மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது

இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎

المعجم الكبير للطبراني

 5976- حَدَّثَنَا الْحَسَنُ بن عَلِيٍّ الْفَسَوِيُّ، حَدَّثَنَا خَلَفُ بن عَبْدِ الْحَمِيدِ السَّرَخْسِيُّ، حَدَّثَنَا أَبُو ‏الصَّبَّاحِ عَبْدُ الْغَفُورِ بن سَعِيدٍ الأَنْصَارِيُّ، عَنْ أَبِي هَاشِمٍ الرُّمَّانِيِّ، عَنْ زَاذَانَ، عَنْ سَلْمَانَ، عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ ‏وَسَلَّمَ، قَالَ:”ثَلاثَةٌ مِنَ الْجَاهِلِيَّةِ: الْفَخْرُ بِالأَحْسَابِ، وَالطَّعْنُ فِي الأَنْسَابِ، وَالنِّيَاحَةُ” .‏ 5980- وَبِإِسْنَادِهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:”مَنْ مَاتَ فِي أَحَدِ الْحَرَمَيْنِ اسْتَوْجَبَ ‏شَفَاعَتِي، وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الآمِنِينَ” .‏

‎(மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் ‎மரணிக்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை கட்டாயமாகி ‎விட்டது

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் ‎தப்ரானியின் அல்கபீர் (6/240) நூலில் உள்ளது.‎

இதன் அறிவிப்பாளர்களில் அப்துல் கபூர் பின் ஸஅது என்பார் ‎இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.‎

التلخيص الحبير

وفيه عبد الغفور3 بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ مَتْرُوكٌ وَمُتَّهَمٌ أَيْضًا

இவர் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டவர் என இப்னு ஹஜர் தல்கீஸ் நூலில் குறிப்பிடுகிறார்.

شعب الإيمان للبيهقي

 عبد الغفور هذا ضعيف

இந்த ஹதீஸை ஷுஅபுல் ஈமான் நூலில் பதிவு செய்துள்ள பைஹகீ அவர்கள் இது பலவீனமான ஹதீஸ் என்று குறிப்பிடுகிறார்.

وقال الهيثمي: وفيه عبد الغفور وهو متروك” المجمع

இவர் விடப்பட்டவர் என்று ஹைஸமீ குறிப்பிடுகிறார்.

وقال ابن حبان: كان ممن يضع الحديث على الثقات، لا يحل كتابة حديثه ولا الذكر عنه إلا على جهة التعجب.

இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்றும் இவரது ஹதீஸ்களை பதிவு செய்வது ஹலால் இல்லை என்றும் இப்னு ஹிப்பான் கூறுகிறார்

المعجم الأوسط

 5883 – لم يرو هذا الحديث عن زكريا بن أبي زائدة إلا محمد بن مسروق محمد بن علي بن مهدي ‏العطار الكوفي حدثنا محمد بن علي بن مهدي العطار الكوفي قال نا موسى بن عبد الرحمن المسروقي قال ثنا زيد بن ‏الحباب عن عبد الله بن المؤمل عن أبي الزبير عن جابر عن النبي صلى الله عليه و سلم قال من مات في أحد ‏الحرمين مكة أو المدينة بعث آمنا

இரண்டு புனிதத் தலங்களில் ஒன்றில் யார் மரணிக்கிறாரோ ‎அவர் கியாமத் நாளில் அச்சமற்றவராக எழுப்பப்படுவார்

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் ‎தப்ரானியின் அல்அவ்ஸத் நூலில் உள்ளது.‎

இதன் அறிவிப்பாளர்களில் அப்துல்லாஹ் பின் முஅம்மல் என்பார் இடம் பெற்றுள்ளனர். இவர் ‎பலவீனமானவர்.

مجمع الزوائد

 رواه الطبراني في الصغير والأوسط وفيه موسى بن عبد الرحمن المسروقي وقد ذكره ابن حبان في الثقات وفيه عبد الله بن المؤمل وثقه ابن حبان وغيره وضعفه أحمد وغيره وإسناده حسن.‎

அப்துல்லாஹ் பின் முஅம்மல் என்பார் பலவீனமானவர் என அஹ்மத் பின் ஹம்பல் உள்ளிட்ட அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இரண்டு புனிதத் தலங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்களின் எத்தனையோ எதிரிகள் மரணித்துள்ளனர். ‎முனாஃபிக்குகள் எனப்படும் வேடதாரிகள் பலரும் மதீனாவில் ‎தான் இறந்தனர்.‎

அது போல் எத்தனையோ நபித்தோழர்கள் இரண்டு புனிதத் ‎தலங்களை விட்டு வெளியேறி உலகின் பல பாகங்களிலும் ‎மரணித்தனர். நபித்தோழர்களில் பெரும்பான்மையினர் புனிதத் ‎தலங்களில் மரணிக்கவில்லை.‎

குறிப்பிட்ட இடத்தில் மரணமடைவது எவரது அதிகாரத்திலும், ‎விருப்பத்திலும் உள்ளது அல்ல. நல்லவர் கெட்டவர் என்ற ‎அடிப்படையில் மரணிக்கும் இடம் தீர்மானிக்கப்படுவதில்லை.‎

மேற்கண்ட காரணங்களால் இதன் பலவீனம் மேலும் ‎அதிகரிக்கின்றது.‎