8. சொர்க்கத்தில் பெண்களுக்குத் துணைகள் உண்டா?
“சொர்க்கத்தில் தூய்மையான பெண் துணைகள் உள்ளனர்” என்று இவ்வசனங்களில் (2:25, 3:15, 4:57, 36:56, 37:48, 38:52, 44:54, 52:20, 55:56, 55:70, 56:22, 56:35, 78:33) கூறப்படுகின்றது.
நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண் துணைகள் இல்லையா? என்ற கேள்வி இதில் எழும்.
இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் சொல்லிலக்கண விதியை அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்மொழி உள்ளிட்ட பல மொழிகளில் படர்க்கை ஒருமையில் மட்டுமே ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனிச் சொல்லமைப்புகள் உள்ளன. உதாரணமாக அவன் என்பது ஆணையும், அவள் என்பது பெண்ணையும் குறிக்கும்.
படர்க்கைப் பன்மையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு தமிழில் கிடையாது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக ‘அவர்கள்’ எனக் கூறுகிறோம்.
அரபுமொழியில் படர்க்கை ஒருமையில் மட்டுமின்றி படர்க்கைப் பன்மையிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.
அது போல் முன்னிலையில் பேசும் போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ‘நீ’ ‘நீங்கள்’ என்று கூறுகிறோம். தமிழ் மொழியில் இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது.
ஆனால் அரபுமொழியில் முன்னிலையாகப் பேசுவதற்கு இரு பாலருக்கும் தனித்தனி சொல்லமைப்புகள் உள்ளன.
தொழுங்கள் என்று தமிழ்மொழியில் கூறினால் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலரையும் குறிக்கும் சொல்லமைப்பு என்று புரிந்து கொள்வோம்.
ஆனால் அரபுமொழியில் இப்படி இரு பாலரையும் குறிக்க பொதுவான சொல்லமைப்பு இல்லை.
‘ஸல்லூ’ (தொழுங்கள்) என்று அரபுமொழியில் கூறினால் ஆண்களை நோக்கித் தொழச் சொல்லும் போது மட்டுமே இவ்வாறு கூறமுடியும்.
பெண்களை நோக்கி ‘தொழுங்கள்’ என்று கூறுவதாக இருந்தால் ‘ஸல்லீன’ எனக் கூற வேண்டும்.
அரபுமொழியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாகக் கட்டளை இடுவதாக இருந்தால் “ஆண்களே தொழுங்கள்! பெண்களே தொழுங்கள்” என்று ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாகக் கூற வேண்டும்.
திருக்குர்ஆனில் உள்ள அனைத்துமே ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது என்பதால் அனைத்துக் கட்டளைகளையும் இப்படி இரண்டிரண்டு தடவை கூற வேண்டிய நிலை இதனால் ஏற்படும்.
ஒவ்வொரு கட்டளையையும் இரண்டிரண்டு தடவை கூறினால் தற்போது உள்ள திருக்குர்ஆன் போல் இரு மடங்காக ஆகி விடும். மேலும் அரபு அல்லாத மொழியில் மாற்றம் செய்யும்போது இந்த நடை வெறுப்பை ஏற்படுத்தி விடும்.
சுருக்கமாகவும், எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அந்த மொழியில் இருந்து அன்னியப்பட்டு விடாமலும், ஆண்களையும், பெண்களையும் உள்ளடக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருக்குர்ஆன் ஒரு மாற்றுவழியைத் தேர்வு செய்துள்ளது.
அதாவது அனைத்துக் கட்டளைகளையும், அறிவுரைகளையும் ஆண்களைக் குறிக்கும் வகையில் பேசிவிட்டு, “ஆண்களுக்குச் சொன்ன அனைத்தும் பெண்களுக்கும் உள்ளன” என்று ஒன்றிரண்டு வசனங்களில் மட்டும் கூறுவது தான் அந்த வழிமுறை.
“ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?” என்று உம்மு ஸலமா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது.
நூல் : அஹ்மத் 25363
இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் 33:35 வசனத்தில் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சமமான தக்க பரிசுகள் உண்டு எனக் கூறப்படுகிறது. அதாவது ஆண்களுக்குக் கூறப்படும் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.
