறல் விழுந்த பழைய ரெக்கார்டின் பல்லவியை இப்போது கலாமும் பாடியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டால் இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள முஸ்லிம்களை இந்தியர்கள் பட்டியலில் இருந்து எளிதாக எடுத்து விடலாம். அவ்வாறு எடுத்து விட்ட பிறகு மீண்டும் இந்தியர்கள் பட்டியலில் இணைவதற்கு ஏராளமான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டிவரும். அரசாங்கம் கேட்கும் அவ்வளவு ஆவணங்களும் எல்லோரிடமும் இருக்காது.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அடிக்கடி வீடும் மாற வேண்டி வரும். அதனால் பழைய விலாசம் இடம் பெற்றுள்ள ரேஷன் கார்டு செல்லுபடியாகாது என்றும் கூட அதிகாரிகள் நிராகரிக்கலாம். ரேஷன் கார்டு பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் ஆகிய அனைத்திலும் எழுத்துப் பிழையில்லாமல் யாருடைய பெயரும் சரியாக இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அரசு ஆவணங்களில் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் கவனக் குறைவாக சேர்க்கப்பட்டுள்ளதும் சாதாரண விஷயமாகும்.

எனவே இதிலுள்ள சிறு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் வீம்புக்காக அலைய விடலாம். இப்படி சட்டரீதியாக முஸ்லிம்களை அலைக்கழிப்பதற்கு அத்வானி கூறும் தேசிய அடையாள அட்டை சரியான காரணமாக அமையும்.

குஜராத், காஷ்மீர், ராஜஸ்தான், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் வாழும் ஏராளமான முஸ்லிம்களை வந்தேறிகள் என்று பா.ஜ.க. பிரச்சாரம் செய்கிறது.

தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டால் இம்மாநிலங்களில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்களை இந்தியர்கள் பட்டியலில் இருந்து மத்திய பாஜக அரசு எளிதாக அகற்றிவிடும். மற்ற சமுதாய மக்களை விட முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியே இருக்கின்றனர். ஆகவே தேசிய அடையாள அட்டை பற்றிய குறைகளைச் சொல்வதற்கு யாரை அணுக வேண்டும்? எத்தகைய ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்? உரிமைகள் பறிக்கப்படும் போது எப்படி சட்ட ரீதியாகப் போராட வேண்டும் என்ற வழிமுறைகள் தெரிய வாய்ப்பில்லை.

முஸ்லிம்களில் உள்ள பெரும்பான்மையினரின் நிலை இந்த வகையில் தான் உள்ளது. எனவே தேசிய அடையாள அட்டை என்ற யோசனை முஸ்லிம்களை நசுக்கவும் மனரீதியாக அவர்களைத் துன்புறுத்தவும் அரசுத் திட்டங்கள் முஸ்லிம்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வதற்காகவும் தான் பா.ஜ.க. மற்றும் சங்பரிவார அமைப்பால் முன்மொழியப்படுகிறது. இதைத் தவிர இந்த அடையாள அட்டையால் வேறு எந்த வெங்காயமும் விளையப் போவதில்லை.

இந்த யோசனையை பா.ஜ.க. வைத் தவிர இந்தியாவில் உள்ள எந்தக் கட்சிகளும் தெரிவிக்கவில்லை. ஏற்கவில்லை.

ஆனால் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கப் போகும் அப்துல் கலாம். இப்படிப்பட்ட தேசிய அடையாள அட்டை தேவை என்று டெல்லியில் ஜூன் 25ஆம் தேதியன்று நடந்த தொழில்நுட்ப பாதுகாப்புக் கருத்தரங்கில் பேசியுள்ளார். தேசிய அடையாள அட்டை ஒருமைப்பாடு அணுகுமுறைக்கு மிகவும் அவசியம் எனவும், அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

நாட்டு மக்களையும், சொந்த மண்ணையும் நேசிப்பவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் அப்துல் கலாம் சொல்வது போன்று நடக்கலாம். ஆனால் சொந்த நாட்டு மக்களை அகதி முகாம்களில் தங்க வைத்துள்ளவர்கள் ஆட்சியில் இது போல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஒரு சதவீத அளவுக்குக் கூட இருக்க முடியாது என்பதுதான் உண்மை. பாஜக ஆட்சியில் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டால் அதனால் இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் சிதையுமே ஒழிய உறுதிப்படாது.

