வட்டிக்கு வாங்கி கட்டிய வீட்டில் வசிக்கலாமா?
கேள்வி :எனது தந்தை வட்டிக்கு கடன் வாங்கி கட்டிய வீடு எனக்கு ஹலாலாகுமா? வீடு எங்கள் பரம்பரைச் சொத்தாக உள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
ஷா
பதில் :
முதலில் ஒரு வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வட்டி வாங்குவது வேறு; வட்டி கொடுப்பது வேறு.
நாம் ஒருவருக்கு கடன் கொடுத்து அதற்காக வட்டி வாங்கினால் அந்தப் பணம் ஹராமாகும். அது வட்டியின் மூலம் சம்பாதித்ததாகும்.
நமது தேவைக்காக கடன் வாங்கி அதற்காக வட்டி செலுத்தினால் அந்தப் பனம் வட்டியால் சம்பாதித்த பணம் அல்ல. நாம் வட்டி செலுத்தியுள்ளோமே தவிர வட்டி வாங்கவில்லை.
எனவே வட்டிக்குக் கடன் வாங்கியதால் அந்தப் பணம் ஹராமாகாது. மாறாக வட்டி கொடுத்த குற்றத்தையே அவர் செய்திருக்கிறார்.
அந்த வீட்டில் உங்கள் தந்தை வசித்தது கூட ஹராமான சம்பாத்தியத்தில் அல்ல. ஒரு ஹராமான செயலுக்குத் துணை செய்த குற்றமே அவரைச் சேரும்.
எனவே வாரிசு முறையில் உங்களுக்கு அந்த வீடு உரிமையாகும் போது தாராளமாக நீங்கள் வசிக்கலாம்.
ஒருவர் வட்டி மூலம் சம்பாதித்து அந்தப் பணத்தில் வீடு கட்டி இருந்தால் அவர் ஹராமான வீட்டில் வசிக்கிறார் என்று ஆகும். ஆனால் அவர் வட்டிப் பணத்தில் கட்டிய வீடு அவரது மகனுக்கு வாரிசு முறையில் கிடைக்கும் போது மகனுக்கு அது ஹராமாகாது.
இது குறித்து கூடுதலான விளக்கம் அறிய
இந்த லின்கை
பார்க்கவும்.
15.04.2010. 23:42 PM