குர்பானியில் கழிக்கப்பட வேண்டிய உறுப்புகள் என்ன ?

பினவரும் ஹதீஸ் குர்பானியில் சில பொருட்களைக் கழிக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ وَاصِلِ بْنِ أَبِي جَمِيلٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: ” كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا: الدَّمَ وَالْمَرَارَ وَالذَّكَرَ وَالْأُنْثَيَيْنِ وَالْحَيَا وَالْغُدَّةَ وَالْمَثَانَةَ “، قَالَ: “ وَكَانَ أَعْجَبَ الشَّاةِ إِلَيْهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقَدِّمُهَا

1.ஆண்குறி.2. பெண்குறி.3.இரண்டு விதைகள்.4 நீர்பை. 5.இரத்தம். 6.கட்டி.களலை. 7.பித்தப்பை. ஆடு மாடு ஒட்டகம் ஆகிய வற்றில் எந்தபிராணியாக இருந்தாலும் மேற்கண்ட உறுப்புகளை சாப்பிடக் கூடாது.

நூல். அல்முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக் 4ம் பாகம். சுனனுல் குப்ரா பைஹகீ. ஹதீஸ் எண். 19700

செய்கு நூர்தீன் , காயல்பட்டணம்

பதில்

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸின் முழு அறிவிப்பாளர் வரிசை இதுதான்:

السنن الكبرى للبيهقي

19700 – أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا عَلِيُّ بْنُ حَمْشَاذٍ , أَخْبَرَنِي يَزِيدُ بْنُ الْهَيْثَمِ، أَنَّ إِبْرَاهِيمَ بْنَ أَبِي اللَّيْثِ، حَدَّثَهُمْ ثنا الْأَشْجَعِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ وَاصِلِ بْنِ أَبِي جَمِيلٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: ” كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا: الدَّمَ وَالْمَرَارَ وَالذَّكَرَ وَالْأُنْثَيَيْنِ وَالْحَيَا وَالْغُدَّةَ وَالْمَثَانَةَ “، قَالَ: ” وَكَانَ أَعْجَبَ الشَّاةِ إِلَيْهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقَدِّمُهَا “،  هَذَا مُنْقَطِعٌ

நீங்கள் எடுத்துக்காட்டிய இந்தச் செய்தியை நபித்தோழர் அறிவிப்பதாகக் கூறப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு பொருட்களை விரும்ப மாட்டார்கள் என்று நபித்தோழரால் தான் சொல்ல முடியும். இதை முஜாஹித் என்பார் அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்லர். எனவே இது முர்ஸல் எனும் பலவீனமான செய்தியாகும்.

மேலும் இந்த செய்தியில் إِبْرَاهِيمَ بْنَ أَبِي اللَّيْثِ இபராஹீம் பின் அபில்லைஸ் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் இட்டுக்கட்டுபவர் என்றும் பொய்  சொல்பவர் என்றும் சந்தேகிக்கப்பட்டவர் ஆவார். இதன் காரணமாக இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்ற நிலையை அடைகிறது.

இது அல்லாமல் இன்னும் பல செய்திகளும் உள்ளன.

மேற்கண்ட அதே கருத்துடைய ஹதீஸ் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

المعجم الكبير للطبراني 

460- حَدَّثَنَا يَعْقُوبُ بن إِسْحَاقَ بن إِبْرَاهِيمَ بن عَبَّادِ بن الْعَوَّامِ الْوَاسِطِيُّ ، حَدَّثَنَا يَحْيَى بن عَبْدِ الْحَمِيدِ الْحِمَّانِيُّ ، نَا عَبْدُ الرَّحْمَنِ بن زَيْدِ بن أَسْلَمَ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَيْسَ عَلَى أَهْلِ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْشَةٌ فِي قُبُورِهِمْ ، وَلا مَنْشَرِهِمْ ، وَكَأَنِّي أَنْظُرُ إِلَى أَهْلِ لا إِلَهَ إِلا اللَّهُ وَهُمْ يَنْفُضُونَ التُّرَابَ عَنْ رُءُوسِهِمْ ، وَيَقُولُونَ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ 461- وَبِهِ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا : الْمَرَارَةَ ، وَالْمَثَانَةَ ، وَالْمحيَاةَ ، وَالذَّكَرَ ، وَالأُنْثَيَيْنِ ، وَالْغُدَّةَ ، وَالدَّمَ ، وَكَانَ أَحَبَّ الشَّاةِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقَدَّمُهَا ، قَالَ : وَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ ، فَأَقْبَلَ الْقَوْمُ يُلْقِمُونَهُ اللَّحْمَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ أَطْيَبَ اللَّحْمِ لَحْمُ الظَّهْرِ

இதை அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பார் தன் தந்தை வழியாக அறிவிக்கிறார். இவர் தந்தை வழியாக ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்பதால் இதுவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல.

ஹலாலான பிராணிகளில் இரத்தம் சானம் தவிர மற்ற அனைத்தும் உண்பதற்கும் ஹலால் ஆகும். குர்பானியில் பங்கிட்டுக் கொடுப்பதற்கும் ஹலால் ஆகும்.