இதை அப்துல் கலாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் அனுபவம் உள்ளவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறும் கம்யூனிஸ்டுகளின் கருத்துக்கு அப்துல் கலம் வலு சேர்த்து விடுவார் போல் தெரிகிறது.

ஜூலை 05 – 11,2002 தேதியிட்ட உணர்வில் எழுதியமேற்கண்ட செய்தியை வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறோம்.

கலாம் என்ற முஸ்லிம்?:

இந்தியாவுடைய அடுத்த ஜனாதிபதி ஆகப்போகின்ற அப்துல் கலாம் எல்லா வகையிலும் உலக அளவில் இந்தியாவிற்குப் புகழ் வாங்கிக் கொடுத்த விஞ்ஞானி என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அவரை ஏவுகணை மனிதன் என்பதில் எல்லா இந்தியர்களும் பெருமை அடைகிறோம்.

அப்துல் கலாம் அவர்கள் முஸ்லிமாகப் பிறந்ததினாலோ, முஸ்லிமாக வளர்ந்ததினாலோ முன்னாள் முஸ்லிம் ஜனாதிபதிகளான டாக்டர் ஜாகிர் உசேன், பக்ருத்தீன் அலி அஹமது இவர்களுக்கு சமமாக மாட்டார்.

கலாமைப் போலவே அவர்கள் இருவரும் மிகுந்த தேசப்பற்று உள்ளவர்களாகவும், இந்தியாவுடைய பெருமைகளைக் கட்டிக் காப்பவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் சொல்லிலும், செயலிலும் பெயரிலும் முஸ்லிம்களாக இருந்தார்கள்.

நாட்டுடைய வளர்ச்சியில் எப்படி அக்கறை கொண்டு இருந்தார்களோ அது போலவே தமது சமுதாயத்தின் மீதும் அக்கறை கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் மகாத்மா காந்திக்கு பிரியப்பட்ட உத்தமர்களாகவும் இந்தியாவுடைய சுதந்திர தியாகிகளாகவும் இருந்தார்கள்.

முஹம்மதலி ஜின்னாவின் பிரிவினை வாதத்தை எதிர்த்து அவர்கள் அபுல் கலாம் ஆசாத்தோடு கைகோர்த்து நின்றார்கள். இந்தியாவுடைய பண்பாட்டிலும், ஒருமைப்பாடிலும் ஒத்துப்போகக் கூடியவர்களாகவே இருந்தார்கள்.

டாக்டர் ஜாகிர் உசேன் ஜாமியா மில்லியா இஸ்லாமிய ஸ்தாபனத்திலும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் உப தலைவராக இருந்தார். பக்ருத்தீன் அலி அஹமது அஸ்ஸாமிலும் மற்றும் சில மாநிலங்களிலும் உள்ள முஸ்லிம் அறக்கட்டளைகளிலும் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அப்துல் கலாமோ முஸ்லிம்களை விட்டும் எப்போதும் விலகி நிற்கவே முயற்சித்தர் என்பதை வேதனையோடு குறிப்பிடுகிறேன். மேலும் அவர்களோடு பழகுவதையும் தவிர்த்தார். முஸ்லிம் சமுதாய விழாக்களில் கலந்து கொள்வதையும் தவிர்த்தார்.

மும்பையில் ஆல் இந்தியா கிலாபத் கமிட்டி வருடந்தோறும் நடத்தும் பத்து லட்சம் பேர் கலந்து கொள்ளக்கூடிய மீலாது நபி தின பொதுக்கூட்டத்திற்கு இந்தக் கமிட்டியுடைய சேர்மன் என்ற முறையில் நான் அவர்களை நேரில் சென்று அழைத்தும் வர இயலாது எனத் தட்டிக் கழித்து விட்டார்.

1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிலாபத் கமிட்டி நடத்தும் விழாக்களில் இந்தியாவுடைய பிரதமர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை.

இதைப் போலவே மேலும் ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் அஞ்சுமனே இஸ்லாம் சங்கம் நடத்திய நபி தின நினைவு நாளன்று நடக்கும் விழாவிற்கு அஞ்சுமன் நிர்வாகி இஸ்ஹாக் ஜும்கான்வாலா அழைத்தும் அவர் செல்லவில்லை. அதையும் தட்டிக் கழித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களின் எந்த நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் எந்த ஒரு முன்னேற்றத்திலும் இவருக்கு அக்கறை இல்லை என்பது கீழே குறிப்பிடுவதை வைத்து நீங்களே சொல்லலாம்.