4:124 வசனத்தில் நல்லறம் செய்த ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
இதே போன்ற கருத்தில் திருக்குர்ஆனின் 3:195, 4:124, 16:97, 40:40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன.
ஆண்களும், பெண்களும் இறைவனுக்கு அஞ்சி நல்லறங்கள் செய்திருக்கும்போது, ஆண்களுக்கு மட்டும் கூடுதல் பரிசுகளை அல்லாஹ் வழங்க மாட்டான்.
மறுமையில் பரிசு வழங்கும் போது “அனைவரும் அதில் திருப்தி அடைவார்கள்” என்ற கருத்தை 5:119; 9:100; 22:59; 58:22; 88:9; 98:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. அனைவரும் என்பதில் ஆண்களைப் போலவே பெண்களும் அடங்குவார்கள்.
எனவே அல்லாஹ், ஆண்களுக்கு மட்டும் துணைவிகளைக் கொடுத்து விட்டு, பெண்களுக்குத் துணை இல்லாமல் விடமாட்டான்.
ஹூருல் ஈன்கள் மட்டுமின்றி சொர்க்கத்தில் இன்னும் ஏராளமான பாக்கியங்கள் வழங்கப்பட உள்ளன. அவற்றைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் போது ஆண்பாலாகவே கூறியிருக்கிறது.
2:82, 3:15, 3:136, 3:198, 4:13, 4:57, 4:122, 5:85, 5:119, 7:42, 9:22, 9:72, 9:89, 9:100, 10:26, 11:23, 11:108, 14:23, 18:108, 20:76, 21:102, 23:11, 25:16, 25:76, 29:58, 31:9, 39:73, 46:14, 48:5 57:12, 58:22, 64:9, 65:11, 98:8 ஆகிய வசனங்களில் சொர்க்கத்தில் நுழைந்தவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இந்த அனைத்து இடங்களிலும் காலிதூன் என்ற ஆண்பால் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. காலிதாத் என்ற பெண்பால் சொல் ஒரு இடத்தில் கூட பயன்படுத்தப்படவில்லை. ஆண்கள் மட்டும் தான் சொர்க்கத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று இதை யாரும் புரிந்து கொள்வதில்லை. ஆண்களுக்குச் சொல்லப்பட்ட அனைத்தும் பெண்களுக்கும் உரியது என்றே புரிந்து கொள்கிறார்கள்.
இறையச்சமுடையவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று கூறும் போது முத்தகீன் என்ற ஆண்பால் சொல்லைத் தான் திருக்குர்ஆன் 3:133, 13:35, 15:45, 16:30, 16:31, 25:15, 26:90, 28:83, 44:51, 50:31, 51:15, 52:17, 52:54, 54:55, 68:34 77:41 ஆகிய வசனங்களில் பயன்படுத்தியுள்ளது. பெண்பாலைக் குறிக்கும் முத்தகியாத் என்று ஒரு வசனத்தில் கூட சொல்லப்படவில்லை. இறையச்சமுடைய ஆண்களுக்கு மட்டும் தான் சொர்க்கம் என்று இதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.
அவர்களுக்கு சொர்க்கம் உண்டு எனக் கூறும் 3:136, 3:198, 5:65, 9:21, 9:111, 10:9, 13:23, 15:47, 16:31, 18:107, 19:62, 31:8, 32:19 33:44, 34:47, 36:57, 37:42, 38:50, 42:22 ஆகிய வசனங்களில் லஹும் என்று ஆண்பாலாகவே கூறப்பட்டுள்ளது. அதாவது ஆண்களாகிய அவர்களுக்கு என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு சொர்க்கத்தின் பாக்கியங்கள் இல்லை என்று யாரும் கூறுவதில்லை.
சொர்க்கவாசிகளின் முகம் வெண்மையாக இருக்கும் எனக் கூறும் 3:107 வசனத்தில் ஆண்களைக் குறிக்கும் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாலாறு, தேனாறு, மதுவாறு ஆகியவை சொர்க்கத்தில் உண்டு எனக் கூறும் 47:15 வசனத்தில் இவை ஆண்களுக்கு உரியதாகவே கூறப்பட்டுள்ளது.
