வித்ரு குனூத் ருகூவுக்கு முன்பா பின்பா?

வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது நபிவழியாகும்.

سنن النسائي

1745 – أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي الْحَوْرَاءِ، قَالَ: قَالَ الْحَسَنُ: عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي الْوِتْرِ فِي الْقُنُوتِ: «اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ»

வித்ரு தொழுகையில் ஓதுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில சொற்களை எனக்குக் கற்றுத் தந்தார்கள். அந்தச் சொற்களாவன: அல்லாஹும்மஹ்தினீ  ஃபீமன் ஹதைத, வ ஆஃபினீ ஃபீ மன் ஆஃபைத்த, வ தவல்லனீ ஃபீ மன் தவல்லைத்த, வபாரிக் லீ ஃபீமா அஃதைத்த, வ கினீ ஷர்ர மா களைத்த, இன்னக் தக்ளீ, வலா யுக்ளா அலைக்க, வ இன்னஹு லா யதில்லு மன் வாலைத்த, தபாரக்த ரப்பனா வ தஆலைத்த என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரன் ஹஸன் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்கள் : நஸாயீ, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா, தாரிமி

ருகூவு செய்து விட்டு எழுந்த பின் இந்த குனூத்தை ஓதிவிட்டு ஸஜ்தாவுக்குச் செல்லலாம். இதற்கான ஆதாரம்:

السنن الكبرى للبيهقي

4859 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ هَانِئٍ، وَأَبُو مَنْصُورٍ مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ الْعَتَكِيُّ قَالَا: ثنا الْفَضْلُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُسَيَّبِ الشَّعْرَانِيُّ، ثنا أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ شَيْبَةَ الْحِزَامِيُّ، ثنا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: عَلِّمْنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وِتْرِي إِذَا رَفَعْتُ رَأْسِي وَلَمْ يَبْقَ إِلَّا السُّجُودُ: ” اللهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ

(கடைசி ரக்கஅத்தில் ருகூவிலிருந்து) தலையை உயர்த்தி ஸஜ்தா தவிர வேறு எதுவும் மிச்சமில்லாத நிலையில் நான் ஓதுவதற்காக அல்லாஹும்மஹ்தினீ….. எனும் குனூத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.

அறிவிப்பவர் : ஹஸன் (ரலி)

நூல்கள்: பைஹகீ, ஹாகிம்

கடைசி ரக்அத்தில் கிராஅத் ஓதி விட்டு ருகூவுக்குச் செல்வதற்கு முன்னரும் இந்த குனூத்தை ஓதலாம். இதற்கான ஆதாரம்:

سنن النسائي

1699 – أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، عَنْ سُفْيَانَ، عَنْ زُبَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِثَلَاثِ رَكَعَاتٍ، كَانَ يَقْرَأُ فِي الْأُولَى بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَفِي الثَّانِيَةِ بِقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَفِي الثَّالِثَةِ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَيَقْنُتُ قَبْلَ الرُّكُوعِ، فَإِذَا فَرَغَ، قَالَ عِنْدَ فَرَاغِهِ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ»، ثَلَاثَ مَرَّاتٍ يُطِيلُ فِي آخِرِهِنَّ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். முதல் ரக்அத்தில் ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா அத்தியாயத்தையும், இரண்டாம் ரக்அத்தில் குல் யா அய்யுஹல் காஃபிரூன் அத்தியாயத்தையும், மூன்றாம் ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். மேலும் ருகூவுக்கு முன்னர் குனூத் ஓதுவார்கள். வித்ரு தொழுது முடித்த பின் சுப்ஹானல் மலிகுல் குத்தூஸ் எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர் : உபை பின் கஅபு (ரலி)

நூல் : நஸாயீ

வித்ரு தொழுகை ஜமாஅத்தாக நடத்தினால் இமாம் குனூத் ஓதி மற்றவர்கள் ஆமீன் கூற ஆதாரம் இல்லை. ஒவ்வொருவரும் குனூத் ஓதுவதே சரியான கருத்தாகும்.