மத்திய அரசாங்கத்தின் உதவியோடும், ஒத்துழைப்போடும் ஆரம்பிக்கப்பட்ட மௌலானா ஆசாத் எஜுக்கேஷன் பவுண்டேஷன் அறக்கட்டளையில் ஒரு நபராக இருந்தார். ஆனால் இதுவரை இவரை வைத்து முஸ்லிம்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை.

இந்து நண்பர்க்ளோடு பழகுவதையே அவர் விருப்பமாகக் கொண்டிருந்தார். வாழ்க்கையின் அதிக காலத்தை அவர்களோடு தான் அவர் செலவழித்தார் என்று சொல்வது எனக்குத் தவறாகத் தோன்றவில்லை.

ஒரு முஸ்லிமை நாங்கள் ஜனாதிபதியாக ஆக்கி இருக்கிறோம் என்று மார் தட்டிக் கொள்ளாதீர்கள்.

DRDL இதனுடைய முன்னாள் டைரக்டர் கே. ராமாராவ் எழுதுகிறார்.

32 வருடமாக நான் கலாமோடு பழகுகிறேன். 32 வருடகாலமாக எனக்கு அவரைத் தெரியும். 1954ல் இருந்து நாங்கள் ஒன்றாகவே ஒரே அறையில் தங்கியிருந்தோம்.

1980ல் விஞ்ஞானியாகி அதற்குத் தலைவராகி வரும் வரை என் கூடவே இருந்தார். அவர் இரவு வெகு நேரம் கழித்துத்தான் உறங்குவார். காய்கறிகள் மட்டுமே சாப்பிடும் பழக்கமுள்ளவர். முஸ்லிம் என்பதற்கு எந்தவொரு அடையாளமும் காணப்படாதவர். தினம் ஐந்து நேரத் தொழுகையோ ரமலான் மாதங்களில் நோன்பு நோற்கவோ நான் பார்த்ததில்லை.

பெங்களூர் மிஷிஸிளி சாட்டிலைட் சென்டரின் முன்னாள் டைரக்டர் ஆர். அறவுமதன் கூறுகிறார்

திருவனந்தபுரத்தில் இந்திரா பவன் லாட்ஜில் நாங்கள் தங்கியிருந்த காலத்தில் கலாமை, கலாம் ஐயர் என்று சொன்னால் தான் தெரியும். பிராமணர்களோடு இருப்பதையும், அவர்களின் உணவை சாப்பிடுவதையும் பெருமையாகக் கருதுபவர். அவர் அசைவம் சாப்பிட்டுள்ளார் என்றால் புரோட்டாவோடு முட்டை மசாலா மட்டுமே சாப்பிட்டுள்ளார். அவர் மாதா பிதாக்களை நினைத்தோ சொந்த பந்தங்களை நினைத்தோ பேசியதை நான் கேடதில்லை. ஆனால் தினந்தோறும் காலை பகவத் கீதை வாசிப்பதையும், மனப்பாடம் செய்வதையும் பழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் கிருஷணனின் பக்தராக இருந்தார். சைவம் சாப்பிடுபவராகவும், சுத்த பிரம்மச்சாரியாகவும் இருந்தார்.

அவர் தன்னை ஒரு முஸ்லிம் ஜனாதிபதி என்றோ, முன்னாள் ஜனாதிபதிகள் டாக்டர் ஜாகிர் உசேன், பக்ருதீன் அலி அஹமது இவர்கள் போல் நானும் ஒரு முஸ்லிம் என்றோ சொல்லிக் கொள்ள விருப்பப்படாதவர்.

அவர் மோசமானவர் என்றோ இதற்கு முன்பிருந்த இரண்டு ஜனாதிபதிகளை விட தாழ்ந்தவர் என்றோ இதற்கு அர்த்தமில்லை. அவரை முஸ்லிம் என்று மதத்தின் பெயர் சொல்லி அழைப்பதையே நான் எதிர்க்கிறேன்.

நன்றி : மாத்யமம் 21.06.2002 ஜூலை 12 – 18,2002 தேதியிட்ட உணர்வில் இடம்பெற்ற வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறோம்.

மீலாது விழாக்களில் நமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அது முஸ்லிம்களின் விழாவாகக் கருதப்படுகிறது. அரசு விடுமுறை விடப்படுகிறது. அப்படி இருந்தும் அவர் அந்த விழாவில் கூட கலந்து கொள்ள மறுத்துள்ளார்.