தங்க ஆபரணங்கள், பட்டாடை ஆகியவை வழங்கப்படுவதாகவும், கட்டில்களில் சாய்ந்து இருப்பார்கள் என்றும் கூறும் 18:31, 22:23, 35:33, 43:71, 52:20, 55:54, 76:13, வசனங்களில் ஆண்களுக்கு வழங்கப்படுவதாகவே கூறப்பட்டுள்ளது.
மாளிகைகள், குவளைகள், பணிபுரியும் இளமை மாறா சிறுவர்கள், இறைச்சி, வெள்ளிப் பாத்திரம், வெள்ளிக் குவளை, கற்பூரம் கலந்த பானம், இஞ்சி கலந்த பானம், கட்டில்கள், கஸ்தூரியால் முத்திரையிடப்பட்ட பானம், நீரூற்றுக்கள், நிழல்கள், கனிகள் உள்ளிட்ட பாக்கியங்களைக் கூறும் 37:45, 38:51, 39:20, 43:73, 52:22, 52:23, 52:24, 56:16-21, 76:5, 76:15, 76:17, 76:19, 77:41, 83:23, 83:25 ஆகிய வசனங்களில் ஆண்பாலாகவே கூறப்பட்டுள்ளது. அதாவது நல்லறம் செய்த ஆண்கள் இதனை அனுபவிப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
சொர்க்கத்தின் எல்லா பாக்கியங்களும் ஆண்களுக்கு உரியது என்ற கருத்தைத் தரும் வகையில் திருக்குர்ஆன் கூறி இருப்பதால் இவை எதுவும் பெண்களுக்கு இல்லை என்று ஒரு அறிஞரும் கூறவில்லை.
ஆனால் ஹூருல் ஈன் குறித்து பேசும் போது மட்டும் ஆண்களுக்கு என்று தானே சொல்லப்பட்டுள்ளது. பெண்களுக்குத் துணை உண்டு என்று சொல்லப்பட்டுள்ளதா என்று கேட்கின்றனர். அப்படியானால் சொர்க்கத்தின் எல்லா இன்பங்களும் ஆண்களுக்கு உரியதாகத் தானே சொல்லப்பட்டுள்ளது. பெண்களுக்கு இல்லை என்று சொல்வீர்களா என்று கேட்டால் ஏற்கத்தக்க பதில் அவர்களிடம் இல்லை.
இவ்வுலகில் ஒரு பெண்ணுக்கு யார் கணவராக இருந்தாரோ அவரே சொர்க்கத்தில் அவருக்குக் கணவராக அமைவார் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு ஏற்கத்தக்க எந்தச் சான்றும் இல்லை.
கணவன் கெட்டவனாகவும், மனைவி நல்லவளாகவும் இருக்கும் போது என்ன நிலை? இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு இரு கணவர்களும் நல்லவர்களாக இருந்தால் அவள் யாருடன் சேர்க்கப்படுவாள்? என்று பல கேள்விகள் இக்கூற்றினால் எழும்.
“இங்கிருந்த துணையை விடச் சிறந்த துணையைக் கொடு” என்று இறந்தவருக்காகப் பிரார்த்திக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.
நூல் : முஸ்லிம் 1674, 1675, 1676
ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமின்றி அனைவருக்காகவும் இந்தப் பிரார்த்தனையைச் செய்வது நபிவழியாகும்.
இங்கிருப்பதை விடச் சிறந்த துணை ஆண்களுக்கும், பெண்களுக்கும் மறுமையில் உண்டு என்பதை இதிலிருந்து அறியலாம்.
எத்தனையோ கட்டளைகள் ஆண்களை மட்டும் குறிக்கும் வகையில் இருந்தாலும் அக்கட்டளைகள் பெண்களையும் குறிக்கும் என்று மேற்கண்ட வசனங்களைச் சான்றாகக் கொண்டு அறிந்து கொள்கிறோம்.
அது போலவே சொர்க்கத்தில் கிடைக்கும் ஜோடிகள் குறித்து ஆண்பாலாகக் கூறப்பட்டாலும் அது பெண்பாலுக்கும் பொருந்தும் என்று அதே வசனங்களைச் சான்றாகக் கொண்டு முடிவு செய்வதே ஏற்புடையதும், இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...