பூசனிக்காய் சாப்பிடலாமா?
ஷேக் தாவூது
பதில்
உயிரினங்களில் தான் சில வகையான உயிரினங்கள் ஹராமாக ஆக்கப்பட்டுள்ளன. தாவர இனத்தில் எந்த ஒன்றும் மார்க்கத்தில் ஹராமாக்கப்படவில்லை.
அனைத்து பொருட்களும் பொதுவான ஒரு நிபந்தனை அடிப்படையில் தான் மனிதர்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. நமது உயிருக்கோ, உடல் நலத்துக்கோ கேடு செய்யாமல் இருக்க வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை.
4:29 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ وَلَا تَقْتُلُوْۤا اَنْـفُسَكُمْؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! உங்களுக்கிடையே திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:29
பூசணிக்காயோ இன்ன பிற காய் கனிகளோ மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிய வந்தால் அதைச் சாப்பிடக் கூடாது. அவ்வாறு இல்லாவிட்டால் எந்தக் காய்களையும் கனிகளையும் கீரை வகைகளையும் சாப்பிடலாம். மார்க்கத்தில் தடை இல்லை.