பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள்

தடுக்க வழி என்ன?

சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் ஏராளமானோர் பலியாகி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது போன்று எதிர் காலத்தில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முஹம்மது அப்துல்காதர், விருதுநகர்

அரசாங்கத்தை நடத்தக்கூடியவர்களுக்கு கொஞ்சம் மூளை இருந்து, அந்த மூளையைப் பயன்படுத்தி சட்டங்களை இயற்றி இருந்தால், இதுபோன்ற பேரழிவுகளைத் தடுத்திருக்க முடியும்.

வெடி மருந்துகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். மிக அவசியமான தேவைகளுக்காகவே தவிர, வேறு எதற்காகவும் வெடி மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது என்றுதான் அறிவுடைய மக்கள் முடிவுக்கு வருவார்கள்.

பாறைகளை உடைப்பதன் மூலம்தான் சாலை வசதிகளைப் பெற முடியும் என்பதால், இதற்காக வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது.

உணவைச் சமைத்துச் சாப்பிட நெருப்பு அவசியம். அதை உருவாக்கிட தீப்பெட்டி அவசியம் என்பதால் இதற்காக வெடிமருந்துகள் பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது.

படிப்படியாகக் குறைந்து வரும் தீப்பெட்டிப் பயன்பாடு காலப்போக்கில் அறவே இல்லாமல் போய்விடும். அதுபோல் ஜல்லிகள் மூலம் சாலைகள் போடுவதற்குப் பதிலாக பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் தொழில் நுட்பம் அதிகரிக்கும்போது பாறைகளை உடைக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும். அப்போது மக்களுக்கு வெடி மருந்துகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விடும்.

அதுவரை மேற்கண்ட இரண்டு காரியங்களுக்கு மட்டுமே வெடிமருந்துகள் குறைந்த அளவுக்கு தேவைப்படும். இவற்றைத் தவிர மற்ற அனைத்துப் பயன்பாடுகளில் இருந்தும் வெடி மருந்துகளைத் தள்ளிவைப்பதுதான் அறிவுப்பூர்வமானது.

ஆனால் மக்கள் சர்வசாதாரணமாக வெடி மருந்துகளுடன் விளையாடும் நிலைக்கு பட்டாசு உபயோகமே காரணமாகும். தீபாவளி போன்ற பண்டிகைகளுடன் தொடர்புபடுத்தி இதற்கு பட்டாசு வியாபாரிகள் மதச் சாயம் பூசிவிட்டதே இந்த பேராபத்துக்குக் காரணம்.

உண்மையில் இதற்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பட்டாசுகள் பிற்காலத்தில் வந்த கண்டுபிடிப்பாகும்.

முந்தைய காலத்தில் தீபாவளி கொண்டாடிய இந்துக்கள் பட்டாசுகளை அறிந்திருக்கவில்லை. எனவே மதத்துக்கு வெளியே நின்று சிந்திப்பதுதான் சரியானதாகும். இப்படி சிந்தித்தால் பட்டாசுகள் வெடிப்பதால் கீழ்க்கண்ட தீமைகள் ஏற்படுவதை உணரலாம்.

பொருளாதாரத்தைத் பயனற்ற வழியில் விரயமாக்குவது

பட்டாசு வெடித்து உயிர்கள் பலியாவது

பட்டாசுகள் மூலம் குடிசைகள் எரிந்து சாம்பலாவது

பட்டாசு வெடிப்பவர்களுக்கும் அருகிலிருப்பவர்களுக்கும் படுகாயங்களை ஏற்படுத்துவது

மனிதனின் காதுகள் தாங்கிக் கொள்ள முடியாத அதிக சப்தம் காரணமாக கேட்கும் திறனில் ஏற்படும் பாதிப்புகள்

இதய நோயாளிகளும், பச்சிளம் குழந்தைகளும், சிந்திப்பவர்களும், படிப்பவர்களும் இந்த சப்தம் காரணமாக கடுமையான பாதிப்புகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாகுவது

பட்டாசுகள் மூலமாக வெளியேறும் நச்சுப்புகை மூலம் காற்று மாசு படுகிறது

அதை சுவாசிப்பதன் மூலம் மனிதர்களும், இன்னபிற உயிரினங்களும் கடும் பாதிப்புக்குகளைச் சந்திக்கின்றன.நோயாளிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பட்டாசு வெடிப்பதன் மூலம் குப்பைகளின் அளவும் அதிகரித்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.

நச்சுப் பொருள் கலந்த குப்பைகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது.

இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் இதனால் எந்த நன்மையாவது உள்ளதா என்றால் அதுவும் இல்லை.

நவீன சாதனங்கள் பயன்படுத்துவதன் காரணமாக காற்று மாசு படுவதாகவும், பூமி வெப்பமயமாகி வருவதாகவும், ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு புற ஊதாக்கதிர்கள் பூமிக்கு வந்து மனிதர்களுக்கு கேடுகள் ஏற்படுத்துவதாகவும் கூறி அந்த நவீன சாதனங்களின் பயன்பாட்டைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேற்கண்ட சாதனங்களால் சில கேடுகள் ஏற்பட்டாலும் அது பட்டாசினால் ஏற்படும் கேடுகளை விட பலப்பல மடங்கு குறைவானதுதான். அத்துடன் இந்த சாதனங்கள் மூலம் விரைவாகவும் பணிகள் முடிகின்றன. சொகுசான இன்பங்களை அனுபவிக்கிறோம். இதற்காக மேற்கண்ட தீமைகளை நாம் சகித்துக் கொள்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால் இதைவிட பெரும்கேடு ஏற்படுத்தும் பட்டாசுகளால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

அறிவுள்ள மக்களுக்குத் தெரியும் இந்த விபரம் ஆட்சியாளர்களுக்கு ஏன் தெரியவில்லை.

அவசியமற்ற கேடுகள் விளைவிக்கின்ற பட்டாசுகளுக்கு அறவே அனுமதி இல்லை என்று முடிவு செய்தால், இதுபோன்ற அழிவுகளுக்கு இடமில்லை.

பட்டாசைக் காரணம்காட்டி வெடி மருந்துகள் பரவலாகக் கிடைப்பதால்தான், வெடிகுண்டு தயாரிக்கும் பயங்கரவாதிகளுக்கும் வசதியாகப் போய்விடுகிறது.

இதைப்பற்றி சிந்திக்காமல் நீதி விசாரணை நடத்துவதும் நஷ்ட ஈடு கொடுப்பதும்தான் அரசின் நடவடிக்கையாக இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற பேரழிவுகள் தொடர்கதையாகிப் போய்விடும்.

11.09.2012. 2:07 AM

ஜனாஸா தொழுகைச் சட்டங்கள்

ஜனாஸா தொழுகை சட்டங்கள் இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் ...

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா? துல்ஹஜ் மாதம் 1 முதல் 9 வரை சிலர் நோன்பு வைக்கிறார்கள், அப்படி வைக்கலாமா? அல்லது 9 அரபாத் நாள் மட்டும் வைக்க ...

கலீஃபாக்கள் யார்? அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?

நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா? நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். 2600حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா? பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள். صحيح البخاري 5504 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ...

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா? இக்பால், முத்துப்பேட்டை பதில் மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் ...

விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் ஷாத் எனும் வகையில் அடங்குமா

ஸாயிதா பற்றிய விமர்சனம் ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் இவரைத் தொடர்பு படுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சிலர் செய்து ...

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? கட்டுரை

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் ...

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...