நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என இப்னு தைமியா சொன்னார்களா

இப்னு தைமியா நபித்தோழர்களின் வழிமுறையை பின்பற்றாமல் இருப்போர் பித்அத்வாதிகள் வழிகேடர்கள் என்று இப்னு தைமியா கூறியுள்ளார்களா?

பதில் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் அதற்கு இப்னு தைமியாவை ஆதாரம் காட்டியுள்ளனர்.

இப்போது இப்னு தைமியாவும் மார்க்க ஆதாரங்களில் ஒன்றாக ஆகிவிட்டார்.

இப்னு தைமியா பல விஷயங்களில் சரியாகச் சிந்தித்த நல்லறிஞராக இருந்தார்.

ஆனால் அவர்களிடமும் ஏராமான கொள்கைக் குழப்பமும் பித் அத் ஆதரவும் கட்டுக்கதைகளை உண்மையாக்கும் போக்கும் பெரிய அளவில் காணப்பட்டது.

அதை எல்லாம் சலபுக் கூட்டம் ஏற்கத் தயாரா?

அவ்லியாக்கள் இறந்தவர்களை உயிர்ப்பிப்பார்கள்.

வயிற்றில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என அறிவார்கள்.

நபித்தோழர்கள் அல்லாஹ்வைப் பார்த்துள்ளனர்.

அவ்லியாக்கள் குன் என்று சொன்னால் உடனே ஆகி விடும்.

அவ்லியாக்கள் பல மாதங்கள் சாப்பிடாமல் இருப்பார்கள்.

இப்படி இப்னு தைமியா அவர்கள் தப்லீக் தஃலீம் தொகுப்புக்கு போட்டியாக பல கட்டுக்கதைகளை உண்மை என்று எழுதி உள்ளார்கள். இறை நேசர்களும் ஷைத்தானின் தோழர்களும் என்ற நூலில் இது போன்ற ஏராளமான கட்டுக்கதைகளைக் காணலாம்.

சஹாபாக்களைப் பின்பற்றுவதற்கு இப்னு தைமியா அவர்களைத் தூக்கிப் பிடிக்கும் சலபுக்கும்பலுக்கு இப்னு தைமியா ஆதாரித்த மவ்லிது மீலாது விழாக்களை எடுத்துக் காட்டுகிறோம்.

اقتضاء الصراط المستقيم لمخالفة أصحاب الجحيم

فتعظيم المولد، واتخاذه موسمًا، قد يفعله بعض الناس، ويكون له فيه  أجر عظيم لحسن قصده، وتعظيمه لرسول الله صلى الله عليه وسلم، كما قدمته لك أنه يحسن من بعض الناس، ما يستقبح من المؤمن المسدد

மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதையும், அதை விழாவாக ஆக்குவதையும் சில மனிதர்கள் செய்கிறார்கள். அவர்களின் நல்ல எண்ணத்துக்காகவும் நபியைக் கண்ணியப்படுத்தியதற்காகவும் மகத்தான கூலி உண்டு. சரியான வழி நடக்கும் மூமின்கள் அருவருப்பாக கருதுவதை மக்கள் அழகிய செயலாகக் கருதுவதுண்டு என்பதை நான் முன்னரே குறிப்பிட்டுள்ளேன்.

இப்னு தைமியாவின் இக்திலாவுஸ் ஸிராதில் முஸ்தகீம் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சலபுகள் இனிமேல் மவ்லிது ஓதி மீலாது கொண்டாடி மகத்தான கூலியை(?) அடையும் பத்வாவை வழங்கி இப்னுதைமியாவை மதிப்பார்